முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹைடெக்கர் குறிப்புகள் (5)


இருவிதமான இருப்புகள் - Being vs being:


Being என்பதை தமிழில் நாம் இருப்பு என மொழியாக்கினாலும் ஹைடெக்கரின் தத்துவத்தில் ஒரு சிக்கல் வருகிறது. அவர் தனது கட்டுரைகளில் இரண்டு விதமான beings பற்றிப் பேசுகிறார்: ஒன்று சிறிய b வருகிற being, மற்றொன்று பெரிய B. 1) being - பல்வேறு பொருட்களின் இருப்புகள், பல்வேறு இடங்களில் காலங்களில் நமது இருப்புகள். 2) Being - இதையெல்லாம் மொத்தமாய் வைத்து உலகில் நமது இருப்பு என ஒரு இருப்பை வகைப்படுத்துகிறார். இது Being. ஆனால் இது ஒரு தனித்த மீபொருண்மை நிலை அல்ல (நமதுபரம்பொருளைப்போல), மாறாக உலகு, அதிலுள்ள பொருட்கள் மற்றும் உயிர்கள், அவை இருக்கும் காலம் ஆகியவற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத இருப்பே இந்த Being.



ஹைடெக்கர்: மரணத்தின் இருப்பு


 மரணம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அதுவரையில் யாருமே கற்பனை செய்திராதவை. “மரணம் என்பது முடிவல்ல, அதுவே இருப்புஎன அவர் கருதியதை எப்படிப் புரிந்து கொள்வது? மரணத்தில் இருந்தே வாழ்வு துவங்க முடியும் என அவர் ஏன் சொன்னார்?


ஒரு குழந்தை பிறக்கும் போதே மரணத்தை நோக்கித் தான் பிறக்கிறது - அதாவது குழந்தை + எனும் குறியிடும் அல்லஎனும் குறியுடனே பிறக்கிறது. அது வளர வளர அதற்கான காலம் குறைந்தபடியே போகிறது. அதாவது ஒரு இடத்துக்குப் பயணிக்கும் போது துவக்கத்திலேயே பாதி பணத்தை செலவழித்து விடுகிறோம். இனி பாதி பணத்தைக் கொண்டு சிக்கனமாகவே வாழ வேண்டும். ஆனால் இந்த பணம் எவ்வளவு நாட்கள் வரும் எனத் தெரியவில்லை, தினம் தினம் அந்த பயத்துடனே வாழ நேர்கிறது. இதை outstanding being என ஹைடெக்கர் குறிப்பிடுகிறார். அதாவது கடனாகப் பெற்ற இருப்பு. முழுமையற்ற நமது இருப்பு நமது பெரும் சுமையாக இருக்கிறது. மரணத்துடனாவது அது முழுமை பெறுமா?


ஆம் முழுமை பெறும், ஆனால் அப்போது நம் வாழ்க்கை, நமது இருப்பு முடிந்து போகும், நமது முழுமையை அனுபவிக்க, அதன் இருப்பில் இருக்க நாம் இருக்க மாட்டோம். இந்த முரணை ஹைடெக்கர் தனது The Possibility of Experiencing the Death of Others and the Possibility of Grasping Da-stein as a Whole எனும் கட்டுரையில் அற்புதமாக விளக்குகிறார்.


இந்த கட்டுரையின் இறுதிப் பகுதியில் அவர் மனிதன் தன் மரணத்தின் முழுமையின்மையை உணர்ந்து அதனால் தொந்தரவுக்கு உள்ளாவதாலே ஈமச்சடங்குகளுக்கு இவ்வளவு இடமளிக்கிறான் எனச் சொல்கிறார் - தன்னால் அனுபவிக்க முடியாத மரணத்தின் பயணத்தை அவன் நாடகமாக்கி, ஒரு சடங்காக்கி நிகழ்த்துகிறான், அதில் பங்கேற்று தன் வாழ்க்கைக்கு ஒரு முழுமையை உண்டு பண்ண முயல்கிறான்.


ஹைடெக்கர் காலத்தை எப்படிப் பார்க்கிறார்?


காலம் என்பதை பிளேட்டோவுக்குப் பின்பு, பிளேட்டோவுக்கு முன்பு என ஹைடெக்கர் பிரித்துக் கொள்கிறார். காலத்துக்கு ஒரு சாரத்தை, ஒரு முற்றுமுழுமையை, தொடர்ச்சியை அளிக்கும் போது பிற்கால கிரேக்க தத்துவத்திலே துவங்குகிறது. ஆனால் ஆரம்ப கால கிரேக்கர்கள் காலத்தை தமது இருப்பின் ஒரு பகுதியாக (தமக்கு வெளியே அல்ல) பார்த்தார்கள். மேலும் ஆதி கிரேக்க மொழியில் முற்காலம், சமகாலம், எதிர்காலம் எனும் பகுப்பு இல்லை, அவர்கள் அதிகமும் தொடர்வினையைக் (continuous tense) கொண்டே பேசினார்கள் என ஹைடெக்கர் ஒரு இடத்தில் சொல்கிறார். பழங்கால கிரேக்கத்தில் ஒருவர் நடக்க மாட்டார், நடந்தபடியே இருப்பார், சிரிக்க மாட்டார், சிரித்தபடியே இருப்பார். இது கேட்க விளையாட்டுத்தனமாக இருந்தாலும் இதில் பொருள் உண்டுசிறு தருணங்களிலே நமது இருப்பு உள்ளது, அப்போது நான் இருந்து கொண்டிருக்கிறோமே ஒழியஇருப்பதுஇல்லை. ஹெராக்ளிடஸின் மேற்கோளானநீங்கள் ஒரே நதியில் திரும்ப கால் வைப்பதில்லைஎன்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்


காலம் இப்படி ஒவ்வொரு கணத்துக்கும் முழுமையானதாக இருப்பதாலே நம்மால் அதைக் கடந்து இருப்பை அறிய முடிவதில்லை என ஹைடெக்கர் சொல்கிறார் - இதை ஹைடெக்கர் நோக்குக்கு நாம் எப்படி சிரிக்கிறோம் என்பதை வைத்து விளக்குகிறார். ஒரு ஜோக்கைக் கேட்டு அதைப் பரிசீலிக்கநேரம்இல்லாததாலே சிரிக்கிறோம், யோசிக்க நேரமிருந்தால் சிரிக்க மாட்டோம்.


கருத்துகள்

G. கோபி இவ்வாறு கூறியுள்ளார்…
ஹைடெக்கர் பற்றிய தத்துவக் கட்டுரை வாசிப்பதற்கு ஆர்வமாக இருந்தது. மேலும் ஹை டெக்கரை எனக்கு அறிமுகப் படுத்திய உங்களுக்கு நன்றிகளும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். By கோபி (8675871151)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...