முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேற்கு வங்க வன்முறை எனும் ரியாலிட்டி ஷோ




மேற்கு வங்க தேர்தலை ஏன் இவ்வளவு தீவிரமாக பாஜக எடுத்துக் கொண்டது என ஒரு கட்டுரையில் வினவும் முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஒரு சுவாரஸ்யமான பார்வையை அளிக்கிறார். அவருடைய கருத்துப்படி, இந்த சட்டமன்ற தேர்தலில் மமதா வென்றால் 2024 தேர்தலில் மோடிக்கு போட்டியாக அவர் உருக்கொள்வார் என மோடியும் ஷாவும் அஞ்சுகிறார்கள். அதனால் தான் “திதி ஓ தீதி” என பொதுமேடையில் பகடி செய்யும் அளவுக்கு நமது ஜி சென்றார். மேற்கு வங்கத் தேர்தலில் தோல்வி அடைந்த பாஜகவுக்கு அது கடும் ஏமாற்றமாகியது - ஒரு மாநிலத்தை இழந்து விட்டோம் என்றல்ல, தேசம் முழுக்க மமதா புகழப்படுவதை, பாஜகவை அவர் தனியாக நின்று முறியடித்ததாக பெயர் பெறுவதை பாஜகவால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் தான் மே.வங்கத்தில் நடந்த சில வன்முறை சம்பவங்களை பெரிதாக்கி, பாஜகவும் பல தாக்குதல்களை தொடுத்தது; இரு தரப்பிலும் கட்சிக்காரர்கள் கொல்லப்பட்டார்கள். 


இது நடந்து கொண்டிருக்கும் போது பாஜகவின் ஐ.டி கிளை, வாட்ஸாப் போராளிகள் மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்: “மே.வங்கம் எரிகிறது, அங்கு ஜனாதிபதி ஆட்சி வேண்டும், ராணுவம் அனுப்பப்பட்டு வன்முறை செய்யும் திரிணாமூல் கட்சியினர் கொல்லப்பட வேண்டும்; அங்கு ஜீ தனது குஜராத் 2000 ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும்” என்று பலவிதமாக சமூகவலைதளங்களில் கூப்பாடு இட்டனர். உயிருடன் இருப்பவர்களின் படங்களை பிரசுரித்து அவர்கள் திரிணாமூல் கட்சியினரால் கொல்லப்பட்டதாக, பொய்ப்பெயருடன் செய்திகளை பரப்பினர். அப்படி அடையாளம் காணப்பட்டவர்கள் தாம் உயிருடன் இருப்பதாக அம்பலப்படுத்தினர். கடந்த வருடம் ஒரு தனிப்பட்ட மோதலில் ஒரு பெண் தாக்கப்பட்ட காணொலியை எடுத்து திரிணாமூல் கட்சியினர் பாஜகவை சேர்ந்த பெண்ணொருவரை அடிப்பதாக திரித்து வெளியிட்டனர். இந்துக்களின் பெரும் திரள் மமதாவின் கட்சியினரால் கொலைக்களத்துக்கு அனுப்படுவோம் எனும் அச்சத்தில் உள்ளதாக எழுதினர். இத்துடன் நிற்காமல் மத்திய அரசு இது சம்மந்தமாக மமதாவுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியது. ஆளுநர் எச்சரித்தார். பாஜகவின் நட்டா உடனே நிலைமையை பார்வையிட கிளம்பி சென்றார். பாஜக தோற்கடிக்கப்பட்டது, மமதாவை தேர்ந்தெடுத்த மக்கள் ஜியை நிராகரித்து விட்டார்கள் எனும் கதையாடலை மாற்றி எழுதத்தான் இந்த பராக்கிரம முயற்சிகள் அத்தனையும்.


ஆம், வன்முறை நடந்தது தான். அதில் திரிணாமூலின் பங்கும் உண்டு தான். ஆனால் பாஜக சித்தரிப்பது போல அம்மாநிலம் போர்க்களமாகவில்லை. பாதிக்கு மேல் பொய்ப்புரட்டுகள், போலி காணொளிகள், இல்லாதவர்களின் படங்களையும் கொண்டு தாம் இந்த போர்க்களத்தை பாஜக கட்டியெழுப்பியது. ஆனால் தில்லியில் இருந்து செய்யும் இந்த ஊடக அரசியலைக் கொண்டு மக்கள் மனத்தை வெல்ல முடியாது என ஏற்கனவே மே.வங்க மக்கள் நிரூபித்து விட்டார்கள். ஆனால் இம்முறை பாஜக மமதாவின் பிம்பத்தை குலைக்க முயன்றது வங்காளிகளிடம் அல்ல, மொத்த இந்தியர்களிடமுமே. இது நமக்கான ஆக்‌ஷன் படம். ‘ஜி தான் உங்களுடைய ஒரே சரணாகதி, வேறு மாற்றே இல்லை’ என அவர்கள் நம் தலையில் அடித்து சத்தியம் பண்ண விரும்புகிறார்கள். அதற்காக இல்லாதவர்கள் செத்துப் போனார்கள் என்றோ, தனிப்பட்ட பிரச்சனைகளில் அடிபட்ட பெண்கள் எல்லாம் தம் கட்சியினர் என்றோ பொய்ச்செய்தி பரப்பிட, வங்க மண்ணில் ரத்தம் சிந்தி, நெருப்பை பரப்பிட அவர்கள் தயங்க மாட்டார்கள். இந்த நாடே ஒரு பெரிய சினிமா ஸ்டுடியோ. பாகுபலி சினிமா செட். அங்கு நாளொரு படக்காட்சியை அரங்கேற்ற வேண்டும், அதுவே நிர்வாகம் என பாஜக நம்புகிறது. இந்திய வரலாற்றில் இப்படி ஒரு விசித்திரமான ரியாலிட்டி ஷோ கட்சி வேறு இருந்ததில்லை. எண்டமோள் புரொடெக்‌ஷன்ஸ் எல்லாம் உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டுமய்யா!


இவ்வளவும் நடந்து முடிய மமதா ஆட்சிக்கு வந்து ஒரு நாளே ஆகியிருந்தது.

கருத்துகள்

Ram இவ்வாறு கூறியுள்ளார்…
அபிலாஷ், அப்டியே ஆழி செந்தில்நாதனின் யூடியூப் காணொலி நல்ல விளக்கம் அளித்திருக்கிறார்.... பஜக தோல்வி பற்றி....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...