"பிரதமர் உழவர் உதவி நிதி திட்டத்தில் நடைபெற்ற ஊழலுக்கு, தமிழக அரசே பொறுப்பு - வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்" -- செய்தி
பிரித்தாளும் சூழ்ச்சி கேள்விப்பட்டிருக்கோம். இது வினோதமா இருக்கே!
டிவி விவாதங்களில் பாஜகவினரும் அதிமுகவினரும் விராத் கோலி - அனுஷ்கா போல இணைபிரியாமல் இருக்கிறார்கள், ஆனால் வெளியே பிறாண்டிக் கொள்கிறார்கள்.
பாஜக எதிர்ப்பு அலை அதிமுகவின் வாக்குகளை பாதிக்கக்கூடாது என சங்கிகள் ஒரு பக்கம் நினைப்பதில் நியாயமுண்டு. அதன்படி அதிமுகவினர் பாஜக மீது அதிருப்தியாக இருப்பதாக காட்டிக் கொள்வதும் சமயோஜிதமே. அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தன்னை முன்வைக்க முயல்கிறதா என்றால் அப்படியும் அவர்களது தலைவர்கள் பேசி வருகிறார்கள். இது போக அதிமுக தலைமையை கைப்பற்றத் துடிக்கும் ஒ.பி.எஸ், சசிகலா முகாம்களுடனும் பாஜக தலைமை பேச்சுவார்த்தையில் இருப்பதாக, சசிகலா ஜனவரியில் வந்து விடுவார் என்றும் செய்தி கசிகிறது.
இது என்ன கலங்கின நீரில் மீன்பிடிக்கும் உத்தியா?
குழப்பி ஆளும் சூழ்ச்சியா?
இவ்வளவு மூட்டமான கூட்டணியை இதற்கு முன் பொன்னியின் செல்வன் நாவலில் பழுவேட்டரையர்-நந்தினி சதியாலோசனைக் கூட்டணியில் தான் கண்டிருக்கிறோம்!
Comments