முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிள்ளை பிடிக்கும் தொடர்கள்



தன்பால் கவர்ச்சி குறித்து என ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஆய்வுகள் நடந்து, அது இயற்கையானது, அது எந்த தவறுமில்லை என நிரூபித்துள்ளார்கள். இந்தியாவில் நமது மகத்தான பாஜக அரசு குடும்ப அமைப்பை பாதுகாக்கும் நோக்கில் தன்பால் கவர்ச்சியாளர்கள் திருமணம் செய்வதை சட்டரீதியாக ஏற்க மறுத்து விட்டது. ஆனால் 29 உலக நாடுகளில் தன்பால் திருமணம் சட்டபூர்வமானதே. பெங்களூர் வந்த பிறகு ஆண்களிடையில் மட்டுமல்ல பெண்கள் மத்தியிலும் தன்பால் ஜோடிகள் சுதந்திரமாக வெளிப்படுவதை, சேர்ந்து வாழ்வதை காண்கிறேன். இது ஒரு பக்கம் என்றால், இதை அசிங்கமாக, கௌரவப் பிரச்சனையாக காணும் பெற்றோர்கள் ஏராளம். கல்லூரிப் படிப்புக்காக நகரங்களுக்கு செல்லும் இளம்பெண்கள் தம் தன்னுடைய தன்பால் சார்புநிலையை (homosexual orientation) அங்கு வெளிப்படையாக அறிவிப்பது இயல்பாக நடக்கிறது; ஆனால் அவர்கள் அவ்வாறே வீடு திரும்பும் போது பெற்றோரால் வெளியேற்றப்பட்டு கைவிடப்படுவதும் சகஜமாக நடக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு தன்பால் ஈர்ப்பாளரான பெண்ணை பெற்றோர் திருமணம் செய்ய கடுமையாக வலியுறுத்திய போது “ஒரே மாதத்தில் பிரிந்து வந்து விடுவேன்” என வெளிப்படையாக கூறி விட்டார். அப்படியே செய்யவும் செய்தார். பெற்றோருக்கு மனத்திருப்தி. “ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி வைச்சோம், ஆனால் பையன் சரியில்லை, இப்போது பெண் தனியாக இருக்கிறாள்” என ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்களுக்குத் தேவை தம் பெண் இயல்பானவள் என ஊருக்குக் காட்ட ஒரு கதை, எத்தனையோ பேர் சம்மந்தப்பட்ட, நிறைய பொருட்செலவு கொண்ட திருமணம் இதற்கு ஒரு சாக்கு. யாரோ ஒருவர் இதற்கு பலிகடா ஆகி விடுகிறார்கள். மாறாக அப்பெற்றோருடன் அவர் தொடர்ந்து உரையாடி, பிடிவாதமாக இருந்து புரிய வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரும் இந்த நாடகத்தில் சுயநலமாக கலந்து கொண்டு விட்டார். இன்னும் சில இடங்களில் மாப்பிள்ளை வீட்டார் நடிக்க பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

 

 சமூக அழுத்தம், கூச்சம், மூடநம்பிக்கை, அறியலுக்கு புறம்பான நம்பிக்கைகள் என பல காரணங்கள் பெற்றோரை இப்படி நடக்க வைக்கின்றன. இத்தகைய பெற்றோருக்கு கைகொடுக்கும் நோக்கில் கல்லா கட்டுவதற்கு தனியாக உளவியலாளர்களின் ஒரு மாபியா கும்பல் செயல்படுகிறது. இதைப் பற்றி பல செய்திக்கட்டுரைகளை படித்திருக்கிறேன். இவர்கள் திருமணமான பின் தனது தன்பால் விருப்பத்தை தெரிவிக்கும் அல்லது தன்பால் இணையுடன் சேர்ந்து முடிவு செய்யும் ஆண் / பெண்களை திருத்துகிறேன் எனும் நோக்கில், ஆலோசனையின் பெயரில் தொடர்ச்சியான கடும் அழுத்தம் அளித்தும், ஆண்மை / பெண்மையை மீட்கிறோம் எனும் பெயரில் தேவையில்லாத ஹார்மோன் சிகிச்சையும் கொடுத்தும் இவர்களை குடும்ப வாழ்வுக்குள் வலியுறுத்தி தள்ளி விடுகின்றனர்; விருப்பமில்லாது திருமண ஜோடியுடன் உறவு கொண்டு குழந்தையையும் பெற்று இன்னொரு பக்கம் தன்பால் ஜோடியையும் ரகசியமாய் தக்க வைத்து இவர்கள் இரட்டை வாழ்க்கைக்குள் சென்று கடும் நெருக்கடிக்குள்ளாகி பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு செல்கிறார்கள்.


 இந்த உளவியலாளர்கள், மருத்துவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள், அறவுணர்வில்லாதவர்கள், நவீன பால்நிலை ஆய்வுகள் குறித்து புரிதல் இல்லாதவர்கள், சந்தர்ப்பவாத மருத்து வியாபாரிகள் என நான் வியந்திருக்கிறேன். ஆனால் குமுதம் ரிப்போர்ட்டரில் டாக்டர் குமாரஸ்வாமி என்பவர் இந்த மாபியா வேலையை நியாயப்படுத்தி, தன்பால் ஈர்ப்பை ஒரு “உளவியல் சிக்கல்” என தவறாக அடையாளப்படுத்தி “அவன் அவள் அது” என ஒரு ஆபாசமான தொடரை எழுதி வருகிறார். இதில் அவர் தன்பால் ஈர்ப்பை ஏதோ pedophilia போல சித்தரிப்பதுடன் இதனால் வேற்றுப்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அநியாயம் நடப்பது போல அருவருக்கத்தக்க வகையில் எழுதி இருக்கிறார்.  இந்த அப்பட்டமான homophobia தொடரை ஒரு பத்திரிகை பிரசுரிப்பது ஆணவக்கொலை, தீண்டாமை போன்றவற்றை நியாயப்படுத்தி பேசுவதற்கு சமானமானதே.


இப்படியான பிள்ளைபிடிக்கும் தொடர்களை பிரசுரிக்கும் இதழ்கள் வெளிவரும் மாநிலத்தை சேர்ந்தவன் என நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது. பாலின ஆய்வுகள் குறித்த எந்த அடிப்படை புரிதலும் இல்லாதவர்கள் நம்மூரில் எடிட்டர்களாக திரிகிறார்கள், இதை “நிகழ்காலத்தின் குரல்”என  வேறு அழைக்கிறார்கள்  என நினைத்தால் அதைவிட கேவலமாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...