5. சேய்க்கை வெதுவெதுப்பாய் வைத்திருப்பதாய்
நீ சொன்னாய்
… அதன் பிறகு ஒரு வாடகைக்கார்
கூட நிற்கவில்லை
சேய்க்கை* வெதுவெதுப்பாய்
வைத்திருப்பதாய் நீ சொன்னாய்
மிக இதமாய் மழை தூவியது
மூன்றாவது அவென்யுவில்
நடந்தேன்
வேகமாய் பரவசமாய்!
… அதன் பிறகு ஒரு வாடகைக்கார்
கூட நிற்கவில்லை
57வது தெருவில் இருந்து
75வது வரையில்
பதினெட்டு வீட்டுத்தொகுதிகள்,
அங்கு
வளைவில் ஒரு தொலைபேசிச்
சாவடியில் இருந்து
உன் எண்ணிற்கு அழைத்தேன்
நான் வந்து கொண்டிருக்கிறேன்,
அத்துடன் மழை …
அது எவ்வளவு சுகம்
எனச் சொல்ல மட்டுமே!
நண்பா,
எங்கிருக்கிறாயோ அங்கிருந்து
இறங்கி
என்னை நோக்கி நடந்து வர
மாட்டாயா …
·
செய்க் – அரிசியில் இருந்து உருவாக்கப்படும்
ஜப்பானிய மது
Comments