ஒரு நாவலை எழுதும் போது நீங்கள் உங்கள் மொத்த வாழ்வையும் அதன் வழியாக எடுத்து வைக்கிறீர்கள். அல்லது ஒரு புதிய உலகை அதன் நிலம், காலம், மனிதர்களுடன் படைத்து அதற்கு உயிர்கொடுக்கிறீர்கள். அந்த தனி பிரபஞ்சத்துடன் பயணிக்கிறீர்கள். இதுவே நாவல் எனும் வடிவத்தின் தனித்துவம், நாவலை எழுதுவது உங்களை படைப்புக் கடவுள் ஆக்குகிறது. அர்த்தமில்லாத இந்த உலகில் நீங்கள் வாழ்வின் அர்த்தத்தை உருவாக்குகிறீர்கள். பெரிய துயரத்தை, தனிமையை, போதாமையை நீங்கள் நாவலின் ஊடாக கடக்க முடிகிறது. நீங்கள் உங்களுக்கும் சமூகத்துக்கும் உளவியலாளரைப் போல, தத்துவவாதியைப் போல நடந்து கொள்கிறீர்கள். அப்படியான வடிவத்தைக் கையாள ஒரு தகுதியை நீங்கள் பயிற்சியின் வழி வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ‘நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்’ வகுப்பில் இணையுங்கள், உங்கள் நாவல் வெளிவர முதல் அடியை எடுத்து வையுங்கள்.
தொடர்புக்கு 9790929153
Comments