முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குஷ்பு கைது எனும் கிரிகாலன் மேஜிக்




பாஜக மகளிரணியின் போராட்டத்துக்கு எடப்பாடி அரசு தடை விதித்தது, அடுத்து குஷ்புவை கைது செய்தது. இவையிரணையும் அதிமுக அதே பாஜகவின் அறிவுறுத்தலின், தூண்டுதலின் பெயரிலே செய்கிற என்பது தான் ஒரு கிரிகாலன் மேஜிக். ஏன்?


பீகாரின் நிதீஷ்குமாரை வைத்து ஆடும் அதே அரசியல் சதிராட்டத்தைத் தான் பாஜக இங்கும் எடப்பாடியை வைத்து ஆடுகிறது:


பீகாரில் நிதீஷ்குமாருடன் கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரானவர் தாம் எனும் பிம்பத்தையும் பாஜக தக்க வைக்கிறது. நிதீஷின் பிரதான எதிரிகளில் ஒருவரான சிராக் பாஸ்வானுடன் இத்தேர்தலில் தாம் ஒரு மறைமுகக் கூட்டணியில் உள்ளதாய் நுட்பமாய் உணர்த்துகிறது. இதன் மூலம் நிதீஷ்குமார் ஆட்சி மீது மக்களுக்கு உள்ள கோபம், அதிருதியின் பலன்கள் தேஜஸ்வி யாதவுக்கு வாக்குகளாக மாறி விடக் கூடாது என திட்டமிடுகிறது. அதாவது ஆளும் கூட்டணியில் இருந்தாலும் அது தம் கூட்டணி அல்ல என உணர்த்துகிற பார்ப்பனிய தந்திரம் ஒரு பக்கம், ஆளுங்கட்சி கூட்டணி மீதான அந்த அதிருப்தி வாக்குகளை மடைமாற்றி தம்முடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கப் போகிற மூன்றாவது (பாஸ்வான்) அணிக்கு செல்ல வழிவகுக்கிற சூழ்ச்சி இன்னொரு பக்கம்


தமிழகத்திலும் அதே தோளில் இருந்தபடியே நண்பனைத் தின்னுகிற பார்ப்பனிய வியூகம் தான் பாஜகவுக்கு - வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி அரசு மீதான மக்களின் கோபம் மோசமாக பிரதிபலிக்கும் என பாஜகவினர் அறிவார்கள். ஆகையால் அக்கோபம் தம் மீது திரும்பக் கூடாது என ஒரு திட்டம் வகுக்கிறது. இதன்படி தாம் கூட்டணியில் இருந்தாலும் ஒரு அதிருப்தி தம் கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையில் உள்ளதாக கடந்த சில மாதங்களில் தொடர்ந்து ஊடகங்களில் செய்திகளை வரவழைத்தார்கள். அற்பமான இந்த கிசுகிசுக்களை விவாதிப்பதற்காக நமது டிவி சேனல்கள் பிரைம் டைம் விவாத மேடைகளை ஒதுக்கினார்கள். அநேகமாய் தினமும் இந்த கற்பனையான முரணைப் பற்றி பேசிப் பேசி (இந்த வாதங்களின் போது அதிமுகவினர் பாஜவைனரை தழுவி முத்தமிட்டு கன்னத்தை எச்சிலாக்கும் ஆபாசங்களும் நடக்கும்) ஒருவழியாய் இரு கட்சிகளும் ஒரே மேடையில் தோள் மேல் தோள் சாய்ந்து நின்றாலும்இதயத்தில்தாம் வேறு வேறு எனும் சித்திரத்தை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த நாடகத்தின் ஒரு காட்சி மட்டுமே குஷ்புவின் கைது.


திருமா மீது பாஜவினரின் சார்பாக அதிமுக அரசு அவசரப்பட்டு ஏன் வழக்குகளை பதிவு செய்தது என கேள்வி எழுந்ததும், அதிகம் பதறியது பாஜகவாகத் தான் இருக்கும். அதிமுகவுக்கு (எப்படியும் இழக்கப் போகிற) இத்தேர்தலில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பாஜகவுக்கு அப்படியல்ல. எப்படியாவது சற்று மேம்பட்ட தேர்தல் பலன்களை இம்முறை அடைய வேண்டும் என அக்கட்சி தவிக்கிறது. ஆகையால் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்துவதாக, அதை குஷ்பு தலைமை தாங்கும் போது கைது செய்யப்பட்டு ஒரு ஓட்டலில் சிறைவைக்கப்படுவதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. குஷ்பு ஏறிப் போன வாகனமே போலீஸ் வேன் என்பதைத் தவிர வேறெந்த பிரச்சனையும் அவருக்கு இல்லை. போராட்டத்தில் தலைமை தாங்கி தாங்கி விட்டு அப்படியே ஓட்டலுக்கு சென்று ஏஸி அறையில் உணவருந்தி ஓய்வெடுக்கப் போகிறார். ஆனால் அதிமுக அரசு திராவிட கட்சிகளின் சார்பில் இந்துக்களை ஒடுக்குகிறது என ஒரு பொய்ப்பிரச்சாரத்தை சங்கிகள் முன்னெடுக்க இது உதவும்.


இதற்குப் பதிலாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை கைது செய்திருக்கலாமே? அப்படி செய்தால், பாஜகவும் அதிமுகவும் நேரடியாய் மோதுவதாய் ஒரு சித்திரம் மக்களிடத்து ஏற்பட்டு விடும். அதையும் பாஜக விரும்பவில்லை. அது இரண்டு முகாம்களிலும் நண்பனாகவும் எதிரியாகவும் இருந்து சாதிக்க விரும்புகிறது. அதுதான் பார்ப்பனிய சாணக்கியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...