முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜகவின் நரைமயிர்கள் அம்பலமாகின்றன



கடந்த சில மாதங்களில் மட்டுமே பாஜக அரசு மிகத்தவறான நிர்வாக, கொள்கை முடிவுகளை எடுத்தது - கொரோனா ஊரடங்கு, புலம்பெயர் தொழிலாளர்களை நெடுந்தொலைவு நடந்து சாகடித்தது, அதன் பின் எல்லையின் சீனவீரர்களின் உருட்டுக்கட்டை தாக்குதலுக்கு நிராயுதபாணியாக இந்திய வீரர்களை நிற்க வைத்து பலிகொடுத்தது - இந்தக் குழப்படிகளை, அபத்தான, தேசநலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதில் அண்மையில் மோடியின் கால்வன் எல்லை திகிடுதித்தத்தை ராகுல் காந்தி கடுமையாய் பகடி செய்து அவர் நரேந்தர் கொடியல்ல Surender Modi (சரண்டர் என்பதன் கேலிச்சொல்) என ட்வீட் செய்தது பெரிதும் மக்கள் கவனத்தைப் பெற்றது. 20,000 விருப்பக்குறிகளைப் பெற்றது, 8000 பேர் இதை மறு-டிவீட் செய்தனர். அத்துடன் இந்த மோடி அரசு தன் நிதானத்தை இழந்தது; பாஜக கறுப்புச்சாயம் பூசி மறைத்து வந்த நரைமயிர்கள் புலனாகி விட்டன; பாஜக பல்லிளித்து தன் வயோதிகத்தைக் காட்டுகிறது. அதன் விளைவுதான் காங்கிரசுக்கு எதிரான் அதன் பல அபத்தமான விமர்சனங்கள். இப்போது பதினாலு வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் அரசின் ராஜீவ்காந்தி அறக்கட்டளை சீனாவிடம் இருந்து நன்கொடை பெற்றதாக, அதைஊழல்’, ‘தேசவிரோதம்என்றெல்லாம் கூறி பாஜக இப்போது சாடுகிறது. பதினாலு வருடங்கள்! இந்த அறக்கட்டளைக்கான நன்கொடை விசயத்தில் காங்கிரஸ் ஊழல் செய்துள்ளதா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை, அது தேசத்துரோகம் என்று அறுதியாக சொல்லவும் முடியாது, ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சியின் போது எந்த சீனப்போரும் நடக்கவில்லை. இப்போதுள்ளதைப் போல அரசால் ஆயுதம் பறிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் சீனப்படையால் அடித்துக் கொல்லப்படவில்லை. பாஜக தன் நிர்வாணத்தை மறைக்க என்னவெல்லாமோ சர்க்கஸ் வித்தைகள் காட்டுகிறது. அதில் ஒன்றே இது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


எனக்கு இதில் வினோதமாய் பட்டது ஏன் ஒவ்வொரு முறை தன் நிர்வாகக் குளறுடிகள், சீர்கேடுகள் பற்றி பேச்சு வரும் போதும் மோடி அரசு காலத்துக்குப் பின்னால் சென்று காங்கிரஸை குற்றவாளியாக மீண்டும் மீண்டும் நாமம் சாத்துகிறது என்பது. இப்போது நாட்டை ஆள்வது பாஜகவா காங்கிரசா? எப்போதெல்லாம் கொண்டாட்டமோ அப்போதெல்லாம் தானே ஆள்வதாய் மோடி மாரைத் தட்டிக்கொள்வார்; எப்போதெல்லாம் அவரது பெருந்தவறுகள் அம்பலப்படுகிறதோ, பொருளாதாரம் சீர்குலைகிறதோ அப்போதெல்லாம் காங்கிரஸே நாட்டைஆள்வதாய்அவர் கூறுவார். இந்த காலத்தைப் பின்னோக்கி இழுக்கும் கோமாளிப் பேச்சு பாஜகவுக்கு ஒன்றும் புதிதல்ல.


இது இரண்டு விசயங்களைக் காட்டுகிறது:


1) மோடிக்கே உண்மையில் தன்னால் தேசத்தை ஒரு நிர்வாகியாக சிறப்பாக ஆள முடியும் நம்பிக்கை இல்லை. தமது வலிமை கலாச்சார அரசியலே என மோடி நம்புகிறார்; மோடி ஒரு பண்பாட்டுத் தலைவர்; ஒவ்வொரு கிராம எல்லையிலும் இருக்கும் எல்லைச்சாமியைப் போல ஒரு குறியீடு; நன்றாக ஆடை அணிந்து பிரமாதமாய் மேடையில் பேசுகிற ஒரு சோளக்கொல்லை பொம்மை; அவர் செய்வதெல்லாம் - இந்துப் பெருமைகளை கட்டமைப்பது, சிறுபான்மையினரை ஒழிப்பது, இமயத்தில் தவமிருப்பது, மதக்குறியீடுகளை பெருமளவில் பயன்படுத்துவது, கார்ப்பரேட் சாமியார்களுடன் வெளிப்படையாக கைகோர்த்து விழா எடுப்பது, பாகிஸ்தானை தொடர்ந்து விரோதியாக கட்டமைத்து போர்ச்சூழலை உருவாக்கி ஏவுகணை அனுப்பி பனைமரங்களை வீழ்த்தி தேசப்பற்றை வளர்ப்பது. இந்த வேலைகளில் மோடி கில்லாடி. அவருக்கு நடைமுறை ஆட்சிப் பணிகளில் ஆர்வமோ திறனோ இல்லை. அதனால் அவர் மனத்தில் நடைமுறை நிர்வாகத்தை இன்னமும் காங்கிரசே செய்து வருகிறது எனும் எண்ணம் ஒரு உளவியல் உத்தியாய் வலுப்பெற்றுள்ளது. இது ஒரு அந்நியன் மனநிலை - அம்பியாக இருக்கும் போது அந்நியன் மீது பழிசுமத்துவது, அந்நியனாகும் போது அம்பி ஒரு சொங்கி என கிண்டலடிப்பது.


2) பண்டைய பாரத தேசத்தின் மகிமைகளைப் பற்றி வாய்கிழியப் பேசி அந்த காவியக் காலத்துக்கு இந்தியாவைக் கொண்டு செல்லப் போவதாய் சங்கிகள் வீம்பளப்பதை நாம் மீட்புவாதம் என்கிறோம். இந்த மீட்புவாதத்தைக் காட்டி மக்களை மயக்கி ஒன்று திரட்டுவதே இந்துத்துவா. இதே மீட்புவாதம் பாஜகவின் கட்சிக்கொள்கை மட்டுமல்ல நிர்வாகக் கோளாறுகளை நியாயப்படுத்துவதற்கான உத்தியும் தான் என்பதைஎல்லாம் காங்கிரஸ் அரசின் செய்த ஊழல்களால், தேசவிரோத அரசியலினால் தான்என அடிக்கடி தன் மீது கண்டனம் வரும் போதெல்லாம் சீறுகிற பாஜகவின் பிரச்சாரத்தில் நாம் காண்கிறோம். உன்னதமான பாரத தேசத்தின் கடந்த காலத்துக்குப் பதிலாகமோசமான காங்கிரசின் கடந்த காலம்பற்றின கதையாடலை வைத்தால் அரசியல் மீட்புவாதம் தோன்றுகிறது. இரண்டுமே தற்கால அரசியலில் காலாவதியாகி விட்ட சங்கதிகள், இல்லாத கடந்த காலத்தையும் சாத்தியமில்லாத எதிர்காலத்தையும் இணைக்கும் ஒரு கற்பனை முடிச்சே இந்த மீட்புவாதம்.


காங்கிரஸ் அரசின் ஊழல்கள் ஏற்கனவே பேசப்பட்டவை; மக்கள் அதற்கு இருமுறை அந்தக் கட்சியை தண்டித்து ஆகிற்று. பாஜக வேண்டுமென்றால் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு காங்கிரஸ் தலைவர்களை தண்டிக்கலாம். ஆனால் பாஜக அரசு அதைச் செய்யாது. பாஜகவுக்கு இந்த காங்கிரஸ் ஊழல் கதையாடலுடன் ஒரு தொப்புள்கொடி உறவு உள்ளது - அது துண்டிக்கப்பட்டால் அது சத்தின்றி சுவாசமின்றி செத்து விடும். தான் ஆட்சியே செய்யவில்லை என்பதை மறைக்க அதற்கு காங்கிரசின் கடந்த காலம் குறித்த விமர்சங்கள் அவசியம்

பேச்சு! பேச்சு! பேச்சு! இதை விட்டால் ஜிக்கு ஒன்றுமே தெரியாது. இந்த நாக்கு மட்டும் இல்லாவிட்டால் நாய் தூக்கிக் கொண்டு போய் விடும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...