Skip to main content

Posts

Showing posts from December, 2024

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

"நிழல் பொம்மை" நாவலின் துவக்கம்

  அன்புள்ள பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழு உறுப்பினர்களே, என் மீதான விசாரணை கடந்த மூன்று வாரங்களாக நடந்து வருகிறது. நான் முதலில் இதைக் குறித்து மிகுந்த பயம் கொண்டிருந்தேன். ஆனால் தொடங்கிய பின்பே நான் இதை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன் எனப் புரிந்தது. விசாரணை அரங்குக்குள் வரும்போது என் உடல் மெல்ல நடுங்கியது. தன்னிச்சையாகத்தான். என் கைகால்களில் ஏற்பட்ட நடுக்கம் என் குரலையும் பற்றிக்கொண்டது. அச்சத்தினால் வரும் நடுக்கமல்ல. பரவசத்தினால் வரும் நடுக்கம். நான் விசாரணைக் குழுவினரிடம் அல்ல கடவுளிடம் அழைத்துச் செல்லப்படுகிறேன் என்றே உணர்ந்தேன். இதுவரை நான் கோயில்களிலும், மதநூல்களிலும், தத்துவங்களிலும்கூட கடவுளைக் கண்டதில்லை. என் வாழ்க்கையின் தேடல் கடவுளைத் தேடுவதிலேயே இயல்பாக ஆரம்பித்தது. உங்கள் முன்வந்து நின்றபோது நான் கைகளைக் கூப்பி பேச்சற்று நின்றேன். நீங்கள் என்னை நகர சொன்னீர்கள். அப்போதுதான் ஏன் விழுந்து கும்பிடவில்லை என்பது எனக்கு உறைத்தது. நான் தரையில் குப்புற விழுந்திட முனைந்தபோது சிலர் வந்து என்னை அழைத்து ஓரமாக நிற்க வைத்தார்கள். மெல்லமெல்ல நீங்கள் என்னிடம் சில சிக்க...

காலமே நாம் தானே

காலத்தை விடப் பெரிய சொத்து இல்லை. அதைத் திரும்பக் கையளிப்பதே ஒரு ஆண்டின் முடிவு என்று தோன்றுகிறது. யாருக்கு கொடுக்கிறோம் எனத் தெரியவில்லை. ஆனால் கடனாகப் பெற்ற ஒன்றைத் திரும்பக் கொடுக்கிறோம். நன்றாக இருந்தது, இல்லை, ஆனால் என்னுடையது அல்ல, வைத்துக்கொள் என்று கொடுக்கிறோம். நமக்கு காலத்தைத் தந்த அந்த மானுட இருப்புக்கு நன்றி. அது நாமே தான் என்பதால் நமக்கு நன்றி. புத்தாண்டை வாழ்த்தும்போது நம்மை நாமே கட்டிக்கொண்டு விடைபெறுகிறோம். காலத்தினுள் இருக்கிறோம், நமக்குள் இருக்கிறோம். காலத்தில் இருந்து காலத்துக்குச் செல்கிறோம். நமக்குள் இருந்து நமக்குள் செல்கிறோம். புத்தாண்டு வாழ்த்துகள். இன்றும் நமதே! நாளையும் நமதே!

புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டு என்றால் புதிய வாய்ப்புகள், தீர்வுகள், மேம்பாடு குறித்த நம்பிக்கை. எனக்கு அதனாலே புத்தாண்டுக்கு முந்தின நாளென்றால் மிகவும் பிடிக்கும். நடைமுறை வாழ்வு குறித்து சில தீர்க்கமான முடிவுகளை வரும் ஆண்டு நிறைவேற்றப் போகிறேன். முன்பு எவ்வளவு குறைந்தபட்ச வசதிகள் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது. மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறது என்று நம்பினேன். புறவாழ்வின் தூண்டுதல்கள் என்னைத் தொடவேயில்லை. ஆனால் இப்போது புறவாழ்வு மிகவும் அலுப்பூட்டுகிறது. அதனாலே அதை மாற்றுவதற்கு 2025ஐ பெரிதும் எதிர்பார்த்திருக்கிறேன். 2025க்குள் இரண்டு நாவல்களை முடிக்கும் நம்பிக்கை இருக்கிறது - ஒன்று "கறுப்பு தினம்". இன்னொன்று "ஒரு முடிவற்ற துப்பறியும் கதை". அபுனைவில் "ஆண் ஏன் அடிமையானான்?" எனும் புத்தகம் ஒன்றும் 2025க்கான என் திட்டத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு நான் செய்த தவறு பணம் குறித்த கவலைகளை என்னைத் தின்ன அனுமதித்தது. என்னதான் முயன்றாலும் சில விசயங்களை மாற்ற முடியாது எனும்போது நம் கட்டுக்குள் இருக்கும் எழுத்தில் அதிக கவனம் அளித்து உணர்வுகளைக் குவிப்பது கூடுதல் நிறைவை, மகிழ்ச்ச...

மடியில் விழுந்த வாய்ப்பைத் தவற விட்ட இந்திய அணி

ஆஸ்திரேலியா இன்றைய நாளின் கடைசி அரைமணி நேரத்தில் டிக்ளேர் பண்ணி பந்துவசியிருந்தால் ரோஹித்தையும், எண் 3இல் வரக்கூடிய நைட் வாட்ச் மேனையும் தூக்கியிருக்கலாம். ஆட்டம் ரொம்ப சுவாரஸ்யமாகப் போயிருக்கும். ஆனால் அவர்கள் ஸ்டார்க்குக்கு காயமுற்றிருப்பதால் கமின்ஸையும், போலாண்டையும் வைத்து வீசும் நிலைமையில் இருப்பதாலும், லயனுக்கு பந்து திரும்பவில்லை என்பதாலும், ஆடுதளம் முதல் 50 ஓவர்களுக்கு மட்டையாட சுமாராகவும், அதன் பிறகு வெகு எளிதாகவும் இருப்பதால் இந்தியாவுக்கு 300 இலக்கைத் தர விரும்பவில்லை. லயனும் போலண்டும் மரண கட்டை வைத்திட அவர்களையே வீழ்த்த முடியவில்லை எனும்போது ஆடுதளம் எவ்வளவு தட்டையாகியிருக்கிறது என்று தெரியும். இந்தியா மட்டையாடும்போது கூட ரோஹித், பண்ட், ஜெய்ஸ்வால், கோலி ஆகியோர் விக்கெட்டுகளை அள்ளி வீசியிருக்காவிடில் அவர்களும் 450ஐ தாண்டியிருப்பார்கள். இந்த ஆடுதளம் நினைத்தபடி மேலும் கீழுமாக பவுன்ஸ் கொள்ளவோ உடையவோ இல்லை, திரும்பவும் இல்லை. மழை அல்லது சீதோஷ்ண நிலை காரணமாக அது போதுமானபடிக்கு காயவில்லை, கீழ் அடுக்குகள் உறுதியாக உள்ளன என நினைக்கிறேன். ஆடுதள அமைப்பாளர் சிறிது புற்களை விட்டுவைத்திரு...

"நிழல் பொம்மை" நாவலை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்கு

  சென்னை புத்தகக் கண்காட்சி 2025 வெளியீடு -44 ஸ்டால் எண் 540,541 *** நிழல் பொம்மை ஆர் அபிலாஷ் *** ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குள்ளன் தன்னை மிகுந்த உயரமானவனாக, உலகின் மிகப்பெரியவனாக, அதிமனிதனாகக் கருத ஆரம்பிக்கிறான். அது எதிர்பாலினத்துடனான அவனது உறவுகளில், அவனது அறமதிப்பீடுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதன்பிறகு அவனுக்கு என்னவாகிறது என்பதே இந்நாவலின் ஒற்றைவரி. சர்வாதிகாரம் எங்கோ அரசியல் தளத்தில் சிறைக்கொட்டடியிலோ காவல்துறையினரின் துப்பாக்கி முனையிலோ அதிகார மட்டத்திலோ நிகழ்வதல்ல, அது நமது அன்றாட வாழ்வினுள், அந்தரங்க நடத்தையில், சிந்தனையில் நுணுக்கமாக செயல்படுவது என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது. அன்பின், காதலின், கசப்பின், சுரண்டலின் அரசியலைப் பேசுகிறது. அரசியலையும் அதிகாரத்தையும் தத்துவத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து பாலியல் ஒழுக்கத்தை விசாரிப்பதன் வழியாக தமிழில் வெளிவந்த நாவல்களில் தனித்துவமானதாகிறது.

நிதீஷ் குமார் ரெட்டியும் மிச்ச அணியும்

  நிதீஷ் குமார் ரெட்டி கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஸ்டார்தான் - அவரது நிதானம், பின்னங்கால் ஷாட்கள், அம்பத்தி ராயுடு பாணியில் மட்டையைப் பிடித்து தடுக்கும், அடிக்கும் நளினம், பந்துக்கு சில மைக்ரோ நொடிகள் முன்பே தயாராகும் திறமை, கைகள் பந்தைச் சந்திக்கும் - கிட்டத்தட்ட தோனியிடம் கண்ட - வேகம் என பல விசயங்கள் இன்றைய சதத்தில் கவர்ந்தன. அவரைப் பார்க்க 28 வயதான வீரரின் முதிர்ச்சி தெரிகிறது. 21 வயதைப் போன்றே இல்லை. அவர் சதம் அடித்தபின்னர் ஒரு காலை மடித்து அமர்ந்து பொறுமையாக தலைக்கவசத்தை மட்டை மீது வைத்து அழகு பார்த்து கையை உயர்த்தி கொண்டாடியது கவித்துவமாக இருந்தது. ஏதோ சீரியல் கில்லர் தன் வசமுள்ள எலும்புக் கூட்டை ஒழுங்குபடுத்திப் பார்ப்பதைப் போல அல்லது மனத்தை ஒருமுகப்படுத்தி நிதானமாக இரு என அவர் தனக்கே சொல்லிக்கொள்வதைப் போல. இன்னொரு பக்கம், நிதீஷ் குமாரின் இந்த பொறுமை ரிஷப் பண்டிடம் இருந்தால் அவர் இந்நேரம் கூடுதலாக பத்து சதங்கள் எடுத்திருப்பார். டி20யில் கேப்டன் கூட ஆகியிருப்பார். கடந்த நியுசிலாந்து தொடரில் பண்ட் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆடினார். ஆனால் அப்போதே அவர் தன் உடற்தகுதியிலும், விளைவாக க...

அண்ணாமலையின் ஊடக சந்திப்பு

  இந்த ஊடக சந்திப்பு ரொம்ப வேடிக்கையாக, ஜாலியாக இருந்தது. எட்டு வருடங்கள் காவல்துறையில் குப்பை கொட்டினேன் என்கிறார், தேசியக் கட்சியில் மாநிலத் தலைவராக நான் ஏன் குப்பை கொட்டவேண்டும் என்கிறார். "ரோட்டுக்கு வந்து போராட்டம் பண்ணினால் அப்படியே ஆயிரம் போலீசை அனுப்பி அமுக்கி கல்யாண மண்டபத்தில வச்சிருவீங்க. இனிமேல் அப்படிப் போராட்டம் பண்ண நாங்கள் தயாராக இல்லை, போராட்டம் பண்ணாத்தானே அரெஸ்ட் பண்ணுவீங்க?" என்று அவர் கேட்டபோது நான் சிரித்துவிட்டேன். நூதனமாக ஒரு புதிய உத்தியை அறிவித்தார், "எல்லா தொண்டர்களும் தம் வீட்டுக்கு முன் நின்று போராடுவார்கள்". வீட்டுக்கு முன்னால் போய் நிற்பதெல்லாம் போராட்டமா? வீட்டுக்கு வெளியே வராமால் ஒருவரால் வீட்டுக்குள்ளேயா இருக்க முடியும்? எத்தனை பேர் தினமும் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களையும் போராட்டக்காரர்களையும் மக்கள் எப்படி கண்டுகொள்வார்கள்? அப்படியே எதாவது பதாகையைப் பிடித்து செல்பி எடுத்தாலும் அது ஏதோ சாதா செல்பியைப் போலத்தான் இருக்கும். அதெல்லாம் போராட்டமா? தலைகீழாக நின்று போராடினால் கூட வித்தியாசமாக இருக்கும். எளிய மக்கள் எப்படியெ...

வேண்டுகோள்

  நாம்தாம் அண்ணாமலையின் சாட்டையடிப் போராட்டத்தைப் பார்த்து சிரிக்கிறோம். நமக்கு அவர் மீம் மெட்டீரியல். ஆனால் வடக்கத்தியர்களுக்கு இதன் பின்னணி, அர்த்தம் புரியாது. அவர்கள் இதை மிக சீரியஸாக பார்த்து நெருப்பைப் பறக்கவிடுவார்கள். குறிப்பாக தில்லியில் ஷாவும் மோடியும் மிகவும் இம்பிரெஸ் ஆகிவிடுவார். நாம் இமயமலை, கங்கா தீரத்தில் வீடியோ ஷூட் பண்ணியிருக்கிறோம், இவர் சாட்டையால் அடிப்பது, தலைகீழாக குதிப்பது என என்னென்னமோ பண்ணுகிறாரே என்று மூக்கில் விரலை வைப்பார். எத்தனையோ தலைவர்களை தமிழ்நாட்டுத் தலைமைக்கு அனுப்புகிறோம், இவர் யாரும் பண்ணாத வித்தையெல்லாம் காட்டுகிறாரே என்று வியந்து போவார். அண்ணாமலையின் தேசிய மைலேஜ் நிச்சயமாக ஏறும். என்னிடம் கேட்டால் இதை அவர் வாராவாரம் செய்யவேண்டும் - மலை மீதிருந்து குதிக்கவேண்டும், யானையை தன் உடல்மேல் நடக்கவிட வேண்டும், பல்லால் லாரியைக் கட்டி இழுக்கவேண்டும். இப்படி எவ்வளவோ செய்யலாம். ஜாலியாக இருக்கும். தில்லியிலும் தலைவர்கள் ராகுல் காந்தியை எதிர்த்து ஆயிரம் ஆணிகளைத் தின்பது, கார் பேட்டரியை முழுங்குவது, ஆயிரம் டியூப் லைட்களை மெல்லாமலே கடிக்காமலே முழுசாக முழுங்குவத...

படைப்பாக்கத்தின் நெறி

நிழல் பொம்மை நாவலின் நாயகனான ரகுவின் உடலை எழுத எனது நண்பர் ஒருவரே ஆரம்பத் தூண்டுதல். அவருடன் பழகும்போது நான் - என் வழக்கப்படி - என்னையறியாமலே உற்றுகவனித்து வந்தேன். அதேநேரம் ரகுவின் பாத்திரத்தை எழுதும்போது அவரது வாழ்க்கையில், ஆளுமையிலிருந்து எதையும் இதில் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நாவலை முடித்தபின்னர் அவரிடம் இதைத் தெரிவித்து “இவர் நீங்களல்லர்” என்றும் தெரிவித்தேன். அவர் எதிர்காலத்தில் இதன் மொழியாக்கத்தைப் படித்தோ இதைப்பற்றிக் கேள்விப்பட்டோ என்னைத் தவறாக கருதக்கூடாது என்பதே என் கவலையாக இருந்தது. ஏனென்றால் யாரையும் பார்த்து பதிவு செய்வது படைப்பாக்கம் அல்ல. என்னையும் தான். ஒரு மாற்றுத்திறனாளியின் உடலை உருவகமாக பயன்படுத்துவது தவிர்க்க முடியாத விபத்தாக இலக்கியத்தில் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் என்னுடைய முதல் நாவலான “கால்களில்” நான் அதைக் கவனமாகத் தவிர்த்தேன். இந்நாவலில் அவ்வாறு தொனிக்காமல் இருக்கும் நோக்கத்திலேயே தன்னிலையில் எழுதினேன். ரகுவின் பார்வையிலிருந்து வாசகர்கள் உலகை நோக்கவேண்டும், தமக்குள் அவனைப் போன்ற ஒருவரும் உள்ளதை உணரவ...

ஏரோப்பிளேன் வேணுமா?

என்னுடைய நூல்கள் இரண்டும் இப்புத்தகக் கண்காட்சியில் தாமதமாகவே வருவதால் நானும் தாமதமாகவே வருவேன் என நினைக்கிறேன். வந்தால் நாலு படைப்பாளிகளையும் சில வாசகர்களையும் காண்பது உற்சாகமூட்டும்தான். ஆனால் வருடாவருடம் பேருந்தில் அலுங்கிக் குலுங்கி நசுங்குவது போல சின்ன பெட்டிக்குள் உறங்கிக்கொண்டு வரவேண்டும், எதாவதொரு பாடாவதி லாட்ஜில் தங்கவேண்டும் என்று நினைத்தாலே கசப்பாக இருக்கிறது. விடுப்பெடுக்க வேறு நிறைய எத்தனம் தேவை. அலுப்பாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய?  கடந்த சில மாதங்களில் மட்டுமே இரண்டு புத்தக விழாக்கள் பெங்களூரில் நடந்துவிட்டன. என்னையோ என் வயதையொத்த பிற பெங்களூர் வாழ் எழுத்தாளர்களையோ ஒருங்கிணைப்பாளர்கள் அழைக்கவில்லை. வருடாவருடம் ஒரே குழுவைத்தான் அழைப்பார்கள். நாங்கள் இந்த நகரத்தில் இன்னொரு இருபதாண்டுகள் வாழ்ந்தால் எங்களைத் தொடர்ந்து அழைப்பார்கள், அப்போது எழுதும் இளைஞர்களை விட்டுவிடுவார்கள். சரி மூத்த எழுத்தாளர்களிலும் பலதரப்பட்டவர்களை அழைக்க மாட்டார்கள். ஒரே தெருக்காரர்கள் திரும்பத் திரும்ப அப்பகுதியில் நடக்கும் கல்யாணத்துக்குப் போவதைப் போலவே நடக்கும். மூன்று சட்டைப் பேண்டுகளை பெட்டி...

எம்.டி வாசுதேவன் நாயர் - அஞ்சலி

எம்.டி வாசுதேவன் நாயர் - அஞ்சலி எனக்கு மலையாளத்தில் வாசிக்கத் தெரியாது என்பதால் எம்.டியின் சிறுகதைகளையும் நாவல்களையும் பெரும்பாலும் மொழிபெயர்ப்பிலோ ஒலிநூலாகவோ மட்டுமே கேட்டிருக்கிறேன். சில நூல்களுக்கு தமிழில் விமர்சனக் குறிப்பும் எழுதினேன். இளமையில் அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது - முதல் காரணம் அவருடைய பாத்திரங்களில் எதாவது ஒரு பாரித்த இழப்புணர்வு இருந்தது. அவர் பீமனை எழுதினாலும் சற்றே சாதாரணமானவராக, குறைகள் கொண்ட மத்திய வர்க்க ஆளின் மனநிலையுடனே படைப்பார்கள். சின்ன பயமொன்று அவரது பாத்திரங்களை எப்போதும் ஆட்கொண்டிருக்கும். அது அவர்களை பலவீனர்களாக்கும். அவரது தறவாட்டு வீடும், அங்கு வாழும் மக்களும் கூட எப்போது வேண்டுமானாலும் மூழ்கலாம் எனும் கப்பலில் செல்லும் பயணிகளைப் போன்றே உணர்வார்கள். எல்லாருமே தப்பித்து ஓடிக்கொண்டிருப்பர். சமூகச் சூழலில் இருந்து, அவமானத்தில் இருந்து, கவலையில், வறுமையில், விதியில் இருந்து. துன்பியல் நாயகர்களின் பலவீனங்களும், இன்பியல் நாயகர்களின் சாதாரணத்தன்மையும் அவரது நாயகர்களிடம் கலந்திருக்கும். அதாவது வேடிக்கையான ஒருவர் நம்மை அழவைப்பதைப் போன்றே அவர்களது நடத்தையி...

கோன்ஸ்டாஸிடம் சிக்கிக் கொண்ட பும்ரா

  கிரேக்க எழுத்தாளரைப் போன்ற பெயர் கொண்ட சேம் கோன்ஸ்டாஸின் உள்ளூர் போட்டி ஆட்டங்களை நேற்று பார்த்தபோதே அவர் இதைத்தான் இன்று பும்ரா, சிராஜுக்கு எதிராகப் பண்ணப்போகிறார் என எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் அவர் அதில் வெற்றிபெறுவார் என நான் ஊகிக்கவில்லை. துவக்க மட்டையாளராக அவருக்கு சரியான காலாட்டம் இல்லை, உள்ளே வ ரும் பந்துக்கு போதுமான தடுப்பாட்டம் இல்லை. அவர் ஒன்று முன்னங்காலுக்கு வந்து சமநிலைத் தவறி ஸ்டம்புக்கு குறுக்கே சரிந்து LBW ஆவார் அல்லது பந்தை மிஸ் பண்ணி பவுல்ட் ஆவார். ஆகையால் அவரது சிறந்த உத்தி அவரது வலிமையான டி20 ஷாட்களை - ரிவர்ஸ் ஸ்கூப், ராம்ப் - ஆடுவதுதான். பந்துவீச்சாளர் இன்னும் முழுநீளத்தில் வீசினால் அவர் ஸ்டம்புகளை விட்டு ஆப் பக்கத்தில் கவருக்கு மேல் அடிப்பார் அல்லது மிட் விக்கெட்டுக்கு அடிப்பார். அடுத்து பந்து வீச்சாளர் அரைக்குழியாகப் போட்டால் பின்னால் சென்று பைன் லெக், பேக்வெர்ட் ஸ்கொயர் லெக்குக்கு புல் / ஹூக் அடிப்பார். சும்மா அழகுக்கு நேராக டிரைவ் செய்யவும் செய்வார். ஒட்டுமொத்தமாக 5-6 ஷாட்களை வைத்து ஓடும் வண்டியே சேம் கோன்ஸ்டாஸ். என்ன பிரச்சினை என்றால் இதை வேகவீச்சா...

வயோதிகத்தின் சாபம்

வாழ்க்கையின் துயரங்களில் ஒன்று சில பத்தாண்டுகளுக்குப் பிறகு வயோதிகத்தின் நிழலில் வாழும் ஒரு மதிப்புக்குரியவரைச் சந்தித்து அவர் முழுக்க மனதளவில் உருக்குலைந்து, எந்த தொடர்புமின்றி கடுமையான கருத்துக்களையும் காழ்ப்புணர்வையும் கொட்டுவதை செய்வதறியாது பார்த்து நிற்பதுதான். காலம் மிகமிக வேகமாக ஓவியமொறை நீரில் நனைத்து உருவழிப்பதைப் போல மாற்றிவிடுகிறது. அவரா இவர் எனத் திகைத்து நிற்கிறோம். குறிப்பாக வயோதிகத்தால் மூளையின் முன்பகுதியில் உள்ள நரம்பணுக்கள் பாதிக்கப்படும்போது கருணையற்றவர்களாகவும், தன் சிந்தனைக்கு நடப்புலகில் பொருத்தமில்லை என உணராதவர்களாகவும், கற்பனையாலான கூண்டுக்குள் தம்மைச் சிறைவைத்தவர்களாகவும் மாறுகிறார்கள். அவர்களுடன் உரையாடும்போது நாம் சொல்வது எதுவும் அவர்களது மனத்துக்குள் பதிவதில்லை என்பதையும் உணர்கிறோம். அது நம்மை வாயிருந்தும் ஊமையாக மாற்றுகிறது. ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்கள் சிந்திக்கும் பாங்கும் மனநிலையும் மாறுவதைக் கண்டு திகைக்கிறோம். வயோகத்தின்போது மனிதர்கள் கனிவதாக சொல்லப்படுவது எல்லாருக்கும் பொருந்தாது. என் தோழி ஒருவர் தனது வயதான மாமியாருக்கு உடல்நலமில்லாமல் போனபோது...

2024 எப்படி இருந்தது?

இந்த ஆண்டுக் கணக்கே போலியானதுதானோ என ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ஆம் என்றேன். ஆறுதலுக்காகவோ தன்னிரக்கத்துக்காகவோ பெருமைக்காகவோ பயன்படுத்திக்கொள்ளலாம். நமது சமீபத்தைய அனுபவங்களைத் தொகுத்துக் கொள்ளலாம். நான் பின்னதற்காகவே 2024ஐப் பற்றி யோசித்தேன். ஒரு நாவலை எழுதி முடித்தேன், சில கட்டுரைகளை எழுதினேன், நல்ல புத்தகங்களை, கதைகள், கட்டுரைகளைப் படித்தேன் என்பதைத் தவிர குறைவாக எழுத்தில் பணியாற்றியதாகத் தோன்றுகிறது. ஆனால் இந்த ஆண்டில் ஏப்ரல்-மே மிக மோசமானதாக, கடும் நெருக்கடி கொண்டதாகவும், அதன் தாக்கம் அடுத்தடுத்த மாதங்களிலும் இருந்தது. வேலை, பணம் போன்ற கவலைகளும் அச்சமும் அலைகழித்தன. அதிலிருந்து என்னைக் கரைசேர்த்தது எழுத்துதான். ஆனால் எழுத்தை ஒரு தீர்வாக, மருந்தாக பயன்படுத்தக் கூடாது, எழுத்தை அதனளவில் ஏற்று ஈடுபட வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் இப்படித்தான் என் வாழ்க்கை இருந்திருக்கிறது. கடந்த நான்கு மாதங்களும் மேற்சொன்ன காரணங்களால் என்னால் எழுத்தில் கவனம் செலுத்த முடியாமல் போனது. எழுத்துக்கு வெளியே குத்துச்சண்டைப் பயிற்சி, பவர் லிப்டிங் பயிற்சி மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தனிப்பட்ட வாழ்க்...

நாம் காணாமல் விட்ட பேதம் - ஆர். அபிலாஷ்

எழுத்தாளர் ரிச்சர்ட் ரீவ்ஸ் Big Think சேனல் உரையில் (The Fall of Men) உலகம் முழுக்க சேவைத்துறை சார்ந்த வேலையிடங்களிலும் கல்வித் தகுதியிலும் ஆண்கள் , குறிப்பாக அவர்களிடையே இளந்தலைமுறையினர் , அடையும் வீழ்ச்சியைப் பற்றிப் பேசுகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவியல் தகவலைக் குறிப்பிடுகிறார் - இந்தியாவில் கல்வியாளர்கள் சற்றும் பொருட்படுத்தாத நோக்கு இது : நவீனக் கல்வியின் அமைப்பே ஆணின் உயிரியல் முதிர்ச்சிக்கு விரோதமானது . இன்று மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உழைப்பையும் அறிவையும் விட கவனமும் உணர்ச்சிக் கட்டுப்பாட்டுத் திறனுமே அதிகமாக அவசியப்படுகிறது . வகுப்பில் கவனிப்பது , மனதைக் கட்டுப்படுத்தி ஒரே வேலையில் தேவையான நேரத்திற்கு ஈடுபடுவது , திட்டமிட்டு வேலைகளை முடிப்பது மாணவர்களை விட மாணவிகளுக்கே எளிதாக வருகிறது . உட்கார்ந்து கேட்டு பார்த்து யோசித்து செய்ய வேண்டிய வேலைகளில் அவர்களுக்கு சில அனுகூலங்கள் உள்ளன . நாம் இதை வருடாவருடம் பத்தாம் , பன்னிரண்டாம் வகுப்பு பள்ளித் தேர்ச்சியிலும் மதிப்பெண்ணிலும் பார்க்கிறோம் - மா...