முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளர்களின் கட்டுப்பெட்டித்தனம்

"எல்லா வகையிலும் தற்கால எழுத்தாளர்கள் கட்டுப்பெட்டியாக இருக்கிறார்கள். உள்ளுக்குள் சுருங்கிப் போயிருக்கிறார்கள். (...)

சுந்தர ராமசாமியிடமிருந்துதான் இந்தக் கட்டுப்பெட்டித்தனம் எல்லாம் தொடங்குகிறது என்று நினைக்கிறேன். ஒரு உதாரணம் தருகிறேன். சுந்தர ராமசாமியின் நாவல் ஒன்றில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் வருகிறது. அதில் பார்வையாளர்களுக்கான படிக்கட்டுகள் இருக்கும் அல்லவா? அதில் ஒரு படிக்கட்டில் சிமென்ட் போடும்போது எழுதப்பட்ட ஒரு கெட்ட வார்த்தை இருந்தது என்று எழுதுகிறார் சு.ரா. அதைப் படித்தபோது எனக்கு இருபத்தைந்து வயது இருக்கும். அடப்பத்தாம்பசலிகளா என்று நினைத்துக்கொண்டேன். வார்த்தையில் என்னய்யா நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை? அது என்ன வார்த்தை என்றுதான் எழுதுங்களேன், தமிழின் கற்பு கெட்டுவிடுமா? (...)

நான் கேட்கிறேன், சல்மான் ருஷ்டியைப் போல், ஓர்ஹான் பாமுக்கைப் போல் நான் இருபது வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு தாங்குமா? அட, இவர்கள் தாங்குவார்களா?"

- சாரு நிவேதிதா, அருஞ்சொல் பேட்டியில்

# சாரு சொல்வதில் நிறைய உண்மை உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் சமகால தமிழ் படைப்பாளிகள் நான் அறிந்தவரையில் கட்டுப்பெட்டியானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தங்களது அந்தரங்க உலகில் உள்ள சேட்டைகள், கலகங்கள், மீறல்களை எழுத்தில் கொண்டு வருவதில்லை. எழுத்தில் - குறிப்பாக புனைவிலும் கட்டுரைகளிலும் - அவர்கள் உத்தமமான கணவர்களாக, கருணை மிக்க காதலர்களாக, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உன்னதமான மகனாக, தம் பிள்ளைகளுக்கு லட்சிய தகப்பனாக, சமூகக் கோபம் கொண்ட பிரஜைகளாக, ஒடுக்கப்பட்டோரைக் கண்டு ரத்தக்கண்ணீர் வடிப்பவர்களாக இருக்கிறார்கள். பார்க்க கறுப்புவெள்ளை படங்களின் சிவாஜி கணேசனைப் போலிருக்கிறார்கள்.
இவர்கள் அடுத்தவர்களின் கதையை எழுதும் போதும் ஒரு மெல்லிய ஒழுக்கவாதம் வருகிறது. புனைவில் தான் என்றில்லை, இலக்கிய கூட்டங்களில் சந்திக்கும் போது கூட ஜெண்டில்மேன்களாகவே பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், பார்க்கிறார்கள்.  இவர்கள் எப்போது தான் இயல்பாக இருப்பார்கள் எனத் தெரியவில்லை.

 இந்த செயற்கைத்தனம் சமூகவலைதளங்களின் காலத்தில் தோன்றிய படைப்பாளிகளின் சுபாவம் என நினைக்கிறேன். இவர்களுக்கு முந்தின இரு பத்தாண்டுகளில் தோன்றியவர்களிடம் இருந்த தான்-தோன்றித்தனத்தை, கவலைப்படாமல் பேசும், செயல்படும் போக்கை இவர்களிடம் அதிகமாக நான் காண்பதில்லை. இலக்கிய உலகம் திடீரென நல்லவர்களால், சிவாஜி கணேசன்களால், அரசியல் சரித்தனத்தால், ஒழுக்கவாதத்தால் நிரம்பி வழிகிறது. எம்.ஜி.ஆரைப் போலக் கூட ஒருத்தரும் இல்லை.

 கட்டுப்பெட்டித்தனமானது இவர்களிடம் இருந்தோ நம் மொழியில் இருந்தோ அல்ல, சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் கண்காணிப்பு உணர்வால் வருகிறது என நினைக்கிறேன். 

ஆம், விதிவிலக்குகளும் உண்டு.  ஆனால் இவர்கள் சமூகவலைதளத்திலே கலகக்காரர்களாக, இலக்கிய உலகில் உதிரிகளாக இருப்பவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...