முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதியமான் - அவதூறு - திமுகவினர் எதிர்வினை



இந்த சர்ச்சை பற்றி படித்திருப்பீர்கள். அதியமானின் சிறிய பேஸ்புக் பதிவையும், அதற்கு எதிர்வினையாக திமுகவினர் தொடுத்துள்ள புகார்களையும் வழக்குகளையும். அதியமான் என்னுடைய நண்பர் என்பதால் நான் இதை சொல்லவில்லை, ஒரு பெயர் தெரியாத கட்சிசாரா நபர் யார் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இது போல முகநூலில் எழுதி இருந்தாலும் நான் இதையே சொல்லி இருப்பேன் - இது ஒரு தேவையில்லாத ஆணி. திமுக இணைய ஆதரவாளர்களும் கட்சியினரும் ஒரு உற்சாகத்தில் இப்பிரச்சனையை பெரிது படுத்தி முன்னெடுப்பதன் மூலமாக கெட்ட பெயரை சம்பாதிக்கிறார்கள். எந்த அரசும் இவ்விசயத்தில் - சட்டநடவடிக்கை வழியாக அவதூறுகளை கட்டுப்படுத்துவது - வெற்றி கண்டதில்லை. மாறாக இது அவதூறுகளுக்கு, அவநம்பிக்கைக்கு, அதிருப்திக்கு வலு சேர்க்கும். ஆக திமுக தலைமை தலையிட்டு உ.பிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும், வழக்குகளை பின்வாங்கவும் சொல்ல வேண்டும்.


அவதூறுகளை எப்படி கையாள்வது?

திமுகவை விரும்பாதவர்களும், நடுவாந்திரமான, திராவிட-மாற்று, தாராளவாத அரசியலை ஏற்கிறவர்களும், மறைமுக வலதுசாரிகளும் தொடர்ந்து அக்கட்சிக்கு எதிராக அவதூறுகளை பரப்பியபடி வந்திருக்கிறார்கள். இருந்தும் திமுக இத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. எனில் அதில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அவதூறுகளை இரும்புக்கரத்தால் ஒடுக்க அவசியமில்லை என்பதே.


மாறாக, விளக்கம் அளிப்பது, தம்மை பாதிக்கப்பட்டவராக மக்கள் மத்தியில் அதே சமூக ஊடகங்கள் வழி வைப்பது அவசியம். அதுவே சமூக ஊடக பிம்ப கட்டமைப்பில் சரியான உத்தி அல்ல. ஏனென்றால் சமூக ஊடகம் என்பது மரபான செய்தி ஊடகம் அல்ல; அதில் உண்மையோ தரவோ அல்ல, பிம்பமும் தோற்றமுமே முக்கியம். ஒரு பொய்த்தோற்றம் ஏற்படுத்தத்தப்பட்டால் மாற்றுத் தோற்றத்தை அதே சமூக ஊடகம் வழி உண்டாக்கியே எதிர்கொள்ள வேண்டும். அதுவே நல்ல பலனைத் தரும். அவதூறு எழுதியவரை சிறையில் தள்ளினால் அது அவருடைய தரப்பையே வலுப்படுத்தும். இதைத் தான் perception management என்கிறார்கள்.


ஆனால் ஹெச்.ராஜா, எஸ்.வி சேகர் போன்றோர் அவதூறு செய்தால் நீங்கள் வழக்கு தொடுக்கலாம், அதை கையாளும் வலு அவர்களுக்கு உண்டு. பொதுமக்களுக்கு அந்த ஆயுதம் அவசியம் அற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...