முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசரை வாழ்த்துவோம்!



அரசர் ஒரு ஸ்டுடியோவை ஆஸ்பத்திரியாய் செட் அப் செய்து அங்கு நல்ல ஆரோக்கியமாய் தெரியும் (ராணுவ வீரர்களோ) ஆட்களின் மத்தியில் உலவும் போட்டோவைப் பார்த்தோம். அது ஏற்கனவே தோனி விஸிட் அடித்த போது பயன்பட்ட அதே புரொஜெக்டர் கொண்ட பெரிய ஹால் தான் என பலரும் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இதில் நாம் கேலி செய்ய ஒன்றுமில்லை.

 ஏன் அவர் நிஜ மருத்துவமனைக்கு செல்லாமல் செட் அப் செய்யப்பட்ட ஒரு இடத்தில் இருந்து போஸ் கொடுக்கிறார் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது.


 நான் செய்திகளில் படித்ததில் இருந்து அரசர் கொரோனா குறித்த கடும் பீதியில் இருக்கிறார். தினமும் இரு முறை தனக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என பரிசோதிக்கிறார். அவரது அலுவலகத்தில் மிகுந்த சோதனைகளுக்குப் பிறகே அதிகாரிகள், அமைச்சர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், அதுவும் தொலைவாக நின்றே அவரிடம் பேச முடியும். அரசர் இப்போதெல்லாம் கூட்டங்களை விட காணொளிக் கூட்டங்களையே விரும்புகிறார். அரசர் அஞ்சுவதை நாம் கேள்வி கேட்பது நியாயமல்ல - அவருக்கு 69 வயதாகிறது. கொரோனா வயதானவர்களைத் தாக்கினால் மரணம் நிச்சயம். நாட்டின் அரசராக அவருக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. இஸ்லாமியரையும் பிற சிறுபான்மையினரையும் நாட்டை விட்டு அடித்து துரத்த வேண்டும், ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் காவிக்கொடியை பறக்க விட்டு பாரத வர்ஷத்தை மகாபாரத நாட்களுக்கு மீட்க வேண்டும். தனது தளபதியுடன் இணைந்து மொத்த நாட்டையும் படையெடுத்து ஆக்கிரமித்து தன் கட்சியை அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியில் அமர்த்த வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது. சம்பாதித்த சொத்துக்களை அனுபவிக்கவே அவருக்கு இன்னும் ஒரு நூறு வருடங்கள் கிடைத்தால் போதாது. இந்த நிலையில் அவர் நம்மை விட ஆயிரம் மடங்கு கூடுதல் கவனமாக இருத்தல் அவசியம்.

 பெரும் அச்சத்தில் இருக்கும் நமது அரசர் இவ்வளவு நெருக்கத்தில் நோயாளிகளிடையே நடந்த செல்ல முடியுமா? அதற்காகத் தான் இந்த செட் அப் மருத்துவமனை, நோயாளி வேடத்தில் நடிகர்கள் எல்லாம்.


அரசரை நாம் வாழ்த்துவோம்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...