தமிழ்நாட்டு அரசு தான் என்னை ஒரு எழுத்தாளராக மதிப்பதோ அவர்களுடைய இலக்கிய விழாக்களுக்கு இதுவரை ஒருமுறை கூட அழைத்ததில்லை (அழைத்தாலும் தவறிருந்தால் விமர்சிக்கத்தான் செய்வேன்.) ஆனால் மார்ச் 15, 2025 அன்று நடக்கவிருக்கும் ஊட்டி இலக்கிய விழாவில் நான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளேன் என்பது மகிழ்ச்சியான சேதி. மேலும், என்னுடைய அண்மை நாவலான "நிழல் பொம்மை" க்கு ஒரு தனி அமர்வையும் ஏற்பாடு செய்துள்ளார்கள். எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை எழுத்தாளர் திரு திலீப்குமாருடன் நாவல் பற்றி உரையாடுகிறேன்!
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்