கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுக்க முடியாது, கூடாது என்பதில் மத்திய அரசு இதுவரை உறுதியாக இருக்கிறது. தமிழகம், தில்லி, வங்காளம் ஆகிய மாநில அரசுகள் இலவசமாய் மக்களுக்கு அளிப்போம் என உறுதி அளித்துள்ளன. ஆனால் மத்திய அரசோ மாநிலங்கள் தம்மிடம் இருந்து அப்படி வாங்க முடியும் என்பதை ஏற்கவில்லை. இவ்விசயத்தில் நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன.
ஆனால் இதே இந்தியா பூட்டான், நேப்பாள், மொரிஷியஸ், வங்கதேசம் ஆகியவற்றுக்கு பல கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை இலவசமாகக் (அல்லது மிக மிகக் குறைந்த விலைக்குக்) கொடுக்கிறது. கேட்டால் வெளியுறவுத் துறை கொள்கை என்பார்கள் (இதைச் சொல்லித் தான் இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பினார்கள்!).
ஜியிடம் நமக்குள்ளது ஒரே ஒரு கேள்வி தான்: எங்களுக்கு இலவசம் இல்லையெனில் யார் தாம் இந்தியாவின் குடிமக்கள், வங்கதேசத்தவரும், நேப்பாளிகளுமா?

Comments