முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரகாட்டக்காரன் செந்திலில் இருந்து “காணாமல்” போன அதிமுக எம்.எல்.ஏ வரை – பத்து நிமிட தெரிதா (6)


இருந்தும் காணாமல் போனவர் பற்றி சுவரொட்டி




இது மிக மிக சுவாரஸ்யமானது. ஏற்கனவே நாம் கண்ட சுவரொட்டிகள் நிஜமானவை, ஆனால் நிஜத்திலும் பல முரண்கள் கொண்டுள்ளவை என்பதால் அவை புனைவுத் தன்மை பெறுகின்றன. ஆனால் இது வெளிப்படையாகவே ஒரு புனைவு. பகடிக்காக, விமர்சன நோக்குடன் உருவாக்கப்பட்ட சுவரொட்டி இது. டாக்டர் முத்தையா பரமக்குடியை சேர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.. தினகரனின் சொகுசு பங்களாவில் அவர் மறைவில் இருந்த காலத்தில் அவர் அதிமுகவுக்குதுரோகம் இழைத்ததைவிமர்சிக்கும் பொருட்டுஅம்மாவின் உண்மை விசுவாசிகள்ஊரெங்கும் ஒட்டிய சுவரொட்டி இது. மற்றவை நிஜத்துக்குள் வரும் புனைவு என்றால் இவை புனைவுக்குள் வரும் புனைவு. ஆனால் இதிலும்நிஜம்எனக் காட்டும் எத்தனிப்பு உண்டு; கூடவே வெறும் (ஆனால் சற்றே கோபமான) விளையாட்டு தான் இது எனக் காட்டும் முயற்சிகள் / குறிப்பான்கள் இந்த சுவரொட்டியில் உண்டு. இந்த முரண்களை இதை எழுதியவரே உணர்ந்து ஆவேசமாய் வலியுறுத்துவதே இதை நகைச்சுவையான சுவரொட்டி ஆக்குகிறது. அந்தஅழுத்தமானஇடங்களைப் பார்ப்போம்.


இந்த பிரதியில்காணவில்லைஇரண்டு முறை தடிமனான எழுத்தில் கறுப்பு வண்ணத்தில் அழுத்தி சொல்லிப் படுகிறது. இது ஒருநிஜகாணவில்லை சுவரொட்டி எனும் தன்மையை கொடுக்கிறது. ஆனால் இதற்கு கீழே உடனடியாய் இது ஒரு விளையாட்டு என சுட்டும்படியாய்அம்மாவின் துரோகிஎனும் வாக்கியம் வருகிறது. ஆனால் இந்த விளையாட்டுக்குள் மற்றொரு முரணாய் அதிமுகவின் கறுப்பு-வெள்ளை-சிவப்பு வண்ணக்கலவைஅம்மாவின் துரோகி / Dr.முத்தையாஎனும் சொற்களில் தோன்றும்படி வடிவமைத்திருக்கிறார்கள். அதாவது இந்ததுரோகிஇன்னும் அதிமுகவில் தான் இருக்கிறார் பாருங்கள் என முரணாகவே ஒரு முரணை சுட்டுகிறார்கள். இதை அடுத்து, “M.L.Aவைஎன்பது சிறு எழுத்துக்களில் எந்த குறிப்பான பொருளுமற்ற நீல வண்ணத்தில் வருகிறது. இது அவரது பதவியை மெல்ல இன்மையை நோக்கித் தள்ளுகிறது.

கூடவேதொகுதி மக்கள் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்எனும் பகடி வாக்கியமும் வருகிறது. காணாமல் போனவரை கண்டால் தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்ணோ முகவரியோ இல்லை - இதன் பொருள் இதை எழுதியவரேதேடுதல் வேட்டையில் ஈடுபடும் தொகுதி மக்கள்என்பது. ஆனால் தொகுதி மக்கள் அனைவரும் அதிமுகவினரா? அப்படி இருக்க முடியாதே? அப்படி எனில் இந்த பிரதியின் எழுத்தாளன் யார்? அதிமுக நிர்வாகமா? .பி.எஸ், எடப்பாடியா? இருக்க முடியாது. அவன் இந்த இரண்டு தரப்பும் அல்லன் - அவனேஅம்மாவின் உண்மை விசுவாசி”. ஆனால் உண்மை விசுவாசி தொகுதி மக்களாகவோ கட்சியாகவோ கட்சி நிர்வாகமாகவோ அல்லாமல் இருந்தால் அவன் யார்? இந்த குழப்பமே இந்த பகடியை ஒரு சுயபகடியாகிறது. அதிமுகவின் இன்றைய நிலை பற்றி வாசிக்கும் பொதுவாசகன் இங்கு சிரித்துக் கொள்ளும் சாத்தியத்தை இந்த சுவரொட்டி (அந்நோக்கமின்றியே) ஏற்படுத்திக் கொடுக்கிறது.





இறுதியாக...

கட்டுடைத்தல் ஒரு விமர்சனக் கருவி அல்லஅது அர்த்தங்கள் ஒன்றையொன்றை முறியடிக்கும் ஒரு ஜாலியான விளையாட்டாக, ஒரு ஜாலமாக, லீலையாக வாழ்க்கையை காணும்படி நம்மை அழைக்கும் ஒரு மாற்றுப் பார்வை. கட்டுடைத்தலை புரிந்து கொள்வது நம் கட்டுக்களில் இருந்து விட்டு விடுதலையாவது. தெரிதா நம்மை உடைக்க கேட்பது நம் மீது கருத்துக்கள், நம்பிக்கைகள், சொற்கள் கொண்டுள்ள உடும்புப் பிடியை. இந்த பிடி வெறும் கட்டமைப்பு, அது சொற்கள் இருமைக்குள், முரண்பாடுகளுக்குள், பூடகங்களுக்குள் உருக்கொள்கின்றன, தன்னளவில் இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை என அறிய வரும் போது நாம் பாரதியைப் போலநீங்கள் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோஎன களிப்புடன் அனைத்து கட்டமைப்புகளையும், அவற்றின் கட்டுகளையும் நோக்கி வினவுகிறோம்அந்த வினா ஒரு களிவிளையாட்டின் துவக்கம்!

                                                                                                                             நன்றி: உயிர்மை, ஏப்ரல் 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...