முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக சங்கிகளின் கற்பிதங்கள்




‘அமமுகவையும் அதிமுகவும் இணைத்தால் திமுகவுக்கு கடும் போட்டியை தேர்தலில் அளிக்கலாம், அதே போல முக்குலத்தோர் வாக்குகளும் சிதறாமல் பார்த்துக் கொள்ளலாம்’ என சற்று முன் வரை பேசி வந்த சங்கிகள் இப்போது ‘அமமுகவின் வாக்குகள் அதிமுக-மோடி எதிர்ப்பு வாக்குகளே, அமுமக இணைப்பு நடந்தால் அவ்வாக்குகளை திமுக அள்ளிக் கொண்டு போய் விடும், அதனால் அமமுக தனியாக போட்டியிடுவதே நல்லது’ என மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்கள். காரணம், எடப்பாடியார் சாமர்த்தியமாக தில்லிக்கு சென்று பேரம் பேசி படிய வைத்தது. முக்குலத்தோர் / அமமுக ஆதரவு வாக்குகள் எப்படி ஒரே நாளில் மோடி எதிர்ப்பு வாக்குகள் ஆகின? மோடியைப் பார்த்தா மக்கள் மாநிலத் தேர்தலில் வாக்களிப்பார்கள்? இதைக் கேட்டால் ரவீந்திரன் துரைசாமி போன்ற ஏஜெண்டுகள் “மோடி அப்படித்தான் நினைக்கிறார்” என பதுங்குகிறார்கள். சரி, அவை அதிமுக அதிருப்தி வாக்குகள் எனில் அவை ஏன் அமமுகவுக்கு போக வேண்டும்? அமமுக என்ன எதிர்க்கட்சியா?


உண்மை என்னவெனில், பாஜக என்றுமே அதிமுகவை பலப்படுத்த விரும்பவில்லை. இந்த சசிகலா பிரச்சனையைக் கூட சீட்டு பேரத்தில் தன் கரத்தை வலுப்படுத்தவே அது பயன்படுத்துகிறது. பாஜக அடிப்படையில் ஒரு காலனியாதிக்கக் கட்சி. எப்படி கிழக்கிந்திய கம்பனி உள்ளூர் குறுநில மன்னர்களை தமக்குள் மோதவிட்டு, தம் படையைத் தருகிறோம் எனச் சொல்லி வரிவிதித்து பின்னர் நாட்டையே பிடித்ததோ அதே தந்திரத்தை தான் பாஜக பயன்படுத்துகிறது. அதிமுகவை இரண்டாக அல்ல மூன்றாக உடைக்கவே அது விரும்புகிறது. பலமுனை போட்டிகள் நடந்து வாக்குகள் சிதறி எல்லா கட்சிகளும் பாதுகாப்பற்று இருக்கும் நிலை தேர்தலுக்குப் பின் வர வேண்டும் என விரும்புகிறது. அப்போது அது பெரியண்ணாவாக செயல்பட்டு இங்கு ஒரு ஆட்சியை தன் நிழலின் கீழ் அமைக்கலாம் என கனவு காண்கிறது. இதை மக்கள் உணர்ந்து கொண்டு ஒரு திராவிட கட்சி மிகப்பெரும் வெற்றியடைய வைப்பதும், பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் பண்ணுவதும் முக்கியம். அந்த திராவிட கட்சி திமுகவாக இருப்பது தமிழகத்துக்கு பாதுகாப்பு. ஏனென்றால் இந்த ஆட்சியின் ஊழல்கள் அதிமுகவின் தலைக்கு மேல் கத்தியாக தொங்குகின்றன. மீண்டும் ஒருவேளை ஆட்சியில் அவர்கள் அமர்ந்தால் கூட அது மற்றொரு பினாமி ஆட்சியாகவே இருக்கும். 


ரவீந்திரன் துரைசாமி உள்ளிட்ட சங்கி ஏஜெண்டுகள் இப்போது எடுத்து வரும் ஒரு புதிய சரடு மோடி ஸ்டாலினுக்கு அணுக்கமாக இருக்கிறார் என்பது. லஷ்மணன் போன்ற அதிமுக / சசிகலா ஆதரவாளர்கள் சிலர் திமுகவும் பாஜகவும் ரகசிய உடன்படிக்கை என வேறு பேசி வருகிறார்கள். தொடர்ந்து திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக தன்னை நிலைப்படுத்தினாலும் இந்த பேச்சு ஓயவில்லை. இவர்களின் நோக்கம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு சென்று விடக் கூடாது என்பதே. சுவாரஸ்யம் என்னவெனில், பாஜக எதிர்ப்பலை இங்கு உண்டு எனினும் அது நிச்சயமாக தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக இருக்காது. பாஜகவுக்கு ஏன் வாக்குகள் கிடைப்பதில்ல என்றால் அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல அதை ஒரு கட்சியாகவே மக்கள் மதிக்கவில்லை என்பதாலே. அதனால் பாஜக திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக இந்த ஏஜெண்டுகள் பேசி நேரத்தை வீணடிக்க அவசியமில்லை. பாஜக எதிர்ப்பு, பாஜக ஆதரவு, பாஜக என எதுவுமே இங்கு இல்லை. அது உங்கள் கற்பனையிலும், ஊடக முதலாளிகள் மிரட்டப்படுவதால் டிவி விவாத மேடைகளிலுமே இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...