Skip to main content

Posts

Showing posts from July, 2018

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (6)

( எனது   “ 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி   World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.) 11. " அன்பு , விசுவாசம் ஆகியவைக்கு இன்னொரு கூர் முனை உள்ளது. அதுதான் துரோகம்" என்று உங்கள் கட்டுரையில் குறிப்பிடுகிறீர்கள். தமிழகத்தில் துரோகத்தின் காரணமாக அன்றாடம் நிறைய குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. தமிழ்ச் சமூகம் , துரோகத்தை மனித இயல்புகளில் ஒன்றாகப் புரிந்து கொள்ள தவறிவிட்டதா ?

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (5)

( எனது   “ 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி   World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.) 8. பெண் இயக்குநர்களின் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் பெண்மை குறைந்தவர்களாகவும் , ஆண் கதாபாத்திரங்கள் பெண்மை நிறைந்தவர்களாகவும் இருப்பதை ஒரு கட்டுரையில் சுட்டியிருக்கிறீர்கள். உங்களுடைய வேறொரு புத்தகத்தில் , " தைரியமான உறுதியான பெண்ணும் , நெகிழ்ச்சியான கவித்துவமான ஆணும் நம் எதிர்கால சமூகத்தின் லட்சியப் பிரதிநிதிகளாக இருப்பார்கள்" என்று எழுதி இருக்கிறீர்கள். அது பற்றி சொல்லுங்கள்.

திமுகவை குறி வைக்குமா பாஜக?

கலைஞரை காவேரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க ஆரம்பித்த பின் அரங்கேறும் காட்சிகள் ஏனோ ஜெயலலிதாவின் அப்பல்லோ நிழல் காட்சிகளை நினைவுபடுத்துகின்றன (அவருக்கு அப்படி ஏதும் நிகழக் கூடாதே என இறைவனை பிரார்த்திக்கிறேன்.) ஒருவேளை நாம் விரும்பாத அந்த சேதியே உண்மையாகுமானால், தமிழகத்தில் என்னவெல்லாம் நிகழும்?

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (4)

( எனது   “ 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி   World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.)  “காதல்” 6. ஒரு பேராசிரியராகத் தமிழக இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துங்கள். ஒருவரை ஒருவர் காதலிக்கும் இரண்டு தனிமனிதர்கள் வாழ்க்கையில் ஒன்றிணைய முடியாமல் இருப்பது காதல் தோல்வியா ? அல்லது , ஒருவரின் காதலை இன்னொருவர் ஏற்றுக் கொள்ளாதது காதல் தோல்வியா ? ஆர் . அபிலாஷ் : காதலர்கள் தம் விருப்பத்தையும் கடந்து இணைய முடியாமல் போவது காதல் தோல்வி அல்ல ; அது சமூக அவலம் . அதனால் தான் பாலாஜி சக்திவேலின் “ காதல் ” உள்ளிட்ட படங்கள் சாதியைப் போன்ற சமூக அவலங்களை சாடுகின்றன . ராமின் “ கற்றது தமிழ் ”, “ தரமணி ” ஆகிய படங்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் தடைகள் , அகச்சிக்கல்கள் எப்படி காதலர்களை பிரிக்கின்றன என்பதைப் பேசுகின்றன .

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (3)

( எனது   “ 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி   World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.) 4. காதலை லட்சியமாகச் சித்தரிக்கும் புள்ளியில் இருந்து காதலைக் கொண்டாட்டமாகச் சித்தரிக்கும் புள்ளிக்குத் தமிழ் சினிமா வந்துள்ளது. இந்த மாற்றம் சமூக அளவிலும் நிகழ்ந்துள்ளதா ? ஆர் . அபிலாஷ் : ஆம் . நிகழ்ந்துள்ளதால் இப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன . காதலை ஒன்று மிகவும் உணர்ச்சிகரமாய் சித்தரித்து , அதற்காய் வெம்பி வெதும்பி நிலையற்று தவிக்கும் பாணியிலான படங்கள் எடுக்கப்படுகின்றன ( கௌதம் மேனனின் படங்கள் ). இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு பாணி உள்ளது . காதலில் நிகழும் போராட்டங்களையும் விளையாட்டாய் லேசாய் எடுத்துக் கொண்டு வாழ்க்கையை கொண்டாடுவது இப்போக்கு . இரண்டுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது என் பார்வை .

கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (4): தனியர்களின் அவசியம்

இங்கு மேலும் ஒரு கேள்வி எழுகிறது? 1)    ஏன் சமகாலத்தில் முன்பு போல பெரும் இலக்கிய சண்டைகள் நடப்பதில்லை? ஏன் திடீரென எல்லாரும் காந்தியாகி விட்டார்கள்?

கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (3): தனியர்களின் அவசியம்

” தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான் , நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக , தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது .” ( ஜெயமோகன் ) இந்த கூற்றை நுணுக்கமாய் நோக்கினால் சில சுவாரஸ்யமான விசயங்கள் புலப்படுகின்றன. ஒன்று நட்பார்ந்த கூட்டு செயல்பாடுகள் முக்கியம் என ஜெயமோகன் சொல்வது இந்த கால த்துக்கு எவ்வளவு பொருத்தமாய் உள்ளது என்பது.

விஷ்ணுபுரம் கூட்டங்கள்: கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (2)

முன்பு இருந்தது சிறு சிறு தீவிர குழுக்களின் சந்திப்புகள். ஆனால் இன்று உள்ள தேவை அறிவுஜீவிகள் சந்தித்துக் கொள்ள 60களில் நடந்த கொல்கொத்தா காபி கிளப் பாணி அறிவுஜீவி கூட்டங்கள் அல்ல. இன்று தீவிர இலக்கிய அறிமுகங்கள் தேடும் மத்திய மேல் மத்திய வர்க்கத்தினர் பலர் உள்ளனர். அவர்களுக்கு எளிய இலக்கிய வகுப்புகள் தேவைப்படுகிறது. அதாவது நீங்கள் BA English honors / BA Tamil (சிறுபத்திரிகை) honors (அப்படி ஒன்று இல்லை எனினும்) படிப்பில் சேர்ந்து ஆரம்ப நிலை இலக்கிய அறிமுகம் பெற இவர்கள் விரும்புகிறார்கள். இதற்கு வாசக சாலை கூட்டங்கள் (சின்ன அளவிலும்) விஷ்ணுபுரம் கூட்டங்கள் (பெரிய விரிவான அளவிலும்) உதவுகின்றன. மேலும் இது ஒரு இலக்கிய சமூகமாக்கல் தளமாகவும், இளம் எழுத்தாளர்கள் சந்தித்து ஊக்கம் பெறும் இடமாகவும் மாறுகிறது. விஷ்ணுபுரம் அமைப்பை பொறுத்தமட்டில் எந்தவொரு கல்லூரி / பல்கலைக்கழகத்தை விடவும் சிறப்பானதொரு தமிழ் நவீன இலக்கிய அறிமுகத்தை அது வழங்குகிறது என நம்புகிறேன்.

விஷ்ணுபுரம் கூட்டங்கள்: கருத்து மோதல்களும் அறிவுஜீவியும் (1)

விஷ்ணுபுரம் விருதைப் பற்றின சிறுகட்டுரை ஒன்றில் ( https://www.jeyamohan.in/111472#.W1q1adIzY2w ) ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:   “ விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. 2010 ல்   ஒரு சிறுநட்புக்கூட்டமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. நட்புக்கூட்டத்தை ஓர் அமைப்பென்று ஆக்கி தொடர் சந்திப்புகளை நிகழ்த்துவதும் , இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான் , நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக , தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது .” எனக்கு ஜெயமோகன் மீது மிகுந்த மதிப்புண்டு. விஷ்ணுபுரம் அமைப்பும் நம் இலக்கிய வெளிக்கு அளப்பரிய பங்காற்றுகிறது என்பதை ஏற்கிறேன். ஆனால் ஜெயமோகன் ஒழுங்குக்கு அளிக்கும் இந்த மிதமிஞ்சிய முக்கியத்துவத்துடன் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. ஏன் என சொல்கிறேன்.

“90ளின் தமிழ் சினிமா” பேட்டி (2)

( எனது   “ 90களின் தமிழ் சினிமா” நூலை ஒட்டி   World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.) 3.    இவ்வளவு மக்கள் கவனம் பெற்று வந்தாலும் , அதற்கு ஏற்ற பொறுப்புணர்வுடன் தமிழ் சினிமா உலகம் நடந்து கொள்கிறதா ? ஆர் . அபிலாஷ் : சினிமா போன்ற வெகுஜன ஊடகமோ இலக்கியம் போன்ற தீவிர ஊடகமோ பொறுப்புணர்வு கொள்ள அவசியம் இல்லை என்பது என் கருத்து . படைப்பாளி சமூகத்தை வழிநடத்துகிறான் , சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறான் , ஆகையால் அவன் சமூக தீமைகளை எதிர்க்க வேண்டும் , முறியடிக்க வேண்டும் என்பது ஆரம்ப கால மார்க்ஸியர்களின் நம்பிக்கை . 1922 இல் லெனின் சோவியத் சினிமாவை எப்படி எடுக்க வேண்டும் என்பது பற்றி ஒரு அதிகாரபூர்வ குறிப்பை வெளியிட்டார் . அதில் இயக்குநர்கள் தம் அரசின் கொள்கைகளை ஆதரிக்கும் விதமாய் மட்டுமே படம் எடுக்க வேண்டும் என்றும் , அதை தன் கட்சி கண்காணிக்கும் என்றும் கூறுகிறார் . ஏனெனில் மக்கள் சித்தாந்தத்தின் படி வாழ்கிறார்கள் , சித்தாந்தத்தை மக்களிடம் பரப்பும் முக்கிய பணியை சினிமா எனும் ஊடகம் சிறப்பாய் செய்ய முடியும் என அவர் நம்பினார் . நம்மூர் மார்க்ஸியர்கள் பண்பாட்...

“90களின் தமிழ் சினிமா” பேட்டி (1)

  (எனது  “ 90களின் தமிழ் சினிமா ” நூலை ஒட்டி  World of Appu இணையதளத்தில் வெளியான பேட்டி இது.) 1.    ஒரு புனைகதை எழுத்தாளராக இருந்துகொண்டு சினிமாவைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கிறது ? ஆர் . அபிலாஷ் : நான் முழுநேர சினிமா விமர்சகன் அல்ல . நான் ஆர்வம் கொள்ளும் பல்வேறு துறைகளில் சினிமாவும் உண்டு . ஒரு எழுத்தாளனாய் நான் மாறுபட்ட கோணங்களை , புதிய மொழி ஒன்றை , எனக்கான உணர்வுநிலையை சினிமா விமர்சனத்துக்குள் கொண்டு வருவதாய் நம்புகிறேன் . உதாரணமாய் , தொண்ணூறுகளில் இருந்து ரெண்டாயிரத்தின் முற்பகுதி வரையிலான படங்களில் ஒருவித ஒடுக்கப்பட்ட ஆண்மை சித்தரிக்கப்பட்டதை , புரொமேன்ஸ் பேசப்பட்டதை , சொல்ல முடியாத காதலின் அவஸ்தையை நம் சினிமா காட்சிப்படுத்தியதைப் பற்றி என் சினிமா கட்டுரைகளில் விவாதித்திருக்கிறேன் . அதாவது , என் சமூக , பண்பாட்டுக் கட்டுரைகளில் , புனைவுகளில் பேச முடியாத சில விசயங்களை சினிமாவை மையம் கொண்டு என்னால் பேச முடிந்திருக்கிறது .

முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் (2)

  இன்று நான் காணும் கணிசமான மணமுறிவுகள் இப்படி தெளிவற்ற காரணங்களால் தான் நிகழ்கின்றன.   ஒன்று, இன்று முன்னளவுக்கு யாரும் மண உறவுகளை நம்பி இல்லை. தனியாக வாழ்வது இன்று பெரும் சவால் அல்ல. அடுத்து முக்கியமாய், இன்று பலரையும் சொல்லொண்ணா துக்கம், சோர்வு, அவநம்பிக்கை, கசப்பு ஆட்கொள்கிறது. இதன் காரணம் என்னவென துல்லியமாய் தெரியாத நிலையில் ஒவ்வொரு எளிய இலக்குகளையாய் பலி கொடுக்கிறார்கள்.

முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் (1)

சமீபத்தில் ஒரு தோழி தனது மணமுறிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். “என் திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாகி விட்டது. இனிமேலும் இதையே பொறுத்துக் கொள்ள முடியாது. யாருக்காகவும் நான் என் நிம்மதியை தியாகம் செய்ய இயலாது. நான் என் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா? ஆகையால் என் கணவரிடம் இதைப் பற்றி ஒருநாள் விவாதித்தேன்.”

பிக்பாஸில் தாக்குப்பிடிப்பது எப்படி? (2)

பிக்பாஸின் அடுத்த பருவத்திற்கு தயாராகும் போட்டியாளர்கள் ஒரு பாடத்தை நன்றாய் கற்றிருப்பார்கள்: இங்கு ஜெயிக்க சதா ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி ஷோவுக்கு ஒரு பொழுதுபோக்கு சாத்தியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதே நேரம், யாரையும் அதிகம் துன்புறுத்தவோ புண்படுத்தவோ செய்யாமல் இருக்க வேண்டும். வீட்டுக்குள் யாருடனும் இசைவாக இருப்பது நிலைப்புக்கு உதவாது. ரேட்டிங் ஏற உதவினால் மட்டுமே நீங்கள் நீடிக்க இயலும்.

பிக்பாஸில் தாக்குப்பிடிப்பது எப்படி? (1)

  பிக்பாஸை நான் இந்த இரண்டாம் பருவத்தில் கூடுதல் ஆர்வமாய் பார்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு: நான் இதுவரை எதிர்கொண்டுள்ள பல கார்ப்பரேட் அனுபவங்களுக்கு அது நெருக்கமாக உள்ளது.   இன்று நம் வாழ்வே கார்ப்பரேட் மயமாகி விட்ட நிலையில், ஒரு நெருக்கடியான சூழலில் நம்மை எப்படியெல்லாம் படுத்துவார்கள், எப்படியெல்லாம் கண்காணிப்பார்கள், நாம் எந்தமாதிரி அபத்தங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பதை இந்த ஷோ சித்தரிக்கிறது. இது விளையாட்டு தான்; ஆனால் நம் கார்ப்பரேட் போட்டி உலகை அணுக்கமாய் பிரதிபலிக்கும் விளையாட்டு. வரும் பதிவுகளில் இதைப் பற்றி கூடுதலாய் எழுதுகிறேன். முதலில் இவ்வாரம் என்னை அதிர்ச்சியூட்டிய ஒரு விசயம்: ரம்யாவின் வெளியேற்றம்!

பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா? (விமர்சனம்)

     பெண்களை பற்றி   எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.சினிமா , வேலையிடம் , சமூகம் என நவீன வாழ்க்கையில் பெண்கள் எவ்வாறாக இருக்கிறார்கள் , பெண்ணுடல் சந்திக்கும் சிக்கல்கள் , உயர்பதவியில் இருக்கும் பெண்களின் சர்வாதிகாரம் என பல்வேறு தளங்களை தொட்டு பேசுகிறது.

எனது பேட்டி

மலையாளத்தில் ஒரு பி.ஸி ஸ்ரீராமோ, மணிரத்னமோ, மிஷ்கினோ, ராமோ இல்லை. அவர்களின் சந்தோஷ் சிவன் கூட அதிகமும் வெளிமாநிலங்களிலே வேலை செய்திருக்கிறார். நல்ல திரைமொழியைக் கொண்டிருந்த பத்மராஜனுக்குக் கூட அங்கு வழித்தோன்றல்கள் இல்லை. நாடகத்தை வித்தியாசமான கதை அமைப்புடன் எடுப்பதே இன்றும் மலையாள சினிமா. அதில் உளவியல் நுணுக்கங்கள் உண்டு; வாழ்க்கைப் பார்வை உண்டு. ஆனால் சினிமா மொழி இல்லை.  மகேஷிண்டே பிரதிகாரம்  ஆர்வமூட்டும் கதை ஆழம் கொண்ட படம்தான். ஆனால் அது சினிமா இல்லை. வசனங்களை விடுத்து கதை சொல்ல இன்றும் மலையாளிகளுக்குத் தெரியாது. http://theworldofapu.com/in-conversation-with-r-abilash-tamil/

புதுமைப்பித்தனும் சாஹிர் நாயக்கும்

நான் எழுத வந்த பதின் வயதில் முதலில் வாங்கிய சிறுகதைத் தொகுப்பு “புதுமைப்பித்தன் கதைகள்” – அதை கிட்டத்தட்ட ஒரு விவிலியம் போல் தினமும் வாசித்தது நினைவுள்ளது. புதுமைப்பித்தனிடம் வலுவான ஆசிரியர் குரல் ஒலிக்கும் – அவரது நையாண்டியும் சாட்டை சொடுக்குவது போன்ற கூர் சொற்களும் கசப்பேறிய பகடியும் கொண்ட குரல் ஒரு கட்டத்தில் நம்முடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்து விடும். புதுமைப்பித்தன் நமக்கு சிறுவயதில் இருந்தே நன்கு பழக்கமான உறவினர் எனும் உணர்வு ஒரு கட்டத்தில் வந்து விடுமாகையால் அவரை “நம்ம புதுமைப்பித்தன்” எனும் அணுக்கமின்றி யோசிக்கவே முடியாது.

பிக்பாஸ்: நடிப்பு எவ்வளவு சதவீதம்?

எல்லா ரியாலிட்டி ஷோக்களையும் போலத் தான் பிக்பாஸும் – பாதி உண்மை, பாதி பொய். எல்லாமே பாதி பாதி – பாதி சந்தோஷம், பாதி கண்ணீர், பாதி கோபம், பாதி அரற்றல், பாதி வெறுப்பு, பாதி பழிவாங்கல். இம்முறை பிக்பாஸில் 2விலும் எல்லாம் பாதிக்கு பாதி நடிப்பு.   நீங்கள் தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யாவின் நடவடிக்கைகளை மகத், டேனியல், வைஷ்ணவி, நித்யா, ரித்விகா, மமதி ஆகியோரின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டால் இது பளிச்சென புரியும். பாலாஜி, நித்யா அளவுக்கு பிறரால் சிறப்பாய் நடிக்க முடியவில்லை. ஆகையால் அவர்களின் சச்சரவுகள், மோதல்கள் முன்னவர்களின் பிணக்கு போல எடுபடவில்லை.

வாசக சாலை பெங்களூர் வரவு: முதல் கூட்டம்

வாசக சாலையின் பெங்களூர் நுழைவு நல்ல விதமாய் சுவாரஸ்யமாய் அமைந்தது. இன்று மாலை கூட்டம் உல்சூரில் பெங்களூரு தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது. வாசக சாலை அமைப்பு தோன்றின பின் தான் வாசக பேச்சாளர்கள் என ஒரு தனி உரையாடல்களாரர்களே தமிழில் தோன்றினார்கள். அதுவரை வாசகர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்கள். கடிதம் எழுதுவார்கள், ஆனால் எப்போதும் நிழலில் நிழலாக மறைந்திருப்பார்கள். வாசக சாலை நம் சிறுபத்திரிகை உலகை, அதை ஒட்டி உருவாகி வரும் நடுநிலை வாசகப் பரப்பை ஜனநாயகப்படுத்தி உள்ளது. பெரிய அரசியல் உரசல், பிம்ப பெருக்கம், வெறுப்பரசியல் இல்லாத நட்பார்ந்த கூட்டங்கள் அவர்களுடையது.