முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“இச்சை என்பது…” – பெருந்தேவி எதிர்வினை


Image result for பெருந்தேவி

 “இச்சை என்பது…” கட்டுரைக்கு கவிஞர் பெருந்தேவி முகநூலில் செய்த அபாரமான எதிர்வினையை இங்கு பகிர்கிறேன். சொல்லப் போனால், கட்டுரையில் நான் பேச இயலாத ஒரு அம்சத்தை பெருந்தேவி சரளமான கவித்துவ மொழியில் விவாதிக்கிறார். “காதலன் – காதலன் ஆல்லாதோர்” எனும் இருமையை கடந்து, சிலவேளைகளில் – காதலில் கசியும் சந்தர்பங்களில் - ஒரு பெண் மனம் இயங்க முடியும் என பேசுகிறார். முக்கியமான பார்வை இது:
ரோலான் பார்த் போல் எழுதியது போல் எழுத வேண்டியது காதல்.
-------------------
பார்த்தவுடன் காதல் என்பது myth அல்ல. அது எப்படி என்று பலர் கேட்டாலும். Gut feeling அது. ஒருவகையில் ஒரு தேர்ந்த வாசகர் அவருக்கான கவிதையைக் கண்டுணர்வது போல. கண்கள்... ஆனால், புற அழகின் பங்கு ஒரு சின்ன அளவில்தான். கண்கள் என்றதும் புற அழகு குறித்து அல்ல.



அவ்வாறு கண்ணில் விழுந்து காதலில் எழும்போது (காதலில் விழுதல் என்ற வினை எனக்கு ஒவ்வாதது, உண்மையில் நாம் எழுகிறோம் அதில்.) அதைக் கவனமாகப் பராமரிக்க வேண்டியிருக்கிறது. காதல் சொர்க்கத்திலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் செடி. வன்முறையும் கெட்ட எண்ணங்களும் நிறைந்த சூழலில் மிகக் கவனமாகப் பராமரிக்கவேண்டிய செடி. அதைச் செய்யமுடிந்தால் (மட்டுமே) வாழும். மிகக் கடினமான விஷயம் அது.

//பார்த்ததும் காதல் என்பதே தவிர்க்க முடியாதநிதர்சனம். வேறெப்படியும் அது நிகழ முடியுமா தெரியவில்லை.//

//இப்படி பார்த்து தன்னை இழந்து காதலில் விழுந்த ஒருபெண்ணுடன் (ஆணுடன்) காபி அருந்திக் கொண்டிருக்கிறீர்கள்.அவள் (அவன்) கண்களுக்குள் உங்களை மறந்துலயித்திருக்கிறீர்கள். ஒரு சைகை, ஒரு சிறு அசைவு, ஆடையின்சலசலப்பு, முடி நெற்றியில் புரளும்பாங்கு//

//நீங்கள் உங்கள் காதலனுடன் இருக்கையில் இன்னொருஆணைக் கண்டு மனம் அலைபாய்கிறது. ஆனாலும் அந்தபேரழகனுக்காக உங்கள் காதலனான அழகனை நீங்கள்கைவிடப் போவதில்லை.//

மனம் அலைபாய்தல் என்பதை இப்படித்தான் பார்க்கிறேன். தன் காதலனோடு / காதலியோடு இருக்கும்போது பிற பெண்களும் ஆண்களும் அழகாகத் தெரியவே வாய்ப்புண்டு. அதாவது ஒருவர் மீது இருக்கும் காதல் பலரையும் நம் கண்ணில் அழகாக்கிக் காட்டுகிறது. உலகமே ரம்மியமாகிறது என்பது கிளிஷே அல்ல. அதனால், இந்த முதல் வரியின் அலைபாய்தல் தடாலென்று கைவிடுதலுக்கு எப்படி இட்டுச் செல்கிறதெனத் தெரியவில்லை.

ஏன் அலைபாய்தல் காதலோடு சேர்ந்த ஒன்றாக இருக்கக்கூடாது? இதனால் அலைபாய்தலையும் காதலையும் ஒன்றாக்கி சமப்படுத்தி நான் சொல்லவில்லை. அலைபாய்தல் ஒரு momentary good feel என்பதாக ஏன் கொள்ளக்கூடாது? …
By the way, என் காதலனோடு நான் இருக்கும்போது ஒரு பூனைக்குட்டியோ ஆட்டுக்குட்டியோ போனாலும் அவை ஒன்றேபோல் பேரழகாக என் கண்ணுக்குக் காட்சி தரும். உடனே என் மனதுக்குப் பிடித்துவிடும். தற்காலிகமாக என்றாலும்தான்.

அப்புறம்....அலைபாய்தல் விவகாரங்களைத் தவிர்த்து, தள்ளிவைத்துப் பார்த்தால்...தீவிரமான, genuine ஆன காதல் ஒருவரோடுதான் இருக்கவேண்டுமா, இருக்குமா என்பவை எல்லாம் ஆபத்தான, ஆனால் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...