இந்த காணொளியில் ஜேசன் புங் குளோகோஸுக்கும் புரொக்டிஸுக்குமான வேறுபாட்டை விளக்குகிறார். குளோலோஸ் என்பது சோறு உள்ளிட்ட தானியங்களில் உள்ளது. அதன் நீண்ட சங்கிலி அமைப்பு நம் உடலால் உடனடியாக ஆற்றலாக மாற்றத்தக்கது. ஆனால் சர்க்கரையில் உள்ள சுக்ரோஸ் புரொக்டோஸுகும் குளோகோஸும் இணைந்து உருவாவது. நம் உடலுக்கு இதை தனக்குள் ஆற்றலாக வாங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லாததால் அது ஈரலில் போய் கொழுப்பாக சேர்கிறது. நாம் உண்ணும் இனிப்பிலிருந்து பிஸ்கட்டில், காபியில் உள்ள சர்க்கரை வரை உடலால் பயன்படுத்த முடியாத உணவாகும். கிட்டத்தட்ட பெட்ரோலியம், பிளாஸ்பிக் பொருட்களை விழுங்குவதைப் போலத்தான் சர்க்கரையை சாப்பிடுவது.
இதைக் கேட்டதில் இருந்து எனக்கு சர்க்கரையைப் பார்த்தாலே கசப்பு ஒவ்வாமையும் வருகிறது. 60-70 ஆண்டுகளுக்கு முன் வரை நம் முன்னோர்கள் சோறும் சிறுதானியங்களும் அதிகமாக உண்டும் நம்மைவிட ஆரோக்கியமாக இருந்தது. ஏனென்று விளங்குகிறது (அதிகமாக சோறுண்ணுவது நல்லதெனக் கூறவில்லை. ஆனால் தானியம் தரும் குளோக்கோஸ் சர்க்கரையின் புரொகொடோஸை விட பாதுகாப்பானது.
Comments