அன்புள்ள ஆர். அபிலாஷ்
“அபிராமிகள்
ஏன் தோன்றுகிறார்கள்?” என்ற உங்கள் கட்டுரையை வாசித்தேன்.
மிக நன்றாக ஆழமாக இருந்தது. பெண்கள் ஒரு முடிவெடுத்தால், அவர்களை
விட்டுவிட வேண்டும்; மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கினால்
இதுபோன்ற விபரீத விளைவுகள் ஏற்படும் என்பது உண்மை. வளைந்த விலா எலும்பை நேராக்க
நினைத்தால், எப்படி அது ஒடிந்துவிடுமோ, அதுபோலத்தான், பெண்களும். நெருக்கடிகளும்,
கட்டுப்பாடுகளும் போட்டால் கண்ணாடி பாத்திரம் உடைந்து நம்மைப் பதம்
பார்த்துவிடும்.
அன்புடன்
ஆரூர் சலீம்
ஐயா,
வணக்கம்.
மின்னம்பலத்தில்
வந்த உங்களுடைய சிறப்புக் கட்டுரை: “அபிராமிகள்
ஏன் தோன்றுகிறார்கள்?” படித்தேன்.
மிக அருமை. மிகச் சரியான கருத்தை கூறியுள்ளீர்கள். நம் சமூகத்தில்
உள்ள பெரும்பாலானோர் உணர்ச்சி வயப்பட்டு ஒரு கருத்தைக் கூறுபவர்களாகவே உள்ளனர்.
இவர்களால் மேலும் மேலும் அபிராமிகளை உருவாக்க முடியுமே தவிர அபிராமிகள் உருவாவதை
தடுக்க இயலாது என்றே நினைக்கத் தோன்றுகிறது. அபிராமியின் செயலுக்கு கோபப்படுவதை
விட வருத்தப் படுவதே சரி என்று தோன்றுகிறது.
நன்றி,
வணக்கம்.
மோகன் ராஜ்
Comments