முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் உடலை மட்டும் கேட்க முடியாது



யாத்ரி பெண்களிடம் உடல் விழைவை ஆண் நேரடியாகவே வெளிப்படுத்த வேண்டும் எனும் தொனியில் சிலாக்கியமாக மெத்துமெத்தென எழுதிய அந்த பேஸ்புக் பதிவு எத்தனை விதமான பார்வைகளை, மறுப்புகளை, பாராட்டுகளை கடந்த சில நாட்களில் கடந்து வந்திருக்கிறது எனப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறது (மனுஷ் கூட அதைப் பற்றி ஒரு கவிதை எழுதி விட்டார்) - இவ்வளவு விவாதிக்க அதில் ஒன்றுமே இல்லை என்று எனக்கு அதை துவக்கத்தில் படித்த போதே தோன்றியது.

 ஒரு பெண்ணிடம் கடலை போட நினைக்கும் ஆண் தன் இச்சையை முடிந்த அளவுக்கு மறைக்காமல் இருக்க வேண்டும் இல்லையெனில் பெண்கள் இவர்களை friend zoneக்கு அனுப்பி விடுவார்கள் என நிறைய டேட்டிங் பத்தியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஒருமுறை friend zoneக்கு போய் விட்டால் பிறகு மீள முடியாது. இதில் கலவரத்தை உன்டு பண்ணும் விவகாரம் ஒன்றும் இல்லை. ஆனால் இது இக்கருத்து இவ்வளவு விவாதிக்கப்பட்டதற்கு ஒரு காரணம் யாத்ரி இதை சமூக வலைதள அரட்டைகளில் விடுக்கப்பட்டும் காதல் தூதுகளுக்குப் பொருத்துகிறார் என்பது. அது பலரையும் சீண்டி விட்டது; கிளுகிளுப்பான ஒரு சிந்தனையோட்டத்துக்கு முகாந்திரம் தந்தது.
 பேஸ்புக்கில், உதாரணமாக, பெண்களை அடையும் நோக்குடனே பலரும் கணக்கைத் தொடங்குகிறார்கள். அவர்கள் அதிகமாய் எழுதவோ பகிரவோ மாட்டார்கள். இந்த ஸ்லீப்பர் செல்கள் பேஸ்புக்குக்கு வெளியே ஒரு வளமான வலைதொடர்பை உருவாக்கி ஜாலியாக இருப்பார்கள். இன்பாக்ஸை விட்டால் வேறு உலகமே இந்த ஸ்லீப்பர் புலிகளுக்குத் தெரியாது. எந்த தயக்கமும் இன்றி எல்லா பெண்களையும் நள்ளிரவில் கூடஹைபோட்டு தொந்தரவு பண்ணுவது, எல்லாரையும் முயற்சி பண்ணிப் பார்ப்பது என மிக மிக தீவிரமாக இருப்பார்கள். கடும் இறுக்கத்தில் இருக்கும் பெண்களில் பலரும் இந்த சமூக வலைதளங்கள் தந்த சுதந்திரத்தால் புதுப்புது உறவுகளை இப்போது பரிசீலிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த வகையான டேட்டிங் என்பது காதலுக்கானது அல்ல. இதில் ஈடுபடுகிறவர்கள் வெகுதெளிவாக இருக்கிறார்கள். இதைத் தான் யாத்ரி சொல்ல வருகிறார் என புரிந்து கொண்டேன். அவர் இதைச் சொன்னதும் இந்த திறந்தநிலை பாலியலை வசதியாக பேச நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்து விட்டது - அவரைத் திட்டியோ பாராட்டியோ மறுத்தோ இந்த பாலியல் பிரளயத்தை கடந்த சில நாட்களாக பரிசீலித்து வருகிறோம்

சி.எஸ்.கே சொல்வதைப் போல யாத்ரி இந்த விவகாரத்தை ரொம்பவே மிகையாக ரொமாண்டிக்காகப் பார்ப்பதாகவே நினைக்கிறேன் - வெளிப்படையாக செக்ஸ் பற்றி நாம் இன்று பேசலாம், ஆனால் முழுக்க செக்ஸை மட்டுமே முன்வைத்த, எந்த உணர்வுப் பற்றுதலும் இல்லாத one-night standகளுக்கு நம் சமூகம் தயாராகவில்லை என்பதே உண்மை. கள்ள உறவுகளில் கூட நமது ஆட்கள் ஒரு மனச்சாய்வுடனே இருக்கிறார்கள். நமக்கு உடல் மட்டுமே போதாது; உடலுடன் நமக்கு மனரீதியான ஆறுதல்கள், தோள் அணைப்புகள், நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள் தேவையாக உள்ளன. அதனால் தான் திருமணமானவர்கள் கள்ளக்காதலில் ஈடுபடும் போது அது அம்பலமாகும் போது இரு பெண்கள் ஒரு ஆணுக்காக பொதுவெளியில் அடித்துக் கொள்வதை, பக்கம் பக்கமாய் வசையை எழுதுவது, காணொளிகளில் ஒப்பாரி வைப்பதை எல்லாம் பார்க்கிறோம். பொஸஸிவ்னெஸ் இல்லாமல் டிஷ்யூபேப்பர் போல பாலுறவுகளைக் கையாள நம் சமூகம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை - ஒருவிதமான களங்கமின்மை இன்னமும் நம் மக்களிடம் இருக்கிறது; சமூகவலைதளங்களில் நம்மவர்கள் நாடுவது ஒரு மாற்றுக்கணவனை, மாற்று மனைவியை, மாற்றுக் காதலியை, மாற்றுக்காதலனை; அதிக இடையூறு இல்லாத ஒருஉண்மையானஉறவை. ஒரு பெண் தன்னிடம் வரும் ஆணுடன் படுக்க விரும்பலாம்; ஆனால் அவன் அவளைஉடலாகமட்டுமே காண்பதாய்த் தோன்றினால் அவள் காயப்படுவாள். செக்ஸுடன் உணர்வுரீதியான அங்கீகாரத்தை அவள் விரும்புவாள்.

 நம்முடைய ஓரிரவு உறவுகள் இப்படி இருக்கையில் நீங்கள் செக்ஸை வெறும் உடல் சம்மந்தமான விசயமாக நம்மூரில் பார்க்க முடியாது என நினைக்கிறேன்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...