முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாட்ஸ் ஆப் பாருங்கோ!



சன் நியூஸ் கேள்விக்களம் நிகழ்ச்சியில் ரியானா ட்வீட், அதற்கு எதிராக பாஜகவுக்கு முட்டுக் கொடுக்கும் செலிபிரிட்டுகள் குறித்து விவாதிக்கிறார்கள். பாஜகவுக்காக நாராயணன் வழக்கம் போல “எனக்கு எல்லாம் தெரியும், நீங்க எல்லாம் முட்டாள்கள், ஒருவேளை நான் தான் முட்டாள்னு நினைக்கிறீங்களா?” எனும் கணக்கில் பேசிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் கிரீட்டா டென்பேர் டூல் கிட் விவகாரத்தை ஆதாரமாக எடுத்து வைக்கிறார். அப்படியான டூல் கிட்டை தயாரித்து ஒரு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது டிவிட்டரில் வழக்கமான ஒன்றே. ஆனால் அதை பாஜகவினர் ஏதோ “துப்பாக்கி” படத்தில் குண்டு வைக்க தீவிரவாதிகள் தயாரித்த வரைபடம் விஜய்யிடம் மாட்டியதைப் போல பில்ட் அப் பண்ணுகிறார்கள். சமூகவலைதள பிரச்சாரம் பற்றி ஒன்றுமே தெரியாத மாங்கா மடையன்கள் மட்டுமே இதை ஒரு ஆதாரமாக ஏற்பார்கள். அது போகட்டும், பாஜக நாராயணனின் வாட்ஸ் ஆப்புக்கு யாரோ இதை அனுப்பி விட்டார்கள். அதைக் காட்டி பேசத் தொடங்கிய அவர் நெறியாளர் குணசேகரனிடம் “குணா உங்களுக்கும் வாட்ஸ் ஆப் பண்ணியிருக்கேன். பாருங்க, பாருங்க” என குதிக்கிறார். இதை ஏதோ படுபயங்கர ராணுவ ரகசியங்களை கண்டுபிடித்ததைப் போல விவாதம் முழுக்க கொண்டு செல்ல முயலும் அவர் தன்னை யாரும் பொருட்படுத்தவில்லை எனக் கண்டதும் திரும்ப திரும்ப “குணா உங்களுக்கு வாட்ஸ் ஆப் பண்ணியிருக்கேன். பாருங்க” என்கிறார். அவர் ஏன் இதை ஒரு நிகழ்ச்சியின் நடுவே செய்ய வேண்டும்? வேறெதற்கு நெறியாளரே தன் வாட்ஸ் ஆப் பார்வெர்டுகளை படிக்கிறவர், தன் கட்டுப்பாட்டில் இருக்கிறவர் எனக் காட்டத் தான். குணா உடனே “வாட்ஸ் ஆப்பில் வருவதை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது” என நாராயணின் மூக்கை உடைத்து விட்டார். 


பாஜகவின் செய்தித் தொடர்பாளர்கள் இந்த உத்தியை பலமுறை வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்: 

1) நெறியாளர் வேண்டுமென்றே பாஜகவை, இந்துக்களை இருட்டடிப்பு செய்வதாக நிகழ்ச்சியின் போதே புகார் சொல்லி நெறியாளரை நெருக்கடிக்கு உள்ளாக்குவார்கள்.

2) அல்லது, நெறியாளரின் பெயரை சொல்லி தனிப்பட்ட தொனியில் உரையாடி (அதைக் கேட்க நெறியாளர் ஏதோ இவர்களின் கார் டிரைவர் போலத் தோன்றும்) அந்த விவாத அரங்கில் தனக்கு தனி தகுதி உண்டு எனக் காட்டிக் கொள்வார்கள். உ.தா., “இல்லை குணா” என்பதற்கும் “இல்லைங்க குணா” என்பதற்குமான வித்தியாசம்.


இந்த நாராயணனுடன் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டிவி விவாதங்களில் கலந்து கொண்ட ஞாபகம். அப்போது அவ்வளவு எளிமையாக, இயல்பாக பேசுவார். இப்போதுள்ள பந்தா, திமிர்த்தனம், பாதுகாப்பின்மையின் பதற்றம், நெறியாளர்களை தனிப்பட்ட முறையில் டீல் பண்ணுவது எதுவும் இல்லை. ஜெயாவின் மரணத்துக்குப் பிறகு தமிழக பாஜக தலைவர்களின் உடல்மொழி அப்படியே மாறி விட்டது. தமிழகத்தை தாமே ஆள்வதாக நம்புகிறார்கள். ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் இவ்வளவு அகந்தையாகப் பேசி நான் பார்த்ததில்லை. 


பாஜக மீது கடும் வெறுப்பில் பேட்டியளித்த ராமசுப்பிரமணியனை பேசி சரிகட்டி விட்டார்கள் போல. அவர் இப்போது பாஜக ஆதரவாளராக டைட்டில் போட்டுக் கொள்வதில்லை என்றாலும் நேரடியாக ஆதரவு தெரிவித்து பேசுகிறார். இவர்களின் கருத்துக்களுக்கு அவ்வளவு தான் மதிப்பு - அப்பப்போ குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் வாங்கி வரேன் என உத்தரவாதம் தராவிட்டால் “எண்டே கட்சி திமுக, எண்டே சி.எம் ஸ்டாலின்” என உளற ஆரம்பித்து விடுவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...