முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தி என்பது ஒரு மொழி அல்ல, படையெடுப்பவனின் ஆயுதம்




இந்தி எதிர்ப்பை சிலர் இந்திய ஒன்றியத்துடன் மனதளவில் இணையத் தயங்குகிற, ‘தேசபக்தி குறைவான’ எல்லைப் பகுதி மாநிலங்களின் பிரச்சனையாகப் பார்க்கலாம். ஆனால் உண்மையில் இந்தி என்பது இத்தேசத்தை ஒன்றிணைப்பதற்கான, வித்தியாசங்களைக் கடந்து மக்கள் ஒருமைப்படுவதற்கான கருவி அல்ல. 


இந்த பிரச்சனை இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தற்கு பத்து வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது - முஸ்லீம் லீக் ஒரு எதிரணியாக காங்கிரஸுக்கு முன் திரள, தனி நாடு கோர, காங்கிரஸ் தன்னை ஒரு ‘இந்துக்களின்’ பிரதிநிதிக் கட்சியாக கருதத் தொடங்கியது. பாகிஸ்தானியரின் மொழி உருது என இந்துக்களின் மொழி இந்தி என காங்கிஸுக்குள் இருந்த ஸ்லீப்பர் செல் சங்கிகள் கூறத்தொடங்கினர். அப்படித்தான் இந்தியைக் கொண்ட இந்திய மாநிலங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடங்கியது - மொழியைக் கொண்டு மக்களை ஒன்றாக்குவது என பொதுப்படையாகத் தெரிந்தாலும், நிஜத்தில் இது மொழியைக் கொண்டு ஒரு பெரும்பான்மை இந்து அடையாளத்தை இந்தியாவுக்கு வழங்கும் முயற்சியாகவே இருந்தது.


உங்களுக்குத் தோன்றலாம் - ஏற்கனவே பெரும்பகுதி இந்துக்களாக இருக்கையில் எதற்கு இந்தி என:


பெரும்பகுதி ‘இந்துக்கள்’ பலர் சிறுதெய்வ வழிபாட்டைப் பின்பற்றினவர்கள், பல சாதிப்பின்னணியில் இருந்து வருகிறவர்கள். சமிஸ்கிருத பிராமணிய இந்து மதக் கட்டமைப்புக்குள் சுலபமாக தம்மை அடக்கிக் கொள்ளுகிறவர்கள் அல்ல இம்மக்கள். இந்தி என்பது சமஸ்கிருதச் சொற்களை அதிகமாய் கொண்டு வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உப-பிராமணிய மொழி. (இந்து-முஸ்லீம் பிரிவினையைத் தூண்டும் நோக்கில் வெள்ளையர்களால் நிறைய செலவு செய்து கொண்டு வரப்பட்டது.) இந்தி திணிப்பானது ஒட்டுமத்த தேசத்தையும் பிராமணிய வைணவ சட்டகத்துக்குள் கொண்டு வர வேண்டும், பழைய வர்ணாசிரம அமைப்பை மீட்க வேண்டும் எனும் மறைமுக அஜெண்டாவைக் கொண்டது.


காங்கிரஸின் மென்-இந்துத்துவ முன்னெடுப்புக்கு தடையாக இருந்தது நேருவின் முற்போக்கு ஜனநாயக கருத்தியல். அவர் மிகவும் செல்வாக்கு படைத்த தலைவர் என்பதால் காங்கிரஸ் சங்கிகள் அடங்கிப் போக நேர்ந்தது. ஆரம்பத்தில் இந்தியே நாட்டை ஒருங்கிணைக்கும் என நேரு நம்பினார் என்பது உண்மைதான்; அதற்கு முக்கிய காரணம் அவருக்கு  மாநிலங்களின் பன்மைத்துவ கலாச்சாரப் பின்னணி, மொழி தேசியம் புரியவில்லை. உ.பி மட்டுமல்ல இந்தியா என அவருக்கு விளங்கியது தமிழகத்தில் வெடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும், அவற்றின் விளைவாக தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்ந்த பின்னருமே. ஆட்சிமொழியாக (இந்தியுடன்) ஆங்கிலம் தொடரும், அனைத்து மாநிலங்களும் இந்தியை ஏற்கும் வரை என அவர் கூறினார். ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் காங்கிரஸுக்குள் இந்தியா முழுமையையும் பிராமண இந்து தலைமையின் கீழ்க் கொணர வேண்டும் எனும் நோக்கம் தலைதூக்கியது. இதற்கு இணையாக சமத்துவத்தை, பன்மைத்துவத்தை ஏற்கும் போக்கும் அக்கட்சியில் தொடர்ந்ததால் இந்தி ஒரு லோக்கல் ரவுடியாக மட்டுமே பீடி புகைத்தபடி வடக்கே ஆளுகை செய்து திரிந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின் தன் ஒரிஜினல் அஜெண்டாவான “ஒற்றை இந்தியா, அது பிராமண இந்து இந்தியா” எனும் கொள்கையை வலுவாக முன்னெடுத்தது. இப்போது லோக்கல் ரௌடி இந்தி விமானத்தில் பறக்கும், எந்திரத்துப்பாக்கியால் சுடும் மலிடிமில்லியன் மாபியா தலைவரானது. 


அண்மையில் காங்கிரஸ் கட்சி தனது தலைமை பற்றின கேள்விகளுக்கு பதில் கூறும் முகமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய போது முதலில் ஆங்கிலத்தில் பேசி விட்டு, அடுத்து இந்தியில் மொழியாக்கத்தை வாசித்துக் காட்டினர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரோ அனைத்து அமைச்சர்கள், தலைவர்களும் இந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். பிரதமர் பேசும் போது கூட அதற்கு மொழிபெயர்ப்பு தருவதில்லை. இந்தி தெரியாதவனுக்கு மோடி பிரதமர் இல்லை என ஒரு சேதி அதில் வருகிறது. இதன் நுண்ணரசிய பார்ப்பனிய இந்து மதத்தை ஏற்காதவனுக்கு மோடி பிரதமர் இல்லை என்பதே.


இந்தி தெரியாதவர்கள் அடிப்படையில் தமது இந்துமதக் கதையாடலை ஏற்காதவர்கள், அவர்கள் தம் விரோதிகள் என மோடி அரசு நினைக்கிறது. இதனாலே சப்பைக்காரணங்கள் சொல்லி தேசியக் கல்வி கொள்கையை மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய அது மறுப்பு தெரிவித்தது. பார்ப்பன இந்து மதத்தை சேராதவர்கள் தம் கொள்கையை படித்தால் தம்மை விமர்சிப்பார்கள் என அது அஞ்சுகிறது. 


காஷ்மீரில் இந்தி பேசும் மக்களே அநேகமாய் இல்லை. இருந்தும் அங்கே ஏன் இந்தி ஆட்சி மொழியாக்கப்படுகிறது என்றால் உருதுவை ஒழிக்க வேண்டும் என்பதே. இதன் காரணம் பிரிவினைக்காலத்தில் இருந்தே உ.பி, தில்லிக்காரர்கள் உருதுவை பாகிஸ்தானியர்களின் (அதாவது இஸ்லாமியரை அப்படித்தான் அவர்கள் பார்க்கிறார்கள்) மொழி என இவர்கள் நம்பி வருவதே. உருதுவை ஒழித்தால் இஸ்லாமிய சார்பு ஒழியும், அப்போது காஷ்மீரை ஒரு இந்து மாநிலமாக்கலாம் என அவர்கள் நினைக்கிறார்க்ள். அதெப்படி நடக்கும்? நடைமுறையில் சாத்தியமா?


ஆமா, காஷ்மீரத்து மக்கள் தொடர்ந்து இஸ்லாத்தை பின்பற்றியபடியே பார்ப்பனியத்தை வழிபடலாம் - இது சாத்தியமே. உருதுவுக்குப் பதில் சமஸ்கிருதக் கலப்பு கொண்ட இந்தியை அவர்கள் பேசினால் அது மறைமுகமாக அரங்கேறி விடும்.


மொழி என்பது ஒரு ஆபத்தான கருவி. அது நம் மூளையமைப்பை மாற்றக் கூடியது என அறிவியல் கூறுகிறது. இந்தியை அதிகமாய் பேசப் பேச உங்கள் மூளை பிராமணியப்பட்டு விடும். அதற்காகவே இந்தியை பாஜக இவ்வளவு மும்முரமாக பரப்புகிறது. காங்கிரஸை விட பாஜகவுக்கே இந்தியினால் அதிக பலன் கிடைக்கும். அவர்கள் அராஜகமாய் திணிக்கிற இந்துத்துவத்தை, வாழைப்பழத்தில் ஊசிபோல மக்கள் மனதுக்குள் திணிக்க இந்தி உதவும். 


//The inclusion of Hindi among the official languages of Jammu and Kashmir has left many puzzled. The Jammu and Kashmir Constitution did not recognise it as a regional language. Many point out it is not native to any major community in the union territory.


“You don’t find any Hindi-speaking people in Kashmir valley,” said Chowdhary Zulfkar Ali, the former PDP minister who is now a member of the newly formed Jammu and Kashmir Apni Party. “Same is the case with Rajouri and Poonch districts in Pir Panjal and Chenab valley districts in Jammu region.”//


இச்செய்தியைப் படிக்க பின்னூட்டத்தில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


 https://scroll.in/article/973087/modi-government-sparks-language-anxieties-in-jammu-and-kashmir-and-fears-of-hindi-imposition

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...