முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ.பி.எல்லில் இரண்டு அற்புதங்கள்



ராஜஸ்தானுக்கும் ஹைதராபாதுக்கும் இடையிலான நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் என்ன ஆயிற்று, யார் வென்றார்கள் என்பதை விடுங்கள். அந்த கடைசி பந்து நோ பால் சந்தேகத்துக்குரியதா என்பதையும் விடுங்கள். என்னை அப்போட்டியில் வெகுவாக கவர்ந்தவர்கள் இருவர் - இருவருமே கால்சுழலர்கள்: ஒருவர் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் விவ்ராந்த் ஷர்மா. மற்றவர் நமக்கு நன்கு தெரிந்த ரவிச்சந்திரன் அஷ்வின்.
விவ்ராந்த் ஜம்மூ காஷ்மீரை சேர்ந்த இளம் வீரர். விவ்ராந்தின் பந்துவீச்சு ஸ்டைல் தென்னாப்பிரிக்காவின் முந்தைய கால்சுழலர் போல் ஆடம்ஸையும் நம்மூர் பியுஷ் சாவ்லாவையும் கலந்ததைப் போல் இருக்கிறது. நேற்றைய போட்டியில் இவர் மார்க்கெண்டேவை விட நன்றாக தனக்கு அளிக்கப்பட்ட களத்தடுப்புக்கு ஏற்ப வீசினார். ஒரு அரைக்குழிப் பந்தை போட்டார் என்றாலும் அடிவாங்கியதும் கலங்காமல் திரும்பவும் தன் களத்துக்கு ஏற்ப ஆப் ஸ்டம்புக்கு வெளியில் தொடர்ந்து வீசினார். ஒரு கூக்ளி போடக் கூட முயலவில்லை. அது மட்டுமல்ல ஒரே நீளத்தில் - short of the length அல்லது length - இல் தொடர்ந்து வீசினார். ஒன்றிரண்டு முழுநீளப் பந்துகளை வீசுவோம் என்றெல்லாம் குழப்பவில்லை. எனக்கு இந்த தெளிவான அணுகுமுறை பிடித்திருந்தது. ஆள் குள்ளமென்றாலும் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகிறது. இவரது கூக்ளியும் சிறப்பானது என்பதை ஒரு உள்ளூர் போட்டியில் அவரது பந்துவீச்சை கவனிக்கையில் கண்டேன்.
விவ்ராந்த் ஒரு மேல் மத்திய வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அண்ணனும் ஒரு வேகப்பந்து வீச்சாளர். இவரது தந்தை ஒரு ரசாயன நிறுவனத்தை நடத்தி வந்தார். அவர் அண்மையில் இறந்த பின்னர் தனது அண்ணனே குடும்பத்தின் பொறுப்பை எடுத்து வேலை செய்து தன்னை கிரிக்கெட் ஆட ஊக்கப்படுத்தியதாக விவ்ராந்த் சொல்லி இருக்கிறார். ஐ.பி.எல் ஏலத்தின் போது 2.6 கோடிக்கு இவர் வாங்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரே நாளில் இவரது வாழ்க்கை மாறிவிட்டது. இவ்வளவு கவனம் இவருக்கு கிடைக்க ஒரு முக்கிய காரணம் அவர் ஒரு கால்சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது - இது ஒரு அரிய சேர்க்கையாகும். பெரும்பாலான மட்டையாளர்கள் ஆப் ஸ்பின் அல்லது இடதுகை ஸ்பின் போடுவார்கள். மிக மிக அரிதாகவே கால்சுழல் போடுவார்கள், அப்படி வீசினாலும் அதில் கட்டுப்பாடு இராது. கால்சுழல் ஆல்ரவுண்டர்களில் உலகம் முழுக்க பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களே அதிகம் - ஹசரங்காவைப் போல. ஒரு கால்சுழல் மட்டையாட்ட ஆல்ரவுண்டர் தனிச்சிறப்பான வரவாக இருப்பார். ஆல்ரவுண்டர்களில் மிதவேகப்பந்து வீசக் கூடியவர்களுக்கு அடுத்தபடியாக கால்சுழல் ஆல்ரவுண்டர்களுக்கு ஐ.பி.எல்லிலும் தேசிய போட்டிகளிலும் கணிசமான மதிப்பு கிடைக்கும். அவ்விதத்தில், இந்த விவ்ராந்த் தன் பந்துவீச்சில் மேலும் சற்று பயிற்சி எடுத்து மெருகேற்றினால், கூடவே தன் உடற்தகுதியை மேம்படுத்தினால் (சிறுவயது போட்டிகளில் ஆள் பார்க்க உருளைக்கிழங்கைப் போல இருக்கிறார் என்பதால் இவருக்கு இயல்பாகவே வலுவான உடலமைப்பு இல்லை என கணிக்கிறேன்) ஒருநாள் இந்திய அணிக்காக ஆடுவார் என கணிக்கிறேன்.
வரக்கூடிய போட்டிகளில் நான் விவ்ராந்தின் மட்டையாட்டத்தை ஊன்றி கவனிப்பேன்.
அடுத்து நம் அஷ்வின். நேற்றைய போட்டியில் அவர் வலதுகை மட்டையாளர்களுக்கும் இடதுகை மட்டையாளர்களுக்கும் பந்து உள்ளே வருவதைப் போல drift செய்து வெளியே கொண்டு போனதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. அஷ்வின் ஐ.பி.எல் போட்டிக்குள் ஒரு தனி போட்டியாக, ஒரு தனி ஆட்டமாக தன் பந்துவீச்சை மாற்றக் கூடியவர். அவர் மட்டையாளரை எப்படி செட் செய்து தூக்குகிறார் என்பதைப் பார்க்க ஷேன் வார்ன் நினைவுக்கு வருவார். நேற்று அவர் அபிஷேக் ஷர்மாவை அவுட் செய்தது அப்படியான ஒரு கிளாசிக் தருணம். கடைசி ஓவரைக் கூட சந்தீப் ஷர்மாவுக்குப் பதில் அவர் - ஆப் பக்கத்தில் களத்தடுப்பாளர்களை அதிகமாக நிறுத்தி - floaterகளை வீசியிருந்தால் வென்றளித்திருப்பார் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...