முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்ட் சாமியார்களின் பின்னுள்ள கறுப்புச் சந்தை மோசடியும் அவர்களை ஆதரிக்கும் கட்சித் தலைமைகளும்

ஏன் எனும் கேள்வி வேண்டாம், எப்படி எனக் கேட்போம்

கல்ட் சாமியார்கள் நாம் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் நவீன பொருளாதார மாற்றங்களின் கலாச்சார முகங்கள். முக்கியமாக மிகுதியான லாபம், முறையற்ற லாபத்தை கணக்கு காட்டாமல் பதுக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவர்கள். அதற்காகவே சாமியார்கள் மட்டும் எந்த கணக்கும் காட்டாமல் பணம் வைத்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது (இந்தியாவின் எல்லா மத சாமியார்களும் இதில் வருவார்கள்.) அதனாலே சாமியார்கள் பூஜ்யத்தில் இருந்து ஒரு சில ஆண்டுகளில் கோடானு கோடி சொத்துக்களுக்கு அதிபதியாகி அதைக்கொண்டு ஊரையே வளைத்துப் போட்டு சமூகப்பண்பாட்டு அதிகாரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். ஊடகங்கள், பெருவணிகர்கள், தலைவர்கள் என எல்லாருக்கும் இவர்கள் தேவைப்படும் சூட்சுமம் இதுவே. நாம் இதை பொதுமக்க்ளின் ஏதோ ஒரு உளவியல் தேவையை நிறைவேற்ற வந்தவர்கள் எனும் கணக்கில் இவர்களை நியாயப்படுத்துவது உண்மையை பார்க்க விரும்பாமை மட்டுமே. இதைப் பண்பாட்டு  உளவியல் ரீதியாக, சமூகநீதி கிரீம் பன்களைக் கொண்டு சிந்திப்பது பொய்யை தித்திக்க வைக்கும் உத்தி மட்டுமே.
 கல்ட் சாமியார்கள் ஒரு பொருளாதார புற்றுநோய். நான் ஏற்கனவே இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். என் பிளாகில் உள்ளது. படித்துப் பாருங்கள்.

நாம் கேட்க வேண்டியது சட்டத்தை மாற்றுங்கள், ஒன்று சாமியார்களுக்கு யாரும் கணக்கில்லாமல் நிதியளிக்கக் கூடாது, அஞ்சு பைசா என்றாலும் அதற்கு கணக்கு காட்ட வேண்டும் என்பது. அதை விட சிறப்பு இச்சாமியார்கள் ஓரளவுக்கு மேல் நிதியளிப்பு வழி சொத்துக்களைப் பெறக் கூடாது, அதை வைத்து வணிக நடவடிக்கைகளில், நிறுவனமயமாக்கலில் ஈடுபடக் கூடாது என சட்டம் வர வேண்டும். அல்லாவிடில் நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கும் வரி கட்டாமல் கணக்கு காட்டாமல் பணத்தை சம்பாதிக்கும் உரிமையைக் கொடுங்கள். எனில் வளர்ச்சி கீழிருந்து மேலாக வரும். 

ஏனோ இந்த சட்டம் சார்ந்த மோசடியை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. மோசடியைக் கொண்டு வளர்ந்து சாம்ராஜ்ஜியம் ஆன சாமியார்களை அரசு அங்கீகரிக்கலாமா எனக் குதிக்கிறார்கள். அட, முதலில் உங்கள் சட்டம் ஏன் அங்கீகரிக்கிறது எனக் கேளுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...