ரஜினி என்னும் நடிகனைப் பற்றிய கட்டுரைகள் மிகக் குறைவு. சிலகம்மா செப்பிந்தி காலத்திலேயே நிறைய எழுதப்பட்டிருக்க வேண்டும். ரஜினியின் ஆப் ஸ்கிரீன் இமேஜ், அரசியல் பற்றிய ஆயிரக்கணக்கான கவர் ஸ்டோரிகளுக்கு நடுவே ரஜினி என்னும் நடிப்பு வசீகரனைப் பற்றி யாரும் எழுத நினைத்ததில்லை. சுஜாதா, பாலகுமாரன், விசிட்டர் ஆனந்த் போன்றோர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் லேட்டாக இணைந்திருக்கிறார் அபிலாஷ். குமுதத்தில் வெளியாகியிருககும் கட்டுரை, இன்னொரு மாஸ்டர் பீஸ்! ரஜினியின் சினிமா பற்றி இன்னும் சில கட்டுரைகளும் எழுதியிருக்கிறார் அபிலாஷ். பாராட்டை விட முதலில் நெஞ்சார்ந்த நன்றிகளை் சொல்லிவிடவேண்டும். Abilash Chandran மிக்க நன்றி!
இப்படிக்கு
ராம்கி. கெ
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்