Skip to main content

Banana bread - செய்முறை



நேற்று நான் செய்த வாழைப்பழ பிரெட்டின் படத்தை பகிர்ந்த போது சில நண்பர்கள் செய்முறையை கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இதோ.


இரண்டு வகையில் பிரெட் செய்கிறார்கள் - ஒன்று பேக்கிங் பவுடர் போட்டு, சற்று தளர்வான கலவையை மோல்டில் ஊற்றி பேக் செய்வது; மற்றொன்று, ஈஸ்ட் சேர்த்து ஒரு மணிநேரம் உப்ப வைத்து பேக் செய்வது. முதலாவது பழம் போன்றவை சேர்க்கிற பிரெட் மற்றும் கேக் செய்ய ஏற்ற முறை. இந்த வாழைப்பழ பிரெட்டை நான் அப்படியே செய்தேன்.


1) முதலில் உலர்வான கலவையையும் ஈரக்கலவையையும் தனித்தனியாக தயார் செய்ய வேண்டும். இறுதியில் இரண்டையும் சேர்த்து doughவை (பிசைந்த மாவு) செய்யலாம். இந்த வேலையை ஆரம்பிக்கும் முன்பு உங்களுடைய OTG oven முன்-வெப்பமடைய செய்ய வேண்டும் - அதாவது பேக்கிங் செய்யுமுன்னே ஒரு மணிநேரம் போல oven பொருளில்லாமல் 170 டிகிரி செல்ஷியஸுக்கு சூடுபடுத்தி வைப்பது. நீங்கள் மாவு தயாராக்கி முடிக்கும் போது ovenஉம் தயாராக இருக்கும்.


2) உலர் கலவை தயாரிக்க நான் ஒரு கப் பாதாம் மாவு, ஒரு கப் ராகி மாவு மற்றும் அரை கப் ரவை எடுத்து கொண்டேன். நீங்கள் இதற்குப் பதிலாக கோதுமை மாவு, மைதா போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம் (அளவை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.). இதில் அரை ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் பேக்கிங் பவுடர் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதில் உடைத்த வால்நட், பாதாம், முந்திரி, சாக்கோ சிப்ஸ் போன்றவற்றை கலந்து கொள்ளவும். உங்களிடம் பருப்புகள் இல்லையெனில் டூட்டிபுரூட்டியை கலந்து கொள்ளலாம்.


3) அடுத்து ஈரக் கலவை. ஒரு கிண்ணத்தில் ஒரு கப் வெண்ணெய் மற்றும் ஒரு கப் வெல்ல சர்க்கரை (அல்லது வெல்லப் பொடி) (நான் குறைந்த இனிப்பு போதுமென மூன்று ஸ்பூன்களே வெல்லப்பொடியை சேர்த்தேன்.) ஆகியவற்றை ஒரு beater அல்லது கரண்டி வைத்து நன்றாக கலக்கவும்


4) மற்றொரு கிண்ணத்தில் 6-7 சிறிய வாழைப்பழங்கள் அல்லது நன்கு கனிந்த 3 பெரிய வாழைப்பழங்களை பிசைந்து வைக்கவும். இதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, வென்னிலா எஸன்ஸ் சேர்த்து (beater கொண்டு) அடிக்கவும்.


5) அடுத்து செய்ய வேண்டியது இந்த ஈரக்கலவைகள் இரண்டையும் மெல்ல மெல்ல உலர் கலவையில் கலந்து பிசைவது தான். இதை கை கொண்டோ அல்லது ஒரு beater வைத்தோ செய்யலாம். ஒருவேளை மாவு தளர்வாக போதுமான ஈரப்பதத்துடன் இல்லையெனப் பட்டால் அரை கப் காய்ச்சி ஆற வைத்த பாலை மாவுடன் சிறுக சிறுக சேர்த்து பிசையவும். மாவின் இறுதிப் பதம் என்பது கரண்டியால் எடுத்து bread mouldஇல் ஊற்றும்படி இருக்க வேண்டும்.


6) Bread mould இல்லாதவர்கள் கேக் மோல்ட் கூட பயன்படுத்தலாம். இதில் சிறிது வெண்ணெய்யை சுற்றிலும் தடவி விட்டு பிசைந்த மாவை ஊற்றுங்கள். வேண்டுமென்றால் சிறிது உடைத்த பருப்புகளை ஓட்ஸுடன் கலந்து இந்த மாவின் மேல் தூவி செட் செய்யலாம். Oven மூடி 170 டிகிரி செல்ஷியஸுக்கு செட் செய்து ஒரு மணிநேரம் போல பேக் செய்யவும்.


7) 40 நிமிடங்களுக்குப் பிறகு ovenஐத் திறந்து பிரெட் எந்தளவுக்கு வெந்திருக்கிறது எனப் பார்ப்பது நலம். இதற்கு ஒரு கத்தியை மாவுக்குள் செலுத்திப் பார்க்கலாம் - ஒட்டாமல் வந்தால் வெந்திருக்கிறது எனப் பொருள். எனக்கு முழுக்க பேக் ஆக ஒரு மணிநேரம் பத்து நிமிடங்கள் பிடித்தது.


8) பிரெட் வெந்த பிறகு அதை திறந்த இடத்தில் வைத்து ஆற விடுங்கள். அதன் பிறகு துண்டு போடுவது நல்லது.


9) நான் இதை சர்க்கரை குறைத்து செய்ததால் பிரெட் ஆகி விட்டது. டோஸ்ட் செய்து வெண்ணெய் தடவி சாப்பிடலாம். சத்தான சுவையான காலை உணவு. மாவைக் கலக்கும் போது ஒரு கப் சர்க்கரை சேர்த்திருந்தால் கேக் போல சாக்லேட் சிரப் ஊற்றி சாப்பிடலாம்

10) இவ்வளவுதான் - ரொம்ப சுலபம். முதலில் பேக் செய்யும் போது கருகாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி உலர் கலவையில், கோதுமை மாவு, மைதா, ரவை, ராகி, பருப்பு, விதைகளை அரைத்து செய்த மாவு என எதையும் உங்கள் தேவைப்படி கலந்து கொள்ளுங்கள்


Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...