நாவல் எழுதும் கலையை சொல்லித் தரும் நூல்களில் என் பரிந்துரைகள் இவை. இந்த நூல்கள் பெரும்பாலும் ஒரே பாணியைத் தான் முன்வைக்கும் என்றாலும் ஒவ்வொன்றும் நாவல் வடிவின் ஒரு அம்சத்தை எடுத்து பிரதானப்படுத்திப் பேசுகின்றன. நாவல் கலையின் வரலாறு, சிறப்புகள், வகைமைகளைப் பேசுகிற நூல்களை விட எழுத்துத் தொழிலின் நுட்பங்களை, முறைமைகளைப் பேசுகிற நூல்களையே பிரதானப்படுத்தி இருக்கிறேன். நீங்கள் இந்த பட்டியலில் ராபர்ட் மெக்கீயின் Story போன்று திரைக்கதை எழுத்துக்கலை நூல்களையும் சேர்த்துக் கொள்ளலாம். சிட்பீல்டின் நூலை விட அது இலக்கியத்துக்கு தோதானது. திரைக்கதை நுணுக்கங்களை நாவலுக்கான காட்சி அமைப்பிலும், கதையை துவங்கும் விதத்திலும் எடுத்து நம் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். தமிழில் ரா.கி ரங்கராஜனின் "எப்படி கதை எழுதுவது?" மற்றும் பாக்கியராஜின் "வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம்" ஆகிய நூல்களையும் இணைத்துக் கொள்ளலாம்.
யுடியூபில் Ellen Brockஇன் சேனலைப் பார்க்கலாம். அதே போலத்தான் film courage சேனலில் உள்ள உரைகளும் பேட்டிகளும் சினிமா சார்ந்தவை என்றாலும் புனைவாசிரியர்களுக்கு உதவுபவை.
கீழே படங்களில் வரும் நூல்களை நான் கணிசமாக storytel செயலியில் "கேட்டிருக்கிறேன்'. அமைதியான இரவில் தூக்கம் வரும் வரை இந்த விவாதங்களைக் கேட்டுக் கொண்டு கிடப்பது எனக்குப் பிடித்த விசயங்களில் ஒன்று.










Comments