முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலு மகேந்திராவின் எடிட்டிங்


பாலு மகேந்திரா தன் படங்களை தானே எடிட் செய்வார். அதில் ஒரு தனி நேர்த்தி இருக்கும். இதை விவாதிக்க “அழியாத கோலங்களில்” “பூவண்ணம்” பாடலில் இருந்து இந்த காட்சிகளை எடுத்திருக்கிறேன். (இந்த படத்தை டி.வாசு எடிட் செய்திருந்தாலும் நெறியாள்கை பாலு மகேந்திராவே. இதை அவரது முத்திரை ஸ்டைலில் இருந்து அறியலாம்.)




முதலில் நாயகனும் நாயகியும் சட்டகத்தில் வலப்பக்கம் இருந்து இடப்பக்கமாய் நகர்ந்து வருகிறார்கள். அவர்கள் சட்டகத்தின் இடது விளிம்பில் வர காட்சி முடிந்து போகும். அடுத்து அந்தி வானத்தை ஒரு sweeping shotஇல் காட்டுவார். இதுவும் இடப்பக்கம் இருந்து வலப்பக்கமாய் நகரும். இந்த நேர்த்தியை பாடல் முழுக்க அவர் கடைபிடித்திருப்பார்.
பாலு மகேந்திராவின் கதைமொழியில் கோயில் காதலில் ஒரு புனிதத்தை உணர்த்துவது. அவரது காதலர்கள் கோயில் வளாகத்தில் மெல்லிய சீண்டல்களில் ஈடுபடுவார்கள்.

 இக்காட்சியில் கோயில் தூணில் சாய்ந்திருக்கும் பிரதாப் போத்தனிடம் ஷோபா வந்து நெற்றியில் திருநீர் வைக்கிறார். பிரதாப் அவரது அழகிலும் கோயில் கொடுக்கும் தனிசோபையிலும் அசந்து போய் ஒரு பார்வை பார்ப்பார். உடனே பாலு மகேந்திரா (தன் வழக்கப்படி) ஆணின் இச்சையின், அவனது சிலாகிப்பின் கோணத்தில் இருந்து பெண்ணை காட்டும் ஒரு மிட் ஷாட் வைக்கிறார். அதில் ஷோபா அழகாய் புன்னகைத்து மிக மிக மெல்லிதாய் வெட்குகிறார்.

 துவக்கத்தில் பிரதாப் சட்டகத்தில் இடது பக்கம் இருக்கிறார். மிட் ஷாட் வரும் போது ஷோபா வலதுபக்கம் வருகிறார். இதை அடுத்த காட்சியில் பிரதாப் ஒரு மரக்கிளையில் ஸ்டைலாய் சாய்ந்தபடி, ஒரு கையில் சிகரெட் புகைய, இருக்க, ஷோபா அவரிடம் வந்து குழைகிறார்.

 இதில் பிரதாப் சட்டகத்தின் வலப்பக்கம் இருக்கிறார். இதை அடுத்த காட்சியில் தான் நான் ஆரம்பத்தில் சொன்னது போல் நாயகனும் நாயகியும் வலப்பக்கம் இருந்து இடமாக நடந்து வருகிறார்கள். ஸ்வீப்பிங் ஷாட்டும் வருகிறது.

 இதையெல்லாம் பாலு மகேந்திரா திட்டமிட்டு ஒளிப்பதிவு செய்ததாய் நான் நம்பவில்லை. ஆனால் எடிட்டிங்கின் போது மிகுந்த போதத்துடன் காட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறார். அதனாலே வலப்பக்கம் இருந்து இடப்பக்கமும், இடதில் இருந்து வலதுமாய் காட்சிகள் அவ்வளவு நாசூக்காய் வழுக்கிப் போகின்றன. மிக சொற்பமாய் அசைவுகள் கொண்ட காட்சிகள் எனிலும், நமக்கு பாடல் முழுக்க ஒருவித தொடர் அசைவுகள் நிகழ்வதான தோற்றத்தை அவர் ஏற்படுத்துகிறார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...