சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் பற்றி தினமும் வெந்நீரைக் கொட்டிக்கொண்டதைப் போல கத்திப் பேசுவது, biggest breakthrough என கூவுவது, அவர் வீட்டில் பால் பாக்கெட் போட்ட பையனிடம் பைட் கேட்பது, சி.பி.ஐயிடம் கொலை வழக்கு பற்றி விசாரிக்காம ஏண்டா போதை மருந்து வழக்கு போடுறீங்க எனக் கேட்காமல் சதா கைதட்டி மாலை சாத்துவது என்றே ஆங்கில, இந்தி சேனல்கள் கல்லா கட்டுகின்றன. இதில் பாஜகவுக்கு அரசியல் லாபம் உள்ளது. இவ்விசயத்தில் மூத்த பத்திரிகையாளர் சாய்நாத் சொல்வது முழுக்க உண்மை:
1) நான் ஏற்கனவே எழுதியதைப் போல சிவசேனா மீது அழுத்தம் போட்டு கூட்டணிக்கு, அதிகாரப் பங்கீட்டுக்கு இணங்கி வரச் செய்ய பாஜகவுக்கு இந்த சுஷாந்த் கொலைவழக்கு விசாரணை, அது குறித்த தொடர்-ஒளிபரப்பு உதவும். அதற்காகவே மகாராஷ்டிர துணைமுதல்வரை நேரடியாய் குறிப்பிடாமல், ரியாவையே தொங்கப் போட்டு அடிக்கிறார்கள்.
2) பெருந்தொற்று நடவடிக்கைகள், பொருளாதாரத்தை மோடி மோசமாக நிர்வகித்தது, நீட் தேர்வு விசயத்தில் மாணவர்களை தத்தளிக்க விட்டது, ஜி.டி.பியில் வீழ்ச்சி, இந்தி எதிர்ப்பு என பாஜக மீதான பல விமர்சனங்களில் இருந்து மக்கள் கவனத்தை சிதறடிக்க, இவற்றை மறக்கடிக்க இந்த விசாரணை குறித்த செய்திகள், கங்கனா ரனவத், ரியா, மகேஷ் பட் சர்ச்சைகள் சினிமா குத்தாட்டங்கள் பெரிதும் உதவுகின்றன. மக்கள் துயரத்தில் அல்லாடும் போது என்ன பண்ண வேண்டும்? பொழுதுபோக்கில், போதையில் அவர்களை மூழ்கடிக்க வேண்டும். பாலிவுட்டை வைத்து ஆங்கில, இந்தி ஊடகங்கள் இந்த சில்லறைத்தனத்தையே செய்து வருகின்றன.
இப்படி சங்கிகளுக்கு விளக்கு தூக்குவதற்கு எதுக்குடா பெரிய பெரிய படிப்பு, சூட்டுகோட்டெல்லாம் உங்களுக்கு?

கருத்துகள்