நாவல் எழுதுவது பற்றி நண்பர் அபிலாஷ் சந்திரன் ஆன்லைன் வகுப்பு எடுக்கிறார். இப்போதெல்லாம் கவிதை, கதை எழுதுவது குறித்து கலைநிபுணர்கள் வகுப்பெடுக்கும் காலமாக இது இருக்கிறது. நல்லதுதான். ஆனால் படைப்பு மனங்கள் ஒர்க்ஷாப்புகளில் உருவாகாது என்பது என் அபிப்ராயம். அது அந்தரங்கமாக மெல்ல படரும் தீ!
ஆனால் படைப்பாளியாக முனையும்
ஒருவருக்கு ஒரு பாதையையும், வரைபடத்தையும்,இவை அளிக்கும்.
நாவல் ஒர்க்ஷாப்புகளில் நான் விரும்புவது, நாவல் எழுதுவது எப்படி என்பதை விட நாவலை எடிட் செய்வது எப்படி என்கிற ஒர்க்ஷாப்புகள்தான் இன்று பெரும் தேவையாய் இருக்கிறது.
ஒருவர் தன் புனைவின் சாத்தியத்தை கண்டறிந்து சன்னதத்துடன் எழுதி முடித்த பிறகு, அதிலிருக்கும் நிதானமின்மையை சீர்செய்யும் கட்டமைப்பையும், வாக்கியச் சிடுக்குகளை நீவிவிடும் லாகவத்தையும், சேகரித்த தகவல்களை கதையினுள் சொருகாமல் இயல்பாக வெளிப்படுத்த வேண்டிய இடங்களை கண்டடைதலையும் என Novel editing’ல் பல்வேறு நுட்பங்கள் இருக்கின்றன. இவைகளை நாவல் எழுதுபவரே அறிந்து கொள்ளும்போது மேலும் செறிவான படைப்பை அவர் அளிக்க முடியும்.
நண்பர் அபிலாஷ் அதையும் செய்வார் என்று நம்புகிறேன். Abilash Chandran’க்கு என் வாழ்த்துக்கள். நேரம் அமைந்தால் நானும் கலந்து கொள்வேன். நண்பர்களின் கவனத்திற்கு..
கட்டண விபரத்தை அறிவதற்கு abilashchandran70@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். அல்லது 9790929153 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Comments