முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய கிரிக்கெட் அணியின் காயங்களும் அணி சேர்க்கை சிக்கல்களும்

காயத்தினால் வெளியேறும் ஹர்த்திக் பாண்டியா


முன்பு எப்போதும் இவ்வளவு காயங்கள் இந்திய அணியை சீர்குலைத்துள்ளதாகத் தோன்றவில்லை - பந்து வீச்சில் ஷமி, பும்ரா காயத்துக்குப் பிறகு ஆட வந்துள்ளார்கள்; புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக கடந்த சில வருடங்களாகவே அணியில் அரிதாகத் தான் தென்படுகிறார். தீபக் சஹாரும் ஒரு நல்ல துவக்கத்துக்குப் பிறகு காயத்தினால் காணாமல் போய் விட்டார். அதன் பிறகு ரோஹித் ஷர்மா உடல்நிலை குறைபாடு காரணமாய் அடிக்கடி ஓய்வு அளிக்கப்பட்டு இன்றைய ஆட்டத்தில் மீண்டும் காயப்பட்டிருக்கிறார். தவனும் காயத்தினால் ஏற்பட்ட இடைவேளைக்குப் பிறகு ஆட வந்து மெல்ல மெல்ல நல்ல ஆட்டநிலையை எட்டி வருகிறார். ஆனால் அவரும் இன்று காயப்பட்டிருக்கிறார். அதே போல காயப்பட்டியலில் வேகவீச்சாளர் சயினியும் வேறு சேர்ந்திருக்கிறார்.

ஆல்ரவுண்டரான ஹர்த்திக் பாண்டியா முதுகுக்காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து இப்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.


 இவ்வளவு உள்ளே-வெளியேக்களுக்குப் பிறகு அணியில் ஒரு நிலையற்ற தன்மை வந்து விட்டது. விராத் கோலி சும்மாவே அணி வீரர்களை மாற்றுவார். இப்போது அவர் இங்கி-பாங்கி போட்டு கன்னாபின்னாவென மாற்றுகிறார். கொஞ்ச நாள் குல்தீப்பும் சாஹலும் இணைந்து பந்து வீசி ஆட்டங்களை நமக்கு வென்றளித்தார்கள் என்றால் பாண்டியாவின் காயம் காரணமாக ஏற்பட்ட தடுமாற்றத்தை இன்றும் இந்திய அணியில் உணர முடிகிறது. அவரிடத்து வேறு நல்ல ஆல்ரவுண்டர் சரியாக அமையாத காரணத்தால் ஜடேஜாவை தொடர்ந்து ஆட வைக்கிறார் கோலி. இரண்டு கால்சுழலர்களில் சாஹலையும் குல்தீப்பையும் மாற்றி மாற்றி ஆட வைக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா நன்றாகப் பந்து வீசினார் என்றாலும் ஆல்ரவுண்டராக அவர் நிரந்தரத் தீர்வாகத் தோன்றவில்லை.

 துவக்க மட்டையாட்டத்திலும் ராகுலும் ரோஹித்தும் இணைந்து ஆடும் வாய்ப்பு தவனின் காயத்தினால் ஏற்பட்டது. அவர்கள் அபாரமாக டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20யில் ஆடினார்கள். ஆனால் தவன் திரும்ப வந்த பின் கோலி ராகுலை ஒரு போட்டியில் எண் 3இல் ஆட வைத்து அடுத்த ஆட்டத்தில் எண் 5க்கு அனுப்பினார். அதோடு ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தினால் அவரிடத்தில் ராகுல் கீப்பராகும் தேவையும் ஏபட்டது. அதிர்ஷடவசமாக இந்த மாற்றம் நல்ல முடிவுகளைத் தந்தது. ராகுல் எண் 5இல் அபாரமாக ஆடுகிறார். அவரது கீப்பிங்கும் நன்றாக உள்ளது. இப்போது கோலி செய்ய வேண்டியதெல்லாம் மேலும் குழப்பிக் கொள்ளாமல் ராகுலை தொடர்ந்து அந்த எண்ணிலே கீப்பராக ஆடச் செய்வதும் பண்டை பேட்ஸ்மேனாக மட்டுமே நடத்துவதும் தான்.
இந்த மியூசிக்கல் சேர் அணி மாற்றங்களுக்கு இடையில் நிரந்தரமாக இருப்பது (கோலிக்கு அடுத்தபடியாய்) ஆச்சரியமாக கேதார் ஜாதவ் தான். ஆடுகிறாரோ இல்லையோ எப்படியோ 15 பேர் அணியில் இடம்பெற்று விடுகிறார். அஜய் ஜடேஜா சொல்வது போல ஜாதவின் இடம் கேலிக்கூத்தாக மாறி உள்ளது. இன்று அவரை ஆட வைக்க வாய்ப்பிருந்தும் கோலி பாண்டேவைத் தான் கொண்டு வந்தார். எனில் அவர் ஏன் அணியில் இருக்க வேண்டும்? அவரது பந்து வீச்சு மோசமாகி விட்டது. மட்டையாட்டத்திலும் ஆவேசம் இல்லை. ரொம்பவே தடவுகிறார். களத்தடுப்பு சுத்த வேஸ்ட்.வயதும் 35 ஆகி விட்டது. அவர் அணியில் ஒரு திருஷ்டிபொம்மையைப் போல் இருக்கிறார். எல்லாரிடத்தும் இணக்கமாக அன்பாக. ஆனால் அதற்காக அவரை அணியில் வைத்திருப்பது ஒரு அபத்தம்.
 ஜாதவின் இடத்தில் கர்நாடக அணியில் ஷ்ரேயாஸ் கோபாலைக் கொண்டு வரலாம். அவர் ஆல்ரவுண்டர். கால்சுழல் வீச்சில் குல்தீப்புக்கு நல்ல இணையாக இருப்பார். நல்ல பேட்ஸ்மேனும் கூட. இளைஞர் என்பதால் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஒரு நல்ல முதலீடாக இருப்பார்.

அடுத்த ஆட்டம் பெங்களூரில். அதுவே இறுதிப்போட்டி. அதில் தோற்றால் இந்தியா இந்த ஆட்டத்தொடரை இழந்து விடும். ஆகையால் அணிசேர்க்கை துல்லியமாக இருக்க வேண்டும். தவனும் ரோஹித்தும் காயத்தில் இருந்து மீள்வார்கள் எனத் தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இதுவே என் அணி:

ரோஹித்
தவன்
கோலி
ஷ்ரேயாஸ் / பாண்டே
ராகுல் (கீப்பர்)
ரிஷப் பண்ட்
ஜடேஜா
குல்தீப்
ஷமி
சயினி
பும்ரா



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...