முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாசிசத்தை எதிர்கொள்ள சிறந்த வழி



தலைமை நீதிபதி ரஞ்சன் கொகோய்க்கு அடுத்ததாய் அரவிந்த் கேஜ்ரிவாலின் குடுமியும் பாஜகவின் கைகளில் இப்போது. அவர் பிரதமரை சந்தித்த பிறகு பேசுகிற குழைவாக விதத்தைப் பார்த்தால் கம்பளிப்பூச்சி ஊர்கிற உணர்வு ஏற்படுகிறது. இந்த மனிதர் அண்மையில் மாநிலக் தேர்தலில் வென்றதற்காக இத்தனை பேர் கொண்டாடினார்கள்? ஒரு கம்பளிப்பூச்சியையா வீரரென கொண்டாடினீர்கள்

வரும் காலங்களில் மைய அரசு விசாரணை அமைப்புகள், பெண்கள் உள்ளிட்ட தனிமனிதர்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது போலிக்குற்றச்சாட்டுகளை புனைவதை தடை செய்வதுடன் இப்படி சோரம் போகிற அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்இப்படியான நிலை எதிர்காலத்தில் இன்னும் மோசமான பாசிசமாக உருவாகாமல் இருக்க ஒரு வழி நமது அரசியலமைப்பில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவது:
1) ராணுவம், தில்லி காவல்துறை, சி.பி., புலனாய்வுத் துறை போன்றவற்றை மைய அரசின் நேரடிப் பொறுப்பில் இருந்து விடுவித்து அரசுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளதற்காக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட சில உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசு மீது கடும் விமர்சனம் கொண்ட போராளிகள், அறிவுஜீவுகள், மற்றும் எதிர்க்கட்சி தலைமை ஆகியோரால் உருவான ஒரு குழுவின் கீழ் இந்த அமைப்புகள் கொண்டு வரப்பட வேண்டும். இதன் மூலம் எவ்வளவு பெரும்பான்மை இருந்தாலும் அரசு என்பது சர்வாதிகாரம் இல்லாத ஒரு நிர்வாக அமைப்பாக மாற்றப்பட வேண்டும். ஆனால் இந்த குழுவும் எந்த ஒரு அதிரடி முடிவை எடுக்கும் முன்னரும் மைய அரசுக்கு ஆதரவான குறிப்பிட்ட சில மாநிலங்களில் கருத்துக்கணிப்பு நடத்தி 90% ஒப்புதலை பெற வேண்டும்
2) அதே போல பாராளுமன்றத்தில் எந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பும் அம்முடிவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநிலங்கள் அனைத்திலும் உள்ள 90% மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அவர்களின் அனுமதி பெற்ற பிறகே அதை நிலுவைக்கு கொண்டு வர அரசால் முடிய வேண்டும். அதாவது காஷ்மீரின் தலைவிதியை மாற்றும் ஒரு சட்டத்தைக் கொண்டு வர நீங்கள் முதலில் அம்மாநிலத்து மக்களில் 90% பேரின் அனுமதி பெற வேண்டும்
3) ஒரு மாநிலத்தில் எமெர்ஜன்ஸியைக் கொண்டு வர, ஆட்சியைக் கலைக்கவும் கருத்தும் கணிப்பு நடத்தப்பட வேண்டும்.
4) ஒற்றைத் தேர்தல் மூலம் நாட்டின் தலைவிதியை ஒரு கட்சியிடம் ஒப்புக் கொடுக்கும் அபத்தமான முறையையும் மாற்ற வேண்டும். அதற்கு மாற்றாக இதை செய்யலாம்: ஒரு கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் எங்கெல்லாம் அந்த ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடக்கிறதோ அந்த மாநிலங்களில் மட்டுமே கருத்துக்கணிப்பு நடத்தி ஆட்சியை மதிப்பிடக் கேட்க வேண்டும். அதற்கு ஏற்ப புள்ளிகள் தொகுக்கப்பட வேண்டும். இப்புள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்து கொண்டே வரும். முதல் சில ஆண்டுகளில் மிகக்குறைவாக புள்ளிகளைப் பெறும் கட்சி அடுத்த கால் நூற்றாண்டுக்கு நாடெங்கும் தடை செய்யப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் அரைநூற்றாண்டுக்கு எந்த கட்சியிலும் செயல்பட முடியாத படிக்கு தடை செய்யப்பட வேண்டும். அவர்களின் ஆட்சியும் கலைக்கப்பட்டு அடுத்து தேர்தல் நடத்தத்தப்பட வேண்டும். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் காஷ்மீரிலும், வடகிழக்கிலும், தமிழகம், கேரளாவிலும் குறைவான புள்ளிகளை இவ்வாறு வாங்கும் அரசு தேர்தலின் போது அதிகபட்ச ஓட்டுகள் பெற்று நிறைய இடங்களை வென்றாலும் அதனால் அடுத்து ஆட்சி அமைக்க முடியக் கூடாது. வடக்கு இந்தியாவை மட்டுமே ஆதரிக்கிற, தெற்கையும் விளிம்புநிலை மாநிலங்களையும் ஒடுக்குகிற ஆட்சியை எந்த மத்திய அரசும் நடத்த முடியாமல் போகும். மத்தியில் ஆள்கிறவர்கள் எல்லா மாநிலங்களுக்கும், எல்லா தரப்பு மக்களுக்கும் சாதகமானவர்களாகவே இருந்தாக வேண்டும்தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு வரை மக்கள் விரோத நடவடிக்கைகளை ஒரு அரசு எடுத்து விட்டு, தேர்தலுக்கு சற்று முன்பு பாகிஸ்தானுடன் ஒரு போரைக் கொண்டு வந்து மக்களின் மனநிலையை சாதமாக தம் பால் திருப்பவும் முடியாது (ராணுவம் தாம் அவர்களின் கையில் இருக்காதே). 

இவ்வளவு தடையரண்களை வைத்தால் அரசு செயல்படாமல் போய் விடுமே என நீங்கள் கேட்கலாம் - ஒரு பாசிச அரசு தோன்றி தெருவில் திரளும் மக்களின் மாரில் குண்டைப் பாய்ச்சுவதை விட, நூலகத்துள் நுழைந்து மாணவர்களின் தலைகளை லத்தியால் உடைப்பதை விட, பணமதிப்பிழப்பு சட்டத்தை இரவோடு இரவாக கொண்டு வந்து மக்களை பிச்சைக்காரர்கள் ஆகுவதைக் காட்டிலும் வெறுமனே நிர்வாகத்தை மட்டும் கவனிக்கிற ஒரு அரசு மேலானது.

  பாஜகவை தோற்கடிப்பதால் நாளை பாசிசம் முழுமையாக அழியாது என இன்று பலரும் பேசி வருகிறார்கள். இது உண்மை. கேஜ்ரிவாலின் அரசியல், இன்று காங்கிரஸ் கட்சி இந்துத்துவாவை மென்மையாக கையாள்கிற பாணி இதற்கு ஒரு உதாரணம். இந்த அரசு ஏற்படுத்தி உள்ள பாசிச பாதிப்பானது பல பத்தாண்டுகள் இங்கு சலனங்களை விட்டுச் செல்லும். நமது அரசியல் சட்ட அமைப்பை மாற்றி அமைத்து, எதிர்காலத்தில் ஆளும் மைய அரசுகளை நிர்வாக அரசுகளாக மட்டுமேபலவீனப்படுத்திவைப்பதே மக்களுக்கு பாதுகாப்பைத் தரும்.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...