விவசாயிகள் பாதிக்கப்பட்டோரின் இடத்தில் இருக்கும் வரை மட்டுமே அவர்களின் போராட்டம் வெல்லும். ஆனால் குடியரசு தினத்தன்று விதிகளௌ மீறி செங்கோட்டை வரை சென்று அங்கு தம் கொடி ஏற்றி, காவல்துறையுடன் மோதி உள்ளது விவசாயிகள் போராட்டம் தடம் மாறுவதையே காட்டுகிறது. வெற்றி வெகு அருகில் இருக்கையில் இப்படி கட்டுப்பாடற்ற போராட்டத்தில் ஈடுபடுவது மத்திய அரசையே வலுப்படுத்தும். இது நிகழ வேண்டுமென்றே ஜியின் அரசு போலீசாரை சற்று விட்டுப்பிடிக்க சொல்லியிருக்கக் கூடும்!
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்