முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆண்டவர் இலக்கியத்துக்கு செய்யும் கொடுமைகள்!



பிக்பாஸ் 4இன் இறுதி நாளில் சுப்பிரமணிய ராஜுவின் கவிதை எனச் சொல்லி ஆண்டவர் ஒரு ஆபாசமான “கவிதை” என ஒன்றை வாசித்தார். ரப்பர் வளையல்களை கண்டுப்பிடித்தவன் ஒரு ஒண்டுக்குடித்தன ‘குடும்பியாம்’, ஏனென்றால் அப்போது தான் உடலுறவின் போது ஒலி எழுப்பாதாம். அதுக்கு, வளையலை கழற்றி வைத்தால் போதாதா? இதெல்லாம் கவிதையா? அடக் கொடுமையே!  சுப்பிரமணிய ராஜூவுக்குத் தான் நவீன கவிதை தெரியவில்லை என்றால் கமலுக்கு கடந்த 60 ஆண்டுகளில் எழுதப்பட்ட கவிதை குறித்த ஒன்றுமே தெரியவில்லை. அவர் இன்னமும் பாரதிதாசன் எழுதிய பாடல்கள், பாரதியின் வசன கவிதை, வாரமலர் டபுள் மீனிங் வரிகள் போன்றவற்றையே கவிதை என நம்பிக்கொண்டு இருக்கிறார். நவீன கவிதை கூட படிக்க வேண்டாம், கடந்த பத்து வருடங்களின் ஆனந்த விகடன் இதழ்களை கவனித்திருந்தால் கூட அவருக்கு இன்று தமிழ்க் கவிதை என்ன இடத்தில் இருக்கிறது என்பது புரிந்திருக்கும். அதனாலே அவர் இன்னமும் பழைய சந்தத்துடன் உளறலாக எதையெதையோ கவிதை என முன்வைத்துக் கொண்டிருக்கிறார். அதை இன்று அவர் பாடிக்காட்டிட சோம் தாளம் போட்டார். அதை முன்பு ஆண்டவர் இதே பிக்பாஸில் அவர் சொல்லிக் காட்டியதைக் கேட்ட ஷங்கர் மகாதேவன் போன் செய்து “இது பாரதியார் எழுதினதா சார்?” எனக் கேட்டாராம். அதைக் கேட்டு ஆண்டவர் நெகிழ்ந்து போனாராம். பாரதியின் ஒரு பாடலைக் கூட படிக்காதவர் மட்டுமே அப்படிக் கேட்க முடியும். அதை ஒரு பாராட்டாக நினைக்க நீங்கள் அதை விட பெரிய தற்குறியாக இருக்க முடியும். இந்த கொடுமைக்கு சரியான செருப்படி எதிர்வினையை அளித்தது சோம் தான் - அவர் கமல் இந்த ‘கவிதை வாசிப்பை’ முடித்ததும் “சார் அண்ணாத்த ஆடுறார் பாட்டைப் பாடுங்களேன்” எனக் கேட்டார். கமலின் இடம் உண்மையிலே அதுதான். 


ஒரு வேண்டுகோள்: அரசியலில் இருந்தும் கமல் ஓய்வு பெறும் நாள் ஒன்று வரும். இதுவரை நவீன இலக்கியத்தில் (அல்லது வணிக இலக்கியம் தவிர) எதையுமே படிக்காமல் அப்புத்தகங்கள் பற்றி சொல்லப்படுவதைக் கேட்டோ வாசித்தோ தானே வாசித்ததாக ஒரு பாவனை பண்ணுவதில் கமல் புளகாங்கிதம் கொண்டு வந்துள்ள ஒய்வுக் காலத்தில் நீங்கள் ஒரு நல்ல புத்தகத்தையாவது படிக்க வேண்டும்! நீங்கள் ஒரு சிறந்த நடிகர். அதனாலே நீங்கள் ஒரு நல்ல வாசகர் ஆக முடியாது. உங்களுக்கு ஜால்ரா அடிக்க இலக்கியவாதி நண்பர்கள் இருக்கிறார்கள். அதனாலும் நீங்கள் ஒரு நல்ல வாசகர் ஆக முடியாது. எப்போது நீங்கள் நல்ல வாசகர் ஆவீர்கள் என்றால் சந்தத்துடன் படிப்பது பாடல் ஆகுமே ஒழிய கவிதை ஆகாது எனும் ஒரு அடிப்படைப் புரிதல் என்று வருமோ அப்போது தான். எனக்கு உள்ள ஒரே வருத்தமே பேஸ்புக்கில் பல்லாயிரம் பேருக்கு உள்ள அந்த புரிதல் கூட உங்களுக்கு இன்னும் வரவில்லை என்பது. இந்த லட்சணத்தில் நீங்கள் தமிழ்நாட்டுக்கே “எப்படி புத்தகம் வாசிக்கணும்?” என பாடமெடுக்கிறீர்கள் என்பது எப்படியான பாமரத்தனமான சமூகத்தில் வாழ்கிறோம் எனக் காட்டுகிறது. (இது நீங்கள் பரிந்துரைத்த புத்தகங்களின் தரத்தை குறைப்பதில்லை.) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...