முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுஷாந்தைக் கொன்றது யார்?



சுஷாந்த் சிங்கின் மரணச் செய்தி வந்ததில் இருந்தே நிறைய சந்தேகங்கள் கிளம்பின

துணியை மாட்டி தற்கொலை என்றால் ஏன் கயிற்றால் இறுக்கப்பட்டது போன்ற கரிய தடம் அவரது கழுத்தில் இருந்தது?

அதன் கீழ் மற்றொரு கயிற்று தடம் இரண்டாவதாக எப்படி வந்தது?

ஏன் கண்கள் பிதுங்கி நாவு வெளிவர வில்லை?

யார் அவரது உடலை கீழே இறக்கியது?

ஏன் கதவை உடைத்து அவரைக் காப்பாற்ற முயலவில்லை?


இந்த கேள்விகளை விட அப்போது என் கவனத்தைக் கவர்ந்தது கிட்டத்தட்ட அதே சமயத்தில் நடந்த சுஷாந்தின் மேலாளரான தியாவின் தற்கொலை. இந்த இரு மரணங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என யோசித்தேன். அது உண்மை என இப்போது தெரிய வருகிறது - தியா சல்மான்கானின் ஆத்ம நண்பரான சூரஜ் பஞ்சோலியுடன் உறவில் இருந்திருக்கிறார். பஞ்சோலியின் குழந்தையை தன் வயிற்றில் சுமந்திருக்கிறார். இந்த கர்ப்ப செய்தி வெளிவருவதை பஞ்சோலி விரும்பவில்லை. சுஷாந்த் இவ்விசயத்தில் தியாவுக்கு முழு ஆதரவும் தெரிவித்ததுடன் அவருக்காக போராடுவதாகக் கூறியிருக்கிறார். அவர் சுஷாந்திடம் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது பஞ்சோலி தியாவின் வீட்டுக்கு வருகிறார். தியா போனை வைக்கிறார். அடுத்து தியா தன் வீட்டில் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ததாய் செய்தி வருகிறது. இது கொலையா தற்கொலையா? (2013இல் இந்த பஞ்சோலி ஜியா கான் எனும் நடிகையுடன் காதல் உறவில் இருந்து அவரது தற்கொலையைத் தூண்டினார் என குற்றம் சாட்டப்பட்டார். அப்போது சல்மான் கான் தான் அவரை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றினார் எனச் சொல்லப்படுகிறது.) கொலை என்றால் சுஷாந்த் இந்த உண்மையை அம்பலப்படுத்துவார் என பஞ்சோலி / சல்மான் கானின் கோஷ்டி பயந்திருக்கலாம், சாட்சியத்தை அழிப்பதற்காக அவரையும் அதே பாணியில் கொன்று தற்கொலை என கட்டமைத்திருக்கலாம்.


தியாவின் மரணம் ஒரு கொலை என்றால் அதே நபர்கள் தாம் சுஷாந்தையும் கொன்றிருக்க வேண்டும். சல்மான் கான் அள்ளி வீசும் கோடிக்கணக்கான பணம், அவரது மாபியா தொடர்புகள் எல்லாவற்றையும் மீறி பஞ்சோலியைக் கைது செய்ய போலீசுக்குத் துணிச்சல் உண்டா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...