முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலியை அணித்தலைமையில் இருந்து நீக்கலாமா?



நேற்றை தகுதிச் சுற்று போட்டியை பெங்களூர் அணி இழந்த நிலையில் கோலியின் அணித்தலைமை மீது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கௌதம் கம்பீர் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார். “கோலியைப் போல எட்டு வருடங்களாக வேறெந்த தலைவராவது ஒருமுறை கூட கோப்பையை வெல்லாமல் அணித்தலைவராக இருந்துள்ளாரா?” எனக் கேட்டுள்ளார். மஞ்சிரேக்கரும் கோலி பதவி விலகுவதே நியாயம் எனக் கூறியுள்ளார். ஆம், நேற்றைய போட்டியில் கோலியின் முடிவுகள், மட்டையாட்ட வரிசை, பந்து வீச்சுத் தேர்வு, அவரது நிதானமற்ற போக்கு அவரது அணியை தடுமாறவும் முக்கியமான வேளையில் நிலையிழந்து மோசமாக ஆடவும் வைத்தது என்பதை ஏற்கிறேன். நானே இக்கருத்துக்களை உயிர்மை டிவியின் ஆட்டம் கொண்டாட்டம் அலசல் நிகழ்ச்சியின் போது விரிவாக பேசினேன். ஆனால் அதே நேரம் இந்த ஆண்டு பெங்களூர் அணியின் ஆட்டம் மேலானதாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதற்கான பாராட்டுக்கள் அவர்களின் பயிற்சியாளர்கள், ஓரளவுக்கு முழுமையான, வலுவான அணியை தேர்வு செய்த கோலி மற்றும் ஒன்றாக இணைந்து போராடிய வீரர்களுக்கும் செல்ல வேண்டும். பெங்களூரின் துவக்க மட்டையாட்டம் (குறிப்பாக படிக்கல்லின் ஆட்டம்), இறுதி ஓவர்களின் அதிரடி ஆட்டம் நன்றாக இருந்தது. மத்திய வரிசையில் கோலியும் ஏ.பி.டியும் தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றினர். சுழல் பந்து வீச்சில் சஹலுடன் சுந்தர் நன்றாக வீசினார். களத்தடுப்பு மிக நன்றாக இருந்தது. வேகப் பந்து வீச்சாளர்கள் சில போட்டிகளில் திணறினாலும் ஒட்டுமொத்தமாய் பார்க்கையில் அவர்கள் புதுப்பந்தில் அதிரடியான ஆபத்தான ஒரு கூட்டணியை அமைத்தாடினார்கள். ஒரு கட்டத்தில் துபேவின் பந்து வீச்சு சிறப்பாக மாறியது. குர்குரீத் கூட நன்றாக மட்டையாடினார். ஒரே சிக்கல் கோலியின் நிலையற்ற மனம் தான் - அவர் “விண்ணைத்தாண்டி வருவாயா” ஜெஸ்ஸியைப் போல. சொந்த மனைவியைத் தவிர வேறு யார் விசயத்திலும் நிலையாக இருக்க மாட்டார். இன்னொருவர் அவருக்கு அறிவுரைத்து கட்டுப்படுத்தவும் முடியாது. 

நான் பெங்களூர் அணி உரிமையாளராக இருந்தால் கோலியை தலைவராக தொடர வைப்பேன். ஆனால் ஒரு தியானப் பயிற்சியாளரை அணியில் நியமித்து கோலியை தினமும் தியானம் செய்ய வைப்பேன். தகுதிச் சுற்று, இறுதிச் சுற்றுப் போட்டிகள் வரை முறுக்கேறி இருந்து விட்டு முக்கியமான கட்டத்தில் அணி காற்றிறங்கிய பலூன் போல் ஆகாமல் இருக்க உளவியல் தகுதியில் கவனம் செலுத்துவேன். கோலிக்கு இணையான - அல்லாவிடில் அவரை விட அதிகமான - அதிகாரத்தை பயிற்சியாளர்களுக்கு கொடுப்பேன். கோலியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் விடுவது ஒரு குழந்தையை காரோட்ட அனுமதிப்பதற்கு சமம். இரண்டு ஆண்டுகளில் எப்படியும் தோனி ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறுவார். அன்று அவரை பெங்களூரின் பயிற்சியாளராக நியமிப்பேன். கோலிக்கு தோனியைப் போன்ற ஒருவர் பயிற்சியாளராகத் தேவை. கோலியை அணியில் இருந்து நீக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்ட ஒரு பயிற்சியாளர் தேவை. அப்போதும் அவர் உருப்படவில்லை என்றால் புதிய தலைவரைக் கண்டடையலாம்.


காம்பிரின் பேட்டியில் நான் ரசித்த வரிகள் இவை:


“Gambhir also said he felt for the support staff of the franchise, which has changed over the years, while the captain has remained the same. Gambhir said it was "very difficult" for people like Simon Katich and Mike Hesson because if the coaches or directors of the team were "blunt" and asked for the captain to be removed, "they'll be the first ones to be removed”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...