முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய அரசு எனும் அடகுக்கடை - மோடி ஆண்ட் சன்ஸ், சௌகார்பேட்டை



வானதி சீனிவாசன் சுய-உதவிக் குழுக்களுடன் பேசுவதை நேரலையில் பார்த்தேன். மோடி அரசு மகளிர் சுய-உதவி செய்வதற்காக வழங்குகிற கடன்களைப் பற்றி பேசிய அவர் நேர்மையான நோக்கத்துடன் வருகிறவர்களுக்கே உதவி கிடைக்கும், தொழிலுக்கு அவசியமான தொகையை மட்டுமே கோர வேண்டுமென்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார். தேவைப்படும் பெண்களுக்கு சராசரியாக பத்தாயிரம் ரூ வாங்கித் தருகிறோம் என்றவர் கடைசியாய் சொன்னதுதான் முத்தாய்ப்பு - அவர் இதைப் போல முன்பு வாழ வழியில்லாத ஏழைகளுக்கு பத்தாயிரம் ரூ வாங்கிக் கொடுத்த போது அவர்கள் தனக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டினார்கள் என்றார். சுவரொட்டி அச்சிட்டு நன்றி தெரிவிக்க பணமுள்ளவர்கள் தாம் வாழ வழியில்லாதவர்களா? இந்த சுய-உதவி குழுவினரிடம் இதைச் சொல்வதன் நோக்கம் என்ன? நாங்கள் உதவி செய்கிறோம், நீங்கள் சுவரொட்டி ஒட்டுங்கள் என்றா? உதவி கிடைக்குதோ இல்லையோ விளம்பரத்தை மறந்திடாதீங்க என்றா? இல்லை, இந்த வங்கிக் கடன் உதவியெல்லாம் விளம்பரத்துக்காக இவர்களே வாங்கி இவர்களே அடித்து ஒட்டிக்கொள்வதற்கான ஏற்பாடா?


அதே போல ‘பிரதம மந்திரி’ செல்வமகள் என ஒரு திட்டத்தைப் பற்றியும் பேசினார் - இதன்படி 8 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகள் ஏழையாகவும், அப்பா இறந்து போன கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறவர்களாகவும் துன்புறும் நிலையில் - இனிமேல் தான் மேட்டரே வருகிறது - இத்திட்டத்தில் இணைந்து வருடத்திற்கு குறைந்தது 1000 ரூ கட்ட வேண்டும். பதினெட்டு வயது நிறைவுற்றதும் இப்படி வருடாவருடம் கட்டின தொகையுடன் அரசு ஒரு தொகையையும் சேர்த்து ‘மொத்தமாய்’ ஒரு தொகையை அளிக்கும் என்றார். அரசு போடுகிற உபரித் தொகை எவ்வளவு என சொல்ல மாட்டேன் என்கிறார். அதாவது வருடாவருடம் ஏழை மக்கள் உழைத்து சம்பாதிக்கிற பணத்தை வங்கியில் செலுத்தினால் அதை சேர்த்து (வருங்கால வைப்பு நிதியைப் போல) அரசே 10 வருடம் கழித்து அவர்களுக்கு திரும்பத் தருமாம். இதன் பெயர் உதவித் தொகையா? அப்பணத்தை வங்கியில் சும்மா போட்டால் வட்டி வருமே? இதே போன்ற திட்டம் எல்.ஐ.சியில் உண்டே? சிறுசிறுக இதைப் போல பணத்தை வாங்கி தங்க நகையாகத் தரும் திட்டம் தனியாரிடம் உண்டே? இதை செய்ய எதற்கு ஒரு அரசு?


அண்மையில் இன்னொரு திட்டத்தை நமது பிரதமர் படோடோபமாக அறிவித்தார் - இதன்படி சொந்தமாய் நிலம் உள்ளவர்களுக்கு ஒரு அட்டையை ‘இலவசமாய்’ அளிக்கிறார்கள். இந்த அட்டையைக் காட்டி வங்கியில் இருந்து ‘ஏழைகள்’ தங்கள் விவசாயத்துக்கு கடன் வாங்கிக் கொள்ளலாமாம். இப்படி கடன் வங்கிக் கொடுக்க எதற்கு அரசு? அதற்கு எதற்கு ஒரு அட்டை? மாநிலங்கள் தமக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைக் தொகையை கேட்டாலும் கடன் வங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள், ஏழைகள் உதவி வேண்டினால் உங்க பணத்தை எங்களிடம் கொடுங்கள், பின்னர் மொத்தமாய் திருப்பித் தருகிறோம் அல்லது உங்கள் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிட நில ‘அட்டை’ தருகிறோம் என்கிறார்கள். 

ஆயுதம் வாங்கவும், பிரதமருக்கு 500 இருக்கை கொண்ட தனியார் விமானம் வாங்க மட்டும் இந்த அரசிடம் பணம் உண்டா? 

ஒரு அரசு என்பது சௌகார் பேட்டை சேட்டைப் போலவா செயல்படுவது? குஜராத்திகளிடம் ஆட்சியைக் கொடுத்ததன் விளைவு தானா இது?  அடக்கொடுமையே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...