முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீட் ஒரு அரசியல் பிரச்சனை மட்டுமல்ல!


உதயநிதியின் இந்த அறிக்கை சற்று தாமதமாகவேனும் வந்துள்ளது பாராட்டத்தக்கது. திமுக தொண்டர்களும் இனி இதை கவனிக்க வெர்ண்டும்.

சூர்யா அரசியல் கட்சி சார்பற்றவர் என்பதாலே அவரது நீட் கண்டனம் கணிசமான மக்களை போய் சேர்கிறது, கவனம் பெறுகிறது, அவர் ஒரு பிரபலம் என்பதாலோ நடிகர் என்பதாலோ மட்டுமல்ல. இதுவே சூர்யா ஒரு கட்சியின் உறுப்பினராக அல்லது தலைவராக இருந்து இதைச் சொன்னால் அது தேர்தல் அரசியலாக மட்டுமே பார்க்கப்படும், எதிர்க்கட்சிகள் அவரைக் கண்டிப்பதையும் மக்கள் அப்படியே பார்ப்பார்கள். ஆனால் தேர்தல் அரசியலில் சம்மந்தப்படாத ஒருவர் இதைச் சொன்னால் ஒரு நம்பகத்தன்மை வந்து விடுகிறது. கூடவே அவர் அகரம் அறக்கட்டளை மூலம் ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்பவர் என்பதும் சேர்ந்து கொள்கிறது.

 சூர்யாவுக்கு கிடைக்கும் கவனம் நீட்டுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் அரசியல் கட்சிகளிடம் இருந்து கவனத்தை அநியாயமாகத் திருப்பும் எனும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அரசியலுக்கு வரேன் வரேன் எனச் சொல்லிக்கொண்டே எந்தப் பிரச்சனையிலும் எதிர்வினையாற்றாமல் சிலர் கமுக்கமாகப் போய் விட, இதனால் எந்த பலனும் இல்லாத, கட்சி ஆரம்பிக்கும் திட்டமே இல்லாத ஒரு நடிகர் வெளிப்படையாக நடுவண் அரசுக்கு எதிராகப் பேச அபாரமான துணிச்சல் வேண்டும். இதுவும் மக்கள் அவரைப் பரவலாகப் பாராட்ட மற்றொரு காரணம்.

ரஜினி போன்ற கன்னடர்கள் ஒவ்வொரு பிணம் விழும்போதும் கைதட்டிக் கொண்டாடுவார்கள். ஒரு மக்கள் சமூகம் மீதான அன்பானது தோன்ற அம்மண்ணில் பிறந்து அதன் மகனாக தன்னை உணர்ந்தால் மட்டுமே சாத்தியம். கன்னடர்கள் மட்டுமல்ல, வேறு மாநிலத்தில் பிறந்தவர்கள், அல்லது இம்மண்ணில் பிறந்தாலும் வேறு மாநிலத்தை தன் சொந்த மண்ணாய் இதயத்தில் வைத்து வழிபடுகிற, பிழைப்புக்காக மட்டும் இம்மண்ணில் வாழ்கிறவர்கள் மக்கள் பிரச்சனைகளில் அந்நியமாகவே உணர்வார்கள். உ.தா., அண்ணாமலை இங்கு பிறந்தவர் என்றாலும் அவர் மனதளவில் கன்னடர்களிடத்தே இணக்கமாக உணர்கிறார், சாகும் வரை நான் கன்னடன் எனப் பேசும் அவர் ஒருபோதும் தன்னை ஒரு தமிழன் எனக் கூறி பெருமை கொள்ள மாட்டார். மாணவர்கள் செத்தாலும் நீட்டை ஆதரிப்பேன் என அவர் பிடிவாதம் பிடிப்பது தமிழ் உயிர்கள் மாயும் போது அவருக்கு அது வலிப்பதில்லை என்பதாலே. கிஷோர் ஸ்வாமி போன்று தமிழ் சமூகத்தில் இருந்து தன்னை அந்நியமாய் உணர்வோருக்கும்,  விரைவில் பாஜகவில் சேரப் போகும் விஷாலுக்கும் இது பொருந்தும்.

நீட் என்பது ஒரு அரசியல் பிரச்சனையல்ல, மொழிப் பிரச்சனை. மொழியால் தம்மை ஒரு தனி இனமாக உணரும் மக்கள் மீது அந்நியர்கள் தொடுக்கும் தாக்குதல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...