முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒண்ணு எம்.ஜி.ஆர் இல்லைன்னா நம்பியார்

 






Hi Sir,

உங்கள் அரசியல் மற்றும் விளையாட்டு சம்பந்தமான பதிவுகளை கடந்த மூன்று வருடங்களாக கவனித்து கொண்டு வருகின்றேன்

அரசியல் தற்போது வேண்டாம் விளையாட்டு சம்பந்தமாக மூன்று கேள்விகள் உங்களிடம்.


1. ரோகித் பற்றிய கட்டுரையில் அவர் டெஸ்ட் போட்டியில் ஜொளிக்க மாட்டார் என்றீர்கள் (தெ.. உள்ளூர்.தொ விட்டுவிடுவோம்) ஆஸி தொடரில் கலக்கினால் மீண்டும் ஒரு அலசல் கட்டுரை எழுத வேண்டுகிறேன்.


2. Betting fixing கிரிக்கெடின் அனைத்து மட்டத்திலும் உண்டு அனைத்து அணிகளின் உரிமையாளர்களும் செல்வந்தர்கள் தான், உயிர்மைகான அலசலில் மும்பை ஆரம்ப கட்டத்தில் தோற்றால் அவர்கள் betting செய்து வருவது தான் வழி என்றீர்கள் இது ஒருதலை பட்சமாக இல்லையா? 2010 ஆண்டு csk playoff வந்ததும் மற்றும் தற்போது csk playoff க்கு தகுதி பெற்றால் அதை betting என்று உயிர்மை அலசலில் கூறுவிற்களா?

(En thanipatta ennam betting fixing nu pothuthalathil sollavendam apdi parthal International to league varai ellam betting fixing than)


3. தமிழ் நாட்டில் அணைத்து அணிகளுகும் ரசிகர்கள் இருக்கும் போது star sports தமிழ் commentry மாதிரி நீங்களும் csk வுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருகின்றீர்கள் கொஞ்சம் பரிசீலனை பன்னலாமே?


மற்றபடி உங்கள் கட்டுரைகள் பதிவுகள் எழுத்துகள் உயிரோட்டம் மிக்கவை உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.


- Puvi King


வணக்கம்

1) ரோஹித்தால் வெளிநாட்டு மண்னில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து) அவரால் சோபிக்க முடியாது என இப்போதும் நம்புகிறேன். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பந்து ஸ்விங் ஆகும் போது முன்னங்காலுக்கு வந்து ஆப் ஸ்டம்புக்கு வந்து பந்தை விடுவது, உள்ளே வரும் பந்தை சரியாக தடுத்தாடுவது அவரால் முடியுமா? ஐந்தாவது நாள் மட்டையாடும் போது ஒரு நல்ல சுழலர் roughஇல் பந்தில் போட்டு அதிகமாய் திருப்பினால் ரோஹித்தால் சமாளித்தாட முடியுமா? இந்த புதுத்திறன்களை அவர் வளர்த்து ஒரு மேலான டெஸ்ட் மட்டையாளராக வரும் சில ஆண்டுகளில் மலர்வாரா? இப்போதே 33 வயதாகிறது ... அப்படி நடந்தால் அது உலக கிரிக்கெட்டில் ஒரு அதிசயமாக இருக்கும். எனக்குத் தெரிந்து ஒரு வயதான வீரர் திடீரென அபாரமான டெஸ்ட் மட்டையாளர் ஆனதில்லை. அதனாலே ரோஹித்தை டெஸ்ட் துவக்க வீரராக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. ராகுல்-மயங்க் நல்ல துவக்க வீரர்களாக இருக்கலாம். வெளிநாடுகளில் ஆடும் போது ரஹானேவை / பிரித்வி ஷாவை ஒரு மாற்று துவக்க வீரராக எடுக்கலாம்.


2) .பி.எல்லில் மும்பை அணி வெல்வதற்கு சில ஆட்டங்களில் எதிரணிகள் ஒரு புரிந்துணர்வுடன் செயல்பட்டு உதவியதாய் ஒரு பேச்சுண்டு. நான் அதைத்தான் சொன்னேன். ஓரளவுக்கு அணிகள் பரஸ்பரம் சிலநேரம் விட்டுக்கொடுக்கலாம் என நினைக்கிறேன். (இதற்கு ஆதாரம் எல்லாம் இல்லை.) ஆனால் அதே நேரம் இறுதிப்போட்டி வரை முன்னேறும் அளவுக்கு எல்லாம் அணிகள் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் என நான் நம்பவில்லை.


3) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நான் உணர்வுரீதியாக ஆதரிக்கிறேன் என்பது உண்மைதான். அதைத் திட்டமிட்டெல்லாம் செய்வதில்லை. அப்படி நடந்து விடுகிறது. சில நேரங்களில் கொல்கொத்தா மற்றும் மும்பை அணிகள் மீதுதான் நான் இப்படி பாசம் வைப்பதுண்டு. இதையெல்லாம் மறைத்து புறநிலையாக விமர்சிக்க என்னால் முடியாது. ஒன்று எம்.ஜி.ஆர் இல்லைன்னா நம்பியார் என்பதே என் மனப்போக்கு.  


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...