முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹைடெக்கர் குறிப்புகள் (2)



ஹைடெக்கரின் வாழ்க்கை:


  • 1889இல் மெஸ்கிரிச் எனும் அமைதியான, சம்பிரதாயமான, மதரீதியான நம்பிக்கைகளை வலுவாகக் கொண்ட ஒரு சிறுநகரத்தில் ஹைடெக்கர் பிறந்தார். இந்த ஊர் அவரது பிற்காலத்தைய தத்துவத்தில் ஒரு தாக்கம் செலுத்தியது.
  • 1909இல் அவர் இரு வாரங்கள் ஏசு அவையினரின் (Jesuit) மடத்தில் சேர்ந்து விட்டு விலகினார்.
  • அடுத்து ப்ரீபெர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் படிக்க சேர்ந்தார். 1911இல் இறையியலை விடுத்து தத்துவத்தில் சேர்ந்தார்.
  • 1915இல் ப்ரீபெர்கில் பேராசிரியர் ஆனார்.
  • 1917இல் மணம் புரிந்து இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அவர் தனது மாணவியான ஹானா ஆரிண்டுடன் (பிற்காலத்தில் The Origins of Totalitarianism, The Human Condition போன்ற முக்கிய தத்துவ நூல்களை எழுதியவர்.) காதல் உறவில் இருந்தாலும் இதனால் அவரது திருமண உறவு முறியவில்லை. இறுதி வரை நீடித்தது.
  • ஹைடெக்கரை அவர் எழுதத் துவங்கியது முதலான காலத்தில் சில தத்துவவாதிகள் தீவிரமாக பாதித்தனர்:
  • முதலில் அரிஸ்டாட்டில். அவர் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இருப்பு உண்டா என முதன்முதலில் வினவியவர் - ஒரு கல்லுக்கு, ஒரு ஆப்பிளுக்கு, ஒரு மரத்துக்கு. இங்கிருந்து அவர் ஒவ்வொன்றுக்கும் ஒரு சாரம் உண்டா எனக் கேட்டார். This is a book என்றால் எது அதில் உள்ள “is”, அதன் isness தீர்மானிக்கிறது எனக் கேட்டார். ஒரு பொருள் அதுவாக இருப்பதற்குக் காரணமான இயல்புகள் என்னவெனக் கேட்டார் (being qua being). இதை பொதுமைப்படுத்த முயன்றார். அரிஸ்டாட்டில் மெய்யியல் குறித்து எழுதியவையே ஹைடெக்கரை phenomenology, ontology நோக்கி, மானுட இருப்பு நோக்கி ஈர்த்தது. ஹைடெக்கர் பிற்காலத்தில் அரிஸ்டாட்டிலை மறுத்து கடந்து சென்றாலும் துவக்கப் புள்ளி இதுவே.
  • அடுத்து இம்மானுவல் காண்ட், சோரன் கீர்க்கெகார்ட், நீட்சே போன்ற தத்துவஞானிகள் இவரைப் பெரிதும் பாதித்தனர்.
  • அடுத்த படியாய் ஆனால் மிக முக்கியமாய் phenomenologyயின் தந்தையாக அறியப்படுகிற ஹசர்ல். ஹசர்ல் 1915இல் ப்ரீபெர்க் பல்கலையில் பேராசிரியானார். 1919இல் ஹைடெக்கர் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார்.  
  • 1923 முதல் 1928 வரை மார்பெர்க் பல்கலையில் தத்துவப் பேராசிரியாக மிகவும் பெயர் பெற்று விளங்கிய ஹைடெக்கர் ஹசர்லின் ஓய்வுக்குப் பின்னர் ப்ரீபெர்க் பல்கலைக்குத் திரும்பி அங்கு ஹசர்லி இடத்தை எடுத்துக் கொண்டார்.
  • அங்குதான் அவர் தனது மிகச்சிறந்த தத்துவப் படைப்பான Being and Time நூலை எழுதினார், இதை தனது குருநாதரான ஹசர்லுக்கு அர்ப்பணித்தார்.
  • Being and Time புத்தகம் ஹைடெக்கரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. இது சார்த்தரின் இருத்தலியம், தெரிதாவின் கட்டுடைப்பு கோட்பாடு போன்ற புதிய தத்துவத் திறப்புகளுக்கு வழிகோலியது.
  • 1933இல் ஹைடெக்கர் ஹிட்லரின் நாசி கட்சியில் இணைந்தார். அடுத்து அவர் ப்ரீபெர்க் பல்கலைக்கழகத்தின் தலைவராக (rector) நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் அவர் ஹிட்லரின் கொள்கைகளை பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மாற்றுவதன் வழி மாணவர்களிடம் கொண்டு சேர்த்தார் எனக் கூறப்படுகிறது.
  • 1933இல் ஹைடெக்கர் எடுத்த முடிவு அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பிற்காலத்தில் அவர் மிக மோசமான இழிப்பெயரை இதனால் பெற்றார். இது அவர் எடுத்த மிகத் தவறான முடிவு எனலாம் - நாசிசம் நவீனத் தொழில்நுட்பத்தின் சீரழிவுகளில் இருந்து ஜெர்மனியைக் காப்பாற்றும், மக்கள் மீண்டும் ஒரு தேசியவாத எழுச்சியில் ஒரு கூட்டு சமூகமாக உணர்வது அவர்களை மறுமலர்ச்சி அடைய வைக்கும் என அவர் நம்பினார். அதாவது தனது தத்துவ நம்பிக்கைகளை நாசிக் கட்சி மூலம் செயல்வடிவுக்கு, நிலுவைக்குக் கொண்டு வரலாம் என அவர் நம்பினார். ஆனால் ஹிட்லரோ யூத வெறுப்பு, அதன் மூலம் அண்டை நாடுகளைக் கைப்பற்றுவது, சர்வாதிகாரம் மூலம் ஆட்சியில் நீடிப்பது என மற்றொரு பாதையில் சென்றார். தத்துவமும் நடப்பு அரசியலும் வேறு வேறு எனும் அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஐயப்படாமல் இருந்ததே ஹைடெக்கரின் முக்கிய தவறு. அதே நேரம் அவர் யூத வெறுப்பை, இனவாதத்தை ஏற்கவில்லை. ஆனால் நாசிக் கட்சி உறுப்பினர் எனும் பெயர் அவரது தத்துவத்திற்கு இனவாத சாயலைக் கொண்டு வந்தது ஒரு துன்பியல் நிகழ்வாகும்.
  • 1934 முதல் அவர் நாசிக் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார், ஆனால் கட்சியில் இருந்து விலக வில்லை.
  • உலகப்போர் முடிந்து ஹிட்லர் கொல்லப்பட்ட பின்னர் நாசி களையெடுப்புக் குழு ஒன்று விசாரணை மேற்கொண்டு ஹைடெக்கரை ஆசிரியப் பணியில் இருந்து தடை செய்தது.
  • 1949இல் அவர் மீதான தடை விலக்கப்பட்டது.
  • 1976இல் அவர் காலமானார்; சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...