இன்று அதிகாலை நடையில்
முதன்முதலாக சந்தித்தோம்
நானும் ஒரு பனித்துளியும்
ஒரு வாழ்நாள் முழுவதும்
பேசிக் கொண்டிருந்து விட்டு
பரஸ்பரம் காணாமல் போனோம்!
- எம். யுவன்
# "போனோம்" என்பதில் உள்ளது இது கவிதையாகும் மாயம்.
இன்று அதிகாலை நடையில்
முதன்முதலாக சந்தித்தோம்
நானும் ஒரு பனித்துளியும்
ஒரு வாழ்நாள் முழுவதும்
பேசிக் கொண்டிருந்து விட்டு
பரஸ்பரம் காணாமல் போனோம்!
- எம். யுவன்
# "போனோம்" என்பதில் உள்ளது இது கவிதையாகும் மாயம்.
Comments
பனித்துளி உயிர்த்திருக்கும் அந்த குறைவான காலப்பொழுது கவிஞனுக்கு ஒரு நாள் பொழுதாய் செல்கிறது. காலம் என்பது மனதின் கட்டமைப்பு என்பது யுவனின் கவிதைகளில் மீள மீள வரும் சேதி.