முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிகரெட் புகைக்கும் பெண் (2)


மலையாள ஹீரோக்கள் ஏன் சிகரெட் பிடிப்பதில்லை?

Image result for malayalam movie + bidi smoking
மலையாள சினிமாவில் சிகரெட் பிடிக்காத நாயகர்களைக் குறிப்பிட்டேன்; ஆனால் அங்கு அந்த இடத்தை பீடி பிடித்துள்ளது. அங்கு பீடி பிடிக்காத நாயகர்கள், குணச்சித்திர நடிகர்கள் இல்லை. மாறாக வில்லன்கள் சிகரெட் பிடிப்பார்கள். இந்த பீடி × சிகரெட் எதிரிடை அங்கு வர்க்க வேறுபாடைக் குறிக்கும் குறியீடு ஆனது. இதற்கு அங்கு வலுவாக தோன்றின மார்க்ஸிய கதையாடல் ஒரு காரணம். “பீடி உள்ளது, தீப்பெட்டி உண்டா?” எனும் கேள்வி மறைந்து வாழும் தோழர்கள் பரஸ்பரம் அடையாளம் காண்பதற்கான ஒரு சமிக்ஞையாக பல இடதுசாரிப் படங்களில் வரும். இடதுசாரிகளை நேரடியாய் சித்தரிக்காத, விளிம்புநிலையினர் குறித்த படங்கள் அங்கு எண்பதுகள் தொட்டே வருகின்றன. இப்படங்களிலும் நாயகனின் முரட்டு கலகத்தன்மையை சுட்டுவதற்கு பீடி பயன்படுகிறது.


வேறெந்த மொழிகளையும் விட மலையாள சினிமாவிலே நாயகியின் அருகில் நின்று அலட்சியமாய் பீடி புகைக்கும் நாயகர்கள் வருவார்கள். பீடிப் புகை அப்பெண்ணின் முகத்தை சூழ்ந்து கலைகையில் நாயகனின் ஆண்மை மூர்க்கமடைந்து அவளை கலைத்து ஆக்கிரமிக்கும் குறியீடு காட்சிப்படுகிறது. ஒரு சாதாரண காதல் காட்சியில் பின்னணியில் இப்படியான ஒரு செக்ஸுவல் தொனியை அளிக்க புகை பயன்படுவது மலையாள சினிமாவின் சுவாரஸ்யங்களில் ஒன்று. நாயகனை அந்தளவு முரடனாய் காட்ட வேண்டாம் என இயக்குநர் நினைத்தால் நாயகி வரும் போது பீடியை கீழே இட்டு அணைப்பவனாய் நாயகன் வருவான்.
இங்கு ஒரு முக்கியமான கேள்வி வருகிறது: ஏன் மலையாள படங்களில் பீடி தோன்றுமளவுக்கு தமிழில் சிகரெட் தோன்றவில்லை? ஏன் சிகரெட்டுக்கு பீடியின்சமூக அங்கீகாரம்கிடைக்கவில்லை? இதற்கு இடதுசாரி அரசியல் காரணமாய் மலையாள சினிமாவில் அடித்தள மக்கள் பிரதானமாவதும், கேரள சமூகத்தில் பீடி அடித்தள மக்களின் ஒரு அன்றாட அடையாளமாக பார்க்கப்படுவதும் காரணம். அங்குள்ள அபூர்வ அரசியல் பண்பாட்டு சூழ்நிலை காரணமாய், பீடி புகைப்பது ஒரு சமூக ஒழுங்கு மற்றும் மரபு மீறலாக அல்ல ஒருவித அரசியல் பண்பாட்டுக் கலகமாய் அர்த்தம் பெறுகிறது.
தமிழ் ஹீரோயின்களும் சிகரெட்டும்
ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை, நம் தமிழ் சினிமாவில் பெண்கள் சிகரெட் புகைப்பது ஒரு சுட்டித்தனமான கலக விளையாட்டாக காட்டப்பட்டு வந்தது. நாயகி தன் தோழிகளுடன் சிகரெட் பிடிக்க முயன்று சிரமப்பட்டு இரும அதை நாயகன் கண்டு பிடித்து அவளை சீண்டுவதும் அந்த சீண்டலின் மூலம் அவளை அவன் நெருங்குவதும் இப்படங்களில் வரும் ஒரு டெம்பிளேட். “அக்னி நட்சத்திரத்தில்அமலா சிகரெட் பிடிக்க முயன்று பிரபுவிடம் மாட்டுவதாய் ஒருரொமாண்டிக்காட்சி வரும். “எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமியிலும்இதே போல அசினை ஜெயம் ரவி சிகரெட்டை வைத்து சீண்டி அடக்கும் காட்சி வரும். ஏன் இப்பெண்கள் மட்டும் சிகரெட் பிடித்தார்கள்? சிகரெட் பிடிக்கும் பெண்ணின் இயல்பாக நம் சினிமா எதைக் காட்டுகிறது?
பொதுவாக சற்றே விடலைத்தனமும் சுட்டியும் வேடிக்கை சுபாவமும் விளையாட்டுத் துணிச்சலும் கொண்ட பெண்கள் பாலியல் கவர்ச்சி மிக்கவர்கள். குறிப்பாய், ஆண்மை செருக்கு கொண்ட நாயகனுக்கு இத்தகைய பெண்கள் பொருத்தமாய் இருப்பார்கள். “இதயம்படத்தில் வாயில்லா பூச்சியான முரளிக்கு நாயகியாக வரும் ஹீரா சிகரெட் புகைத்தால் அது அவள் மீது வெறுப்பு உண்டாக்கும்படியாய் இருக்கும் அல்லது நாயகனின் ஆண்மையை வெகுவாய் மட்டுப்படுத்துவதாய் மாறும். ஆனால் ஏற்கனவே அடக்கி ஆளும் இயல்பும் உடல் வலுவும் கொண்டவனாய் இருக்கும் பாக்ஸரும் போலீஸ் அதிகாரியுமானஅக்னி நட்சத்திரம்பிரபுவுக்கு அவனைப் போன்றே துணிச்சலும் துறுதுறுப்பும் மிக்க ஒரு நாயகியை அடக்குவதே சவால். அங்கு வன்முறையும் பாலியலும் கைகோர்க்கிறது. காதலும் ஒரு சண்டைக்காட்சி போல ஆக அதற்கு கிக் கூடுகிறது. “எம். குமரனிலும்இதுவே நிலை. ஆக, இத்தகைய சிகரெட் பிடிக்கும் பெண்கள் ஆணை ஆதிக்கமிக்கவனாய் கூடுதலாய் காட்டவும், காதல் காட்சிகளில் கிளர்ச்சியை கூட்டவும் உதவினர்.
ஆனால் இந்த டெம்பிளேட் சமீபத்தைய படங்களில் வெகுவாய் மறைந்து விட்டது. இன்றுராஜா ராணிபோன்ற படங்களில் அமலா போன்ற ஆதிக்க சுபாவம் கொண்ட நாயகிஇதயம்முரளி போன்ற பிள்ளைப்பூச்சி நாயகர்களை நேசிப்பது அதிகம் வருகிறது. நாயகனை நாயகி மிரட்டுவதும் ஓட விடுவதுமே இன்றைய டெம்பிளேட். சமீபத்தில் வெளிவந்தபியார் பிரேமா காதல்”, “96” போன்ற படங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் நாயகிகளே மக்களால் ரசிக்கப்படுகிறார்கள்; அப்பிராணி நாயகனே கைத்தட்டு பெறுகிறான். அதே நேரம், இப்பெண்கள் ஒரு ஆணுடன் இரவில் ஒரே அறையில் தங்குவது, குடிபோதையில் உடலுறவு கொள்வது வரை காண்பிக்கப்பட்டாலும் சிகரெட் புகைக்கும் சித்தரிப்புகள் வருவதில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...