இந்த சல்மான் ஆகாவை எதற்காக டி20 அணித்தலைவராக வைத்திருக்கிறார்கள்? இது ஒரு புரியாத புதிர். அணியிலேயே ரொம்ப மோசமான ஸ்டிரைக் ரேட் அவருடையதே. பாபர் ஆசாமை விட மோசம் - 122. அவரையெல்லாம் அணியிலேயே வைத்திருக்கக் கூடாது. எப்படித் தலைவராக்கினார்கள்? அதற்குப் பின்னால் பயங்கரமான அரசியல் விளையாட்டு இருந்தது என்கிறார்கள். என்ன எழவோ!
ஆனால் பாருங்கள் அவரது வெற்றிச் சதவீதம் 63. இதையும் நம்ப முடியவில்லை. இங்குதான் ஒரு திருப்பம் வருகிறது: பாகிஸ்தானின் டி20 வரலாற்றிலேயே அதிகமான ஆட்டங்கள் டி20 தலைவராக இருந்தவர் பாபர் அஸாம். அவர் 85 போட்டிகளில் தலைமை தாங்கினார் - அவரது டி20 ஸ்டிரைக் ரேட் 128. வெற்றிச் சதவீதம் 56. ஆக, மட்டமான டி20 மட்டையாளர்களே அங்கு நல்ல தலைவர்களாகவும் இருக்க முடிகிறது.
இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ்வின் ஸஸ்டிரைக் ரேட் 165. ஆஸ்திரேலிய அணித்தலைவர் மிச்சல் மார்ஷின் ஸ்டிரைக் ரேட் கிட்டத்த 140. தெ.ஆ அணித் தலைவர் மார்க்கரமின் ஸ்டிரைக் ரேட் 147. என்னால் பாகிஸ்தான் அணியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பெரும்பாலான சர்வதேச அணிகளில் இந்த பாபரும் ஆகாவும் அணியில் கூட இடம்பெற முடியாது. எந்த நம்பிக்கையில் அணியை நடத்துகிறார்கள்? பேசாமல் கலைத்து விடலாம்.
Comments