முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லூசிபர்



 lucifer
மோகன்லால் எத்தனையோ மட்டமான படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும்படியான படம்லூசிபர்”. சில விசில் பறக்கும் வசனங்கள், ஹீரோயிசம், இயக்குநரின் முத்தாய்ப்பான ஸ்டைலான அம்சங்கள் உண்டெனிலும் ஒட்டுமொத்தமாய் ஒரு மிகப்பெரிய கொட்டாவி இப்படம்.

 திரையரங்களில் எழும் கரவொலியை நான் சினிமாவுக்கானதாய் காணவில்லை - ஒருவித வறுமை, அலுப்பு அவர்களை ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் கூட எழுந்து துள்ள வைக்கிறது. ஒரு மோசமான படத்தின் அறிகுறி என்பது அது முடியும் போது பார்வையாளர்கள் சின்ன சோம்பலுடன் எழுந்து அரைத்தூக்கத்துடன் வெளியேறுவது. ஆனால் இந்த தூக்கச் சடவையும் மீறி மக்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதை ஏற்கிறேன். அதுவும் கூட மக்கள் இன்று உணர்ந்து வரும் பெரிய வறட்சியின் வெளிப்பாடு தான். ஏதாவது லைட்டாய், வண்ணமயமாய் ஸ்டைலாய் கொடுத்தால் அவர்கள் எழுந்து கூச்சல் போட, ஆ ஊ என குதிக்க, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள ஏங்குகிறார்கள்.லூசிபர்போன்ற படங்களை அப்படியான ஏக்கத்தை தணிக்கின்றன. 9-5 வேலை செய்து விட்டு எண்ணெய் வடியும் முகத்துடன் வீட்டுக்கு செல்ல விரும்பாமல் பாருக்கு போய் குடித்து விட்டு காபரே பார்க்க கிளம்பும் மனநிலை இது. இயக்குநர் பிரித்விராஜ் இதற்காக பெருமைப்பட ஒன்றுமில்லை. இப்படியான படங்களை எடுப்பதற்குப் பதில் அவர் 24 மணிநேர காபரே கிளப் ஒன்று நடத்துவது மேல் என்பதே உண்மை. ஒரு மோகன்லால் ரசிகனாய் என்னை அந்தளவுக்கு இப்படம் நோகடித்தது.

இப்படத்தின் கதை என்பது லட்சத்தி ஓராயிரம் தடவையாய் இந்திய சினிமாவில் காப்பி அடிக்கப்பட்ட அதே காட்ஃபாதர் கதை தான். மைக்கேலின் பாத்திரத்தில் பாஷாவை பொருத்தினால் வருவது தான்லூசிபரின்கதை. நடுநடுவே ஜெயலலிதா மரணம், ராகுல் காந்தி, கேரளாவின் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை நினைபடுத்தப்படுகின்றன. இப்படம் முன்வைக்கும் அரசியலும் போதனையும் கூட குழப்பமானது. ஸ்டீபன் எனும் குரேஸி எனும் லூசிபர் எனும்மோகன்லால்ஒரு ஆயுதக் கடத்தல் வியாபாரி என கடைசியில் தெரிய வருகிறது. பெரிய போதை மருந்து கடத்தல்காரர்களிடம் இருந்து அவர் கேரளாவை, இந்தியாவை காப்பாற்றுவதே அவரது ஹீரோயிசம். அப்படி இருக்க, அவர் ஆயுத வியாபாரம் செய்வதில் ஏற்படும் சேதங்களில் இருந்து உலகை யார் காப்பாற்றுவது? வரவர இப்படியான ஆபத்தான, தீமையும் ஒருவித நன்மையே என போதிக்கும் படங்கள் அதிகமாய் வருகின்றன. இந்த இயக்குநர்களுக்கு உண்மையிலேயே அறிவில்லையா அல்லது தெரிந்தே உளறுகிறார்களா?

இறுதியில் பிரித்விராஜ் போன்றோரை கூட மன்னித்து விடலாம். ஆனால்லூசிபரைவிழுந்து புரண்டு பாராட்டுபவர்களை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து இப்படத்தை 100 முறை தொடர்ந்து இடைவேளை கூட விடாமல் காட்ட வேண்டும், கதறக் கதற பதற பதற...


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
nice review. you saved me from watching this movie. Recently enjoyed 'Super Deluxe' and me & my wife wept at the final touching scene. Looking forward to your review of that movie. That director comes across to me almost as a karmayogi. what is your take on him and his recent interviews? thanks.
Renga
california

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...