முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செப் 24 2020 - பெங்களூர் vs பஞ்சாப் ஐபிஎல் ஆட்டம்

செப் 24 2020 - பெங்களூர் vs பஞ்சாப் ஐபிஎல் ஆட்டம்


முதலில் மட்டையாடிய பஞ்சாப் 206 அடித்தது.


உமேஷ், ஸ்டெயின் போன்றோரின் மோசமான பந்து வீச்சு.


சாஹல் நன்றாக வீசினார் - அகர்வாலை பவுல்டாக்கியது அற்புதமான பந்து.


அதன் பிறகு சாஹலுடன் சுந்தர் மற்றும் துபே இணைந்து ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள்.


ஆனால் ராகுலின் 69 பந்து 132 பெங்களூரை நிலைகுலைய வைத்தது - வேகவீச்சாளர்கள் இறுதி ஐந்து ஓவர்களில் இன்னும் மோசமாக வீசி ரன்களை அள்ளிக் கொடுக்க பெங்களூர் குழம்பியது - எந்தளவுக்கு என்றால் கோலி பதற்றத்தில் இரண்டு கேட்சுகளை விட்டார், அதுவும் ராகுலின் கேட்சுகள். 


ராகுலின் 132 ஐபிஎல்லில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த சதங்களில் ஒன்று - அதுவும் அவர் தன் இன்னிங்ஸை கட்டமைக்க விதம், எந்த நேரத்தில் எப்படியான ஷாட்டுகளை அடிக்கலாம் எனும் முடிவு பாராட்டத்தக்கது.


அடுத்து மட்டையாட வந்த பெங்களூர் அணி 4 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது:

ஷாமிக்கு இந்த ஆடுதளம் கச்சிதமானது - குறைநீளத்தில் அவர் நேரான சீமில் வீச பந்து சீம் ஆகிறது, அப்படியே எகிறவும் செய்கிறது. இந்த ஆட்டத்தொடரில் ஷாமி மிக அதிகமாய் விக்கெட் எடுக்கப் போகிறார்.


அவரை ஆட ஒரே வழி இறங்கி சென்று அவரது குறை நீளத்தை முழுநீளமாக மாற்றி சற்றே தடுமாற வைப்பதுதான். இப்படியே வீச விட்டால் மட்டையாளர்களால் சமாளிக்க முடியாது.


கோட்டரலின் பந்து வீச்சில் அவரது ஸ்விங், வேகம், கட்டுப்பாடு ஆகியவை என அற்புதமாக அமைந்தது - கோலிக்கு தொடர்ச்சியாக இடதுகை வீச்சாளர்கள் தொல்லை அளிக்கிறார்கள், அவரது விக்கெட்டை சுலபத்தில் வீழ்த்துகிறார்கள். அதே போலத்தான் கால்சுழலர்களும். அதற்கு ஒரு காரணம் கோலியின் விரிந்த கால் அமைவு (open stance). இது அவர் இன்று பந்தை ஹூக் செய்ய முயன்று உள்-கள அமைப்பிலேயே கேட்ச் கொடுத்து வெளியேறக் காரணமாகியது.


இதே கால் அமைவு கொண்ட ஏ பி டிவில்லியர்ஸுக்கும் கால்சுழலர்கல் கூக்ளி பந்து வரும் போது இப்பிரச்சனை உள்ளது - அவரது ரெக்கார்ட் கால்சுழலர்களுக்கு எதிராக ஐபிஎல்லில் மோசமானது.


அடுத்து பந்து வீச வந்த கால்சுழலர்கள் ரவி பிஷ்னோய் மற்றும் முருகன் அஷ்வின் நன்றாக வீசினார்கள் - அதுவும் பிஷ்னாய் பந்தை அழகாக காற்றில் மிதக்க விட்டு பின்ஜை அது குறைநீளம் என நம்ப வைத்து வெட்ட செய்து பவுல்டாக்கினார். அற்புதமான பந்து.


முருகன் அஷ்வின் ஒரு திட்டத்துடன் டிவில்லியர்ஸுக்கு வீசினார் - ஆப் ஸ்டம்புக்கு வெளியே சற்றே குறைநீளத்தில் வீசின பந்து பவுண்டரி போனாலும் அடுத்த பந்தை அதே திசையில் ஆனால் முழுநீளத்தில் வீசி டிவில்லியர்ஸை எக்ஸ்டிரா கவருக்கு மேலாக அடிக்க வைத்து விக்கெட் எடுத்தார் - நீண்ட காலமாக டிவில்லியர்ஸின் பலவீனம் இது. (இதே கால் அமைவு கொண்ட தோனிக்கும் உள்ள பலவீனம் தான் இது.)


டிவில்லியர்ஸின் விக்கெட்டுடன் பெங்களூரின் முதுகெலும்பு உடைந்தது, நம்பிக்கையை இழந்து போய் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றனர்.


அடுத்த ஆட்டத்தில் பெங்களூர் என்ன செய்ய வேண்டும்?

கோலி உமேஷ் யாதவை கொஞ்சி சீராட்டாமல் அணியில் இருந்து நீக்க வேண்டும். அவரிடத்தில் வேகவீச்சாளர் சிராஜ் அல்லது இடதுகை சுழலர் ஷபாஸ் அஹ்மதைக் கொண்டு வரலாம்.


 ஸ்டெயினும் சரியான ஆட்டநிலையில் இல்லை என்றாலும் அவர் தன் அனுபவத்தைக் கொண்டு மீண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். அல்லது அவரையும் நீக்கி விட்டு ஆடம் ஸாம்பாவைக் கொண்டு வரலாம். 


பிலிப்பின் இடத்தில் பார்த்திவ் பட்டேலை கொண்டு வர வேண்டும் - இந்த ஆடுதளங்களில் அவர் மேலாக ஆட வாய்ப்புள்ளது. அல்லது டிவில்லியர்ஸை கீப்பிங் செய்ய வைக்கலாம்.


மட்டையாட்டத்தை மட்டும் வைத்து பெங்களூர் அணியால் இத்தொடரை வெல்ல முடியாது - அதே போல சொதப்பிக் கொண்டிருக்கும் உமேஷை ஊக்கப்படுத்துகிறேன் என அவரை முதல் ஓவர் வீசச் சொல்வது முட்டாள்தனமானது. 8-14 தான் உமேஷ் வீச சரியான நேரம்.


 கோலி இப்படியே காலங்காலமாய் தீவிர எதிர்முனைகளில் இருப்பவர் - ஒன்று ஒருவருக்கு விடாமல் ஆதரவு கொடுப்பார் (விஜய் சங்கர் - உலகக்கோப்பை; அம்பத்தி ராயுடு - அதற்கு முன்பு); ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அதே வீரரை கை விட்டு மறந்து விடுவார். இதன் விளைவை இன்று அவரது மனநிலை சரிவை, அதன் தாக்கத்தை பந்து வீச்சாளர்களின் இறுதி 8 ஓவர் பந்து வீச்சில் பார்த்தோம். 


பின்ஜ், படிக்கல், கோலி, டிவில்லியர்ஸ், பார்த்திவ், துபே, வாஷிங்டன் சுந்தர், ஸாம்பா, சாஹல், செயினி, மற்றும் சிராஜ் என என்னுடைய பெங்களுர் அணித்தேர்வு இருக்கும்.


கோலி நிதானமாக வேண்டும், நிதானமான அணித்தேர்வில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் இம்முறையும் பெங்களூருக்கு சங்கு தான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...