Skip to main content

பெண்கள் பலாத்கார செய்யப்படுவதற்கு அப்பெண்களின் பெற்றோரே காரணம் என ஏன் சொல்லுகிறார்கள்?




//"I am a teacher along with being an MLA. Such incidents (like rape) can be stopped only with sanskar (culture), not with shasan (good governance) or talwar (referring to sword or might)," the BJP's Surendra Singh said on Saturday.


"It's my dharma, government's dhrama but family's dharma too... While government is committed to protect, the family should be committed too to imbibe good values in their children. Sanskar and sarkaar can make India beautiful, there is no other alternative," he is heard saying in a video. // - செய்தி


ஏன் பாஜக அரசியல்வாதிகள் இப்படி பைத்தியங்களாக இருக்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம். ஆனால் இதன் பின்னால் உள்ள ஒரு தந்திரமான அரசியலை கவனிக்க வேண்டும்:

எல்லா மாநிலங்களிலும், மத்தியிலும் பாஜக நிர்வாகத்தில் நிறைய கோளாறுகள் உண்டு. சொல்லப் போனால், பரபரப்பான முடிவுகள், பேட்டிகள், விழா எடுப்பதை விட்டால் அங்கு நிர்வாகமே இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பெற்றோர்கள் தம் பெண்களுக்கு பண்பாட்டை புகட்ட வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பாஜக தலைவர்கள் சொல்லும் போது அது சர்ச்சைக்குள்ளாகும் எனத் தெரியாதா என்ன? தெரியும். இருந்தும் ஏன் சொல்கிறார்கள்? தம் நிர்வாகத் தவறுகளை, மோசமான ஆட்சிக்கான பொறுப்பை ஏற்காமல் இருக்க. ஆம் அதுவே அவர்களின் நோக்கம். இங்கே கவனியுங்கள்: சுரேந்திர சிங் பொறுப்பை மக்கள் மற்றும் பண்பாட்டின் மீது சுமத்துகிறார். அப்படியே  இந்துப் பண்பாட்டின் பின்னால் போய் ஒளிந்து கொள்ளும் திட்டமாகும் இது. இப்போது பாஜக நிர்வாகத்தை யாரும் குற்றம் சொன்னால் அது நம் பண்பாட்டை அவமதிப்பதாகி விடும்.


மேலும் யாராலும் ஏற்க முடியாத, அதிர்ச்சிக்குரிய கருத்துக்களை ஒருவர் சொல்லும் போது அவரை நாம் பகுத்தறிவின் தளத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டே உரையாட முடியும். உணர்ச்சிகளாலும் புனைவுகளாலும் ஆன ஒரு கலாச்சார கதையாடலுக்கு நடைமுறை அரசியலை நகர்த்தியாக வேண்டும். தமிழகத்திலும் பாஜகவின் ஊடக விவாதங்கள் இப்படி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். டிவியில் அவர்கள் எந்த பகுத்தறிவுக்கும் இடமளிக்காமல் கத்துவார்கள். எதிர்த்தரப்பை பேச விட மாட்டார்கள். கேள்விகளால் கிடுக்கிப் பிடி போட்டால் சம்மந்தமில்லாமல் ‘காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்த தவறால் தான் இப்போது சீனா நம்மை ஆக்கிரமிக்கிறது, அதனால் தான் ஜிடிபி தரைமட்டத்தில் இருக்கிறது’ என உளறுவார்கள். இது அபத்தம் என எதிர்த்தரப்பினர் சொன்னால் பைத்தியம் போல ஆடையைக் கிழித்துக் கொண்டு கூப்பாடு போடுவார்கள். இதை ஒரு நெறியாளர் விமர்சித்தாலோ கேள்வி கேட்டாலோ அவரைப் பற்றி நிர்வாகத்துக்கு புகார் செய்வார்கள். பேஸ்புக்கில் ஹரன் பிரசன்னா போன்றவர்கள் இந்த நெறியாளர்களை கண்டிக்கிறோம் எனும் பொருளில் அவர்கள் இந்து (பாஜக) விரோதிகள் எனப் பழிசுமத்தி ஊடக நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். ஒரு பாஜக ஆதரவு நீதிபதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்களை அதைத் தடுக்க முயன்றார்கள் என புனைவாக ஒரு தீர்ப்பை அளிப்பார். இது அபத்தம் என மக்கள் கண்டித்தால் உள்ளுக்குள் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஏனென்றால் அப்பட்டமாய் அரசியல் கதையாடல்களை புனைவை நோக்கி, அதர்க்கத்தை நோக்கி நகர்த்துவது அவர்களின் தந்திரம்.


 கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக முழுக்க முழுக்க பொய்ச்செய்திகளை புனைந்து வாட்ஸ் ஆப் மற்றும் சமூகவலைதளங்கள் மூலம் பரப்பி வருகிறார்கள்; அவை பொய்யென தெரிந்தாலும் உற்சாகமாய் அவற்றைப் பரப்புகிறவர்களே பாஜகவின் ஆதரவாளர்கள். ராமர் நிஜமாகவே அணிலின் துணையுடன் கடலில் கற்களால் பாலம் அமைத்திருக்க முடியாது என இவர்களுக்குத் தெரியாதா? அப்படி ஒரு பாலம் அமைப்போம் என கடலுக்கு அழைத்து சென்றால் இவர்கள் வருவார்களா? மாட்டார்கள். நடைமுறை வாழ்க்கையில் தெளிவாக பகுத்தறிவுடன் இயங்கும் இவர்கள் மற்றொரு பக்கம் அரசியலை புனைவு மொழியில் எதிர்கொள்ள விரும்புகிறார்கள். இது ஒரு விசித்திரமான மனநிலை. இதைப் புரிந்து கொள்ள உளவியலால் கூட முடியாது.

“நகரம்” படத்தில் வடிவேலு “ஏரியாக்கு வாடா ஏரியாக்கு வாடா” என சவால் விட்டுச் சொல்வாரே, அப்படியான ஒன்று இது; அவர்களுக்கு என ஒரு “ஏரியாவே” கிடையாது. உங்களை அலைகழிக்க விட்டு விட்டு சிரித்துக் கொண்டு இருப்பார்கள். 

ஏனென்றால் தர்க்கத்துப் புறம்பான அரசியல் கதையாடல்கள் அவர்களுடைய ஏரியா - அங்கே அவர்கள் தான் பெரிய ரவுடிகள். அந்த ஏரியாவுக்கு நாம் இவர்களுடன் சென்றால் நாம் பைத்தியம் பிடித்து திகைத்து நிற்போம் என இவர்களுக்குத் தெரியும். 

இப்படி கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுக்க அரசியல் மொழியை பகுத்தறிவுக்குப் புறம்பான மொழியாக்கி தம்மை எதிர்ப்போரையும் பைத்தியமாக்கியதே இவர்களின் தந்திரத்தின் வெற்றி.

ஒரு பெண் பலாத்கார செய்யப்படுவதற்கு அவளது பெற்றோர் அவளுக்கு பண்பாட்டை சரியாக பயிற்றுவிக்காதத்தே காரணம் என ஒரு பாஜக எம்.எல்.ஏ சொல்லும் போது நாம் பிளாட்பாரத்தில் அமர்ந்து மலத்தை தின்னும் பைத்தியத்தை பார்த்ததை போல திகைத்து நிற்போம். அதுதான் இவர்களுக்கு வேண்டும். மலத்தைத் தின்பது உங்களை முறியடிப்பதற்கான ஒரு தந்திரம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...