அது வேறொன்றுமில்லை, சசியை கொண்டாட வேண்டும் என்பது இப்போதைக்கு பாஜக நம் ஊடகங்களுக்கு கொடுத்துள்ள புரோஜெக்ட். இதன் மூலம் 1) எடப்பாடியை கட்டுப்படுத்தலாம், 2) அதிமுக எதிர்ப்பு வாக்குகளை அமமுகவுக்கு கொண்டு வந்து அணை கட்டலாம் எதிர்பார்க்கிறார்கள். ரவீந்திரன் துரைசாமி போன்றவர்கள் இதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் 'மோடி எதிர்ப்பு வாக்குகள்' அமமுகவுக்கு வரும் என ஜல்லியடிக்கிறார்கள். இன்னொரு பக்கம் திமுக ஆட்சிக்கு வரவே கூடாது என தம் பிடிப்பவர்களும் சசியை கொண்டாட முனைகிறார்கள்.
சொல்புத்தி சுயபுத்தி எவையுமே இல்லாதவை நம் ஊடகங்கள். கடந்த ஓராண்டில் மட்டும் பாஜக தலைமை நம் ஊடக தலைமை எடிட்டர்களிடம் எவ்வளவு முறை பேசியிருக்கிறார்கள் , என்னென்ன நிதியுதவிகள் செய்திருக்கிறார்கள் அம்பலப்படுத்தினால் இது உறுதியாகி விடும். நான் சொல்வது செய்தி சேனல்களை மட்டுமல்ல சுயாதீன ஊடகம் எனும் பெயரில் வரும் சில யுடியூப் சேனல்களையும் தான். விஜயகாந்த் பாணியில் இவர்களுக்கு பதில் சொல்லுவதே தகும்!
ஊடகங்களுக்கு வெளிப்படையான அரசியல் இருக்கலாம். தப்பில்லை. நான் ரிபப்ளிக் டிவியை, மதன் டைரியை ஏற்பேன். ஆனால் 'புரோக்கர்' சேனல்கள் அருவருக்கத்தக்கவை. அவை மக்களை குழப்பும் நோக்கிலேயே செயல்படுபவை.
இனி அதிஷா சொல்லி இருப்பதைப் படியுங்கள்.
"சசிகலா வருகையை திருவிழா போல கொண்டாடுகின்றன ஊடகங்கள். ஒரு ஊழல் குற்றவாளியின் வருகையை மாஸ் ஹீரோவுக்கான பில்டப்போடு இதுவரை உலகில் யாருமே இப்படி ரிப்போர்ட் பண்ணியிருக்க மாட்டார்கள். எநத தொ.கவிலும் சசியின் ஊழல் பற்றி யாருமே மூச்சுகூடவிடவில்லை. அதுதானே அவர் கடந்துவந்த பாதை. ஊடகங்கள் அதைப்பற்றியும் தானே பேசவேண்டும். ஆனால் என்னமோ தமிழகத்தை மீட்க வரும் வொன்டர்வுமன் போல பில்டப் கொடுத்துக்கொண்டிருப்பது அருவருப்பானது."
Comments