முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விபத்து நடக்கிறதா நடத்தப்படுகிறதா? நாகார்ஜுனர் சொல்வதென்ன?



தற்செயல் நிகழ்வுகளில், efficient conditions நம்மால் அறியமுடியாத அளவில் உள்ளது என்று சொல்கிறீர்களா? உதாரணமாக, ஒருவர் பைக் கில் மோதி விடுகிறார். இந்த நிகழ்வு நடக்காமல் இருக்க கவனமாக செல்கிறோம். இருந்தும் நம் கை மீறி நடக்கிறது. 


இதேபோல் நான் வீட்டிற்குள் நடக்கும் பட்சத்தில் தற்செயலாக நாற்காலியில் காலை இடித்து கொண்டால் 4 நிலைகளின் சாராம்சம் என்னளவில் விடுபடாமல் இருக்கும் அல்லவா? Efficient condition நான் நடந்த வேகமும் நாற்காலியின் weight ஆக இருக்கும். ஆகவே, தற்செயல் நிகழ்வில் efficient conditon அறியமுடியாத அளவில் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த நாற்காலி உதாரணம் primary condition ஆ?


- Habib Haadi


அன்புள்ள ஹபீப்

இது ஒரு முக்கியமான கேள்வி. ஒரு விபத்தில் மட்டுமல்ல எந்த ஒரு தற்செயலான நிகழ்விலும் செயலூக்க நிலை (efficient condition) என்னவாக இருக்கிறது என நாம் யோசித்தே ஆக வேண்டும். ஒரு நேர்முகத்துக்கு சென்று சிறப்பாக தேர்வெழுதி, பேசி விட்டு வருகிறோம், ஆனால் வேலை கிடைக்கவில்லை. கவனமாக இருக்கிறோம், ஆனால் கொரோனா வந்து விடுகிறது. நாம் ஓட்டளிக்காவிடினும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து விடுகிறது. ஒரு பெண் அழகாக ஆடையணிந்து மகிழ்ச்சியாக வெளியே போகும் போது ஒருவன் ஆபாசமாக அவளது மார்புகளை உற்றுப் பார்க்கிறான். அவளுக்கு தன் உடல் மீதே வெறுப்பு வருகிறது. நீங்கள் சொல்வதைப் போல, ஒருவருக்கு நாற்காலியில் கால் மோதி வலிக்கிறது. கோபமாக நாற்காலிக்கு ஒரு உதை விடுகிறார். பைக்கை ஓட்டிப் போகும் போது யாரோ குறுக்கே வர திடீர் பிரேக் போட்டு தடுமாறுகிறோம், பின்னால் வந்த பைக் நம் மீது மோதி பிரச்சனையாகிறது. அல்லது கார் ஓட்டும் போது ஒரு நொடி கவனம் பிசகி ஒரு குழந்தை மீது கார் மோதி விடுகிறது. பதைபதைத்துப் போகிறோம். இதற்கெல்லாம் யார் பிரதான காரணம்? எது பிரதான காரணம்? சந்தர்பங்களா? நாமா?


எனக்கு ஆறு மாதம் இருக்கையில் போலியோ தொற்று ஏற்பட்டு மாற்றுத்திறனாளி ஆனேன். இதைக் குறித்து நான் அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால் நான் ஒரு பெற்றோனாக இருந்து என் குழந்தைக்கு இப்படியாகியிருந்தால் அந்த குற்றவுணர்வை என்னால் தாங்கிக் கொண்டிருந்திருக்க முடியாது. இது யாருடைய கவனப் பிசகினால் ஏற்பட்டது?


இங்கு தான் நாகார்ஜுனரின் நிலைகள் குறித்த பகுப்பாய்வு நமக்கு பயன் தருகிறது - ஒரு நோய்த்தொற்று எனும் நிகழ்வின் போதான முதன்மை (செய்ய வேண்டும் எனும் விழைவு), செயலூக்க (நிகழ்வுக்கு காரணமான துவக்க செயல்) நிலைகள் மனிதருக்கு இல்லை. ஆனால் கிருமிக்கு உண்டு. உடனடி நிலை மற்றும் பார்க்கப்படும் பொருளின் நிலை ஆகியவை நமக்கு உண்டு. இவ்விதம் நோக்கும் போது எல்லாவற்றையும் மனிதரை ஆதாரமாக வைத்து சிந்திக்க அவசியம் இல்லை என நாம் கற்கிறோம். அது போல ஒரு நிகழ்வுக்கான இருப்பு அந்த நேரத்துக்கு மட்டுமே ஆனது. மாற்றுக் கற்பனை நிகழ்வை - தடுப்பூசி போட்டிருந்தால்? - முன்வைப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் அது அங்கு இல்லவே இல்லை. நவீன உலகின் மிகப்பெரிய சிக்கலே பல்வேறு நிகழ்வுகளை கோர்வையாக தொடர்புறுத்தி அதன் மையத்தில் மனிதனை வைத்துப் பார்ப்பது தான். இதன் அடிப்படை நோக்கம் மனித மையவாதத்தை கட்டுவித்து சாராம்சப்படுத்துவது. நாகார்ஜுனர் ஒருவர் சமயோஜிதமாக செயல்பட்டு ஒரு விபத்தை தவிர்க்கும் போது கூட அங்கு அவரது பங்களிப்பானது பல சார்புநிலைகளால் தோன்றுவது தானே தவிர அவரால் மட்டுமல்ல என தெளிவுபடுத்துவார். இது நம்மை மையப்படுத்தாமல் அகந்தை இல்லாமல் ஊக்கத்துடன் சுதந்திரமாக இயங்க உதவும். நவீன வாழ்வின் தொடர் குற்றவுணர்வுகளில் இருந்து காப்பாற்றும்.


ஆகையால் நீங்கள் குறிப்பிடும் நாற்காலியில் இடிபடுகிற உதாரணத்திலும், எந்த விபத்துகள், தற்செயல்களிலும் முதன்மை நிலை (primary condition) இருக்க முடியாது. விபத்துகள் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதன் பிரதான காரணமே விபத்தின் விளைவான ஆபத்து அல்ல, நமது பங்களிப்பு இன்றியே நாம் இருக்கிற ஓரிடத்தில் ஒன்று தற்செயலாக நடக்கிறதே எனும் அதிர்ச்சி தான். 


நன்றி

ஆர். அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...