முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா-பாக் டி20 (2026) உலகக்கோப்பைப் போட்டி



 பாகிஸ்தான் ஆட்டச்சூழலை, ஆடுதளத்தை ரொம்ப மோசமாகக் கணித்துவிட்டார்கள் போல. வேகவீச்சாளர்களுக்குப் பந்து நன்றாக ஸீம் ஆகிறது. முதல் சில ஓவர்களிலாவது குறிப்பாக குறைநீளத்திலோ லெங்திலோ விழுந்தால் ஸீம் ஆகி உள்ளே வெளியே என்று சீறுகிறது. குத்திப் போட்டால் எகிறுகிறது - குறிப்பாக அந்த பஞ்சு போன்ற எகிறும் பந்து உயரத்தின் அளவுக்கு வேகம் கொண்டிருக்காது. அதைப் புல், ஹூக் அடிப்பது கடினம். அப்படித்தான் ஹர்த்திக் முதல் ஓவரிலும் விக்கெட் எடுத்தார். பும்ராவின் ஒரு விக்கெட்டும் அப்படித்தான் விழுந்தது. அவரது முதல் பந்தே விக்கெட் விழுந்திருக்க வேண்டும். ஆனால் அது எட்ஜ் வாங்கி சிக்ஸர் போனது. அப்போதே எனக்கு சயிம் குச்சிகளுக்குக் குறுக்கே போகிறார், பும்ரா யார்க்கர் வீசக் கூடும் எனத் தோன்றியது. அவ்வாறே அடுத்த பந்தில் நடந்தது. இதையெல்லாம் பார்த்தபோது பாகிஸ்தான் அணித்தலைவருக்கும் பயிற்சியாளருக்கும் தாம் செய்தது முட்டாள்தனம் எனத் தோன்றியிருக்க வேண்டும் - ஷகீன் அப்ரிதியைத் தூக்கிவிட்டு இரண்டு நல்ல வேகவீச்சாளர்களை ஆடியிருக்க வேண்டும். இந்த ஆடுதளத்தில் உள்ள உயரத்தை, ஸீம் அசைவைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதிகமான சுழலர்கள் (6 பேர்கள்) அவ்வப்போது ஓட்டங்களைக் குறைத்தார்கள், ஆனால் கொத்துக்கொத்தாக விக்கெட் எடுக்கவில்லை. அங்கேயே ஆட்டத்தைப் பறிகொடுத்து விட்டார்கள்.

பாகிஸ்தான் வர்ணனையாளர்கள் தம் அணியின் தலைவரை நேரடியாக விமர்சிக்க மாட்டார்கள். மையமாக நக்கலடிப்பார்கள். இன்று அக்ரம் சொன்னார்: இந்த ஆடுதளத்தில் சுழலர்களுக்கு இணையாக வேகவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தாளர்கள், அவர்களுடைய ஓட்ட விகிதமும் மேலாக உள்ளது.
அதே போலத்தான், இந்தியாவை விட பாகிஸ்தான் அணி ரொம்பப் பதற்றமாகத் தென்பட்டார்கள். டாஸ் வென்றதும் இந்தியாவை மட்டையாட அழைத்ததிலும் என்ன லாஜிக் உள்ளதென எவ்வளவு யோசித்தும் புரியவில்லை.
இதுவரை பாகிஸ்தானுக்குச் சார்பாக ஒன்று மட்டுமே நடந்துள்ளது - அவர்களுடைய சுழலர்கள் 80கள் வேகத்தில் வீசியதால் பந்து அதிகமாகத் திரும்பியது. நம் சுழலர்கள் ஏதோ பேயைப் பார்த்து ஓடுவதைப் போல மரண வேகத்தில் வீசுவதால் பந்து அதிகம் திரும்பவில்லை.
ஷகீப் அப்ரிதியை அவரது மட்டையாட்டத்துக்காகத்தான் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று ஒரு வர்ணனையாளர் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அவர் எண் 9இல் அல்லவா ஆடுகிறார். ஆனால் இன்றைய போட்டியில் அவர் 13வது ஓவரிலே ஆட வந்துவிட்டார். இப்போது 'புரிகிறது'.
இந்த கரகாட்டக்கார அணியை அஸோஸியே நாடாகப் பாவிப்பதே நியாயம். இவர்களுடைய இடத்தில் நபீபியா, யு.எஸ்.ஏ, ஸிம்பாப்வே ஆடலாம். இந்தப் அணிக்கு இவ்வளவு பில்ட் அப் வேற!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...